Header Ads



குழந்தை பிறப்பதாக குறிக்கப்பட்ட, தினத்துக்குமுன் சத்திரசிகிச்சை - வைத்தியர்களுக்கு எதிராக முறைப்பாடு

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மூலமாகப் பிறந்த தனது ஆண் சிசு, வைத்தியர்களின் தவறின் காரணமாக உயிரிழந்துள்ளதாக குறித்த சிசுவின் தந்தை, கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

கட்டானை திசாகே வத்தைப் பிரதேசத்தில் வசிக்கும் ஜயந்த பிரியதர்ஸன என்பவரே இவ்வாறு முறையிட்டுள்ளார்.

சிசு பிறப்பதாகக் குறிக்கப்பட்ட தினத்துக்கு முன்னதாக சத்திரசிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாகவே சிசு உயிரிழந்துள்ளதாக, அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச, இது தொடர்பாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்குச் சென்று, ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டார்.

சிசுவின் பிரேத பரிசோதனையை, நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிலேயே மேற்கொண்டால் தனக்கு அசாதாரணம் ஏற்படும் என முறைப்பாட்டாளர் (தந்தை) தெரிவித்தார்.

இதன் காரணமாக, றாகமை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையை, மன்றில் சமர்ப்பிக்குமாறு, கட்டானைப் பொலிஸாருக்கு, நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

3 comments:

  1. குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் என்று எட்கேனவெ தெரிவிச்சி இருந்து இருந்தால் அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சை முன் பின் குறிப்பிட்ட தினங்களில் செய்தால் அது சாதாரண விடயமே இங்கு வைத்தியரை குற்றமாக கருத முடியாது.ஏன் இவ்வாறு குறிப்பிடுறேன் என்றால் சொந்த அனுபவத்தில் தான் எங்கள் குடும்பத்துக்கும் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பே வைத்தியரின் தாயின் நிலை பொறுத்து அறுவைசிகிச்சை செய்து குழந்தை பெற்றுக்கொண்டும்.

    ReplyDelete
  2. பல வருடங்களுக்கு முன், இதே நீர்கொழும்பு வைத்தியசாலையில், ஒரு நீரிழிவு நோயாளியின் காலை வெட்ட வேண்டிய தருணத்தில், வேறொரு நோயாளியின் காலை வெட்டி விட்டார்கள்.

    கால் துண்டாடப்பட்ட நோயாளி ஒரு முஸ்லீம் பெண் என்றபடியால், யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. எந்தவித நட்ட ஈடும் இல்லை.

    அந்த முஸ்லீம் பெண் தற்போது உயிருடன் இல்லை.

    ReplyDelete
  3. இவ்வைத்தியசாலை 2005 - 2009 காலப்பகுதியில் சிறந்த முறையில் முகாமைப் படுத்தப்பட்டது. ஆனால் பின்னர் சோம்பேறித்தனமும் பொடுபோக்குத் தன்மையும் இனத்துவேசத்தை வௌிப்படுத்தும் தன்மையும் கொண்டவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டது. இத்தன்மைகள் இங்குள்ள வைத்தியர்களையும் தாதியர்களையும் கூட ஆட்கொண்டுள்ளது. குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது நான் ஊகிக்கும் வாட்டிலாயிருக்குமாயின் பாதிக்கப்ட்டவரின் குற்றச்சாட்டில் அனேகமாக நியாயம் இருக்கும் என்று கருதுகிறேன்.

    ReplyDelete

Powered by Blogger.