Header Ads



உலகின் உயரமான தேவாலயம், சிறுநீரால் அழிவடையும் ஆபத்து

ஜெர்மனியின் உல்ம் நகரில் இருக்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த உலகின் மிக உயரமான கிறிஸ்தவ தேவாலயம் அதனைச் சூழ சிறுநீர் கழிப்பதால் அழிவடையும் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளது.

சிறுநீர் உப்பு மற்றும் அமிலங்கள் காரணமாக அடித்தள கற்கள் அரிக்கப்பட்டு வருவதாக தேவாலயத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சிறுநீர் கழித்து சிக்கிக் கொள்பவர்களுக்கு நகர நிர்வாகம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் 100 யூரோ அபராதத்தை அறிவித்தபோதும் அதனை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

1377 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கும் உல்ம் தேவாலயம் 530 அடி உயரம் கொண்டதாகும். இந்த கட்டுமானத்தில் அண்மையில் அதிக செலவு கொண்ட திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.எனினும் தேவாலயத்தை சூழ உள்ள பகுதிகளில் மதுபானத் திருவிழாக்கள் மற்றும் கிறிஸ்மஸ் சந்தைகள் ஏற்பாடு செய்யப்படுவதோடு அதில் சிறுநீர் கழிப்பதற்கான வசதிகள் வழங்கப்படுவதில்லை.

எனவே விழாக்களில் பங்கேற்கும் ஆண்கள் தேவாலயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சிறுநீர் கழிப்பதாக தேவாலய பராமரிப்பு திணைக்கள தலைவர் மைக்கல் ஹில்பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.

566 அடி உயரம் கொண்ட பார்சிலோனா சக்ராடா பமிலியா தேவாலய கட்டுமானம் 2026 ஆம் ஆண்டு பூர்த்தியாகும்போது அது உலகின் உயர்ந்த தேவாலயமாக சாதனை படைக்க உள்ளது. 

2 comments:

  1. then what are they preaching in the church if they cant stop what happening around?

    ReplyDelete
    Replies
    1. Yes, their bark is worsened then their bite.

      Delete

Powered by Blogger.