Header Ads



விமுக்தி குமாரதுங்க வருவாரா..?

இலங்கையின் அரசியல் தளத்தில் தற்போது பல்வேறு மாற்றங்கள், புது அரசியல் பிரவேசங்கள் இடம்பெற்று வருகிறது.

அதற்மைகய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் விமுக்தி அரசியலில் ஈடுபடவுள்ளார்.

வெளிநாட்டில் வாழ்ந்து வரும் விமுக்தி விரைவில், இலங்கையில் குடியேறவுள்ளதாக குறித்து ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மகனை அரசியலில் ஈடுபடுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு பல்வேறு தரப்பினரால் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கமைய இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது.

விமுக்தி குமாரதுங்கவுக்கு பண்டாரநாயக்கவின் பாரம்பரியம் உள்ளமையினால் அவர் அரசியலில் ஈடுபடத் தீர்மானம் மேற்கொண்டுள்ளார். எப்படியிருப்பினும் அவரது தாத்தா, பாட்டி, அம்மா ஆகியோர் அரசியலில் இருந்தமையினால் அவருக்கும் அந்த பாரம்பரிய காணப்படும் என கூறப்படுகின்றது.

தற்போது பிரித்தானியாவில் கால்நடை சிறப்பு நிபுணராக விமுக்தி செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் இலங்கையில் மிருகங்களுக்காக வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்கும் எதிர்பார்ப்பில், விமுக்தி இலங்கை வரவுள்ளார் என பண்டாரநாயக்க தரப்பு தகவலுக்கு அமைய குறித்து ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

விமுக்தியை அரசியலில் ஈடுபடுத்துமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அதற்கு சந்திரிக்காவிடம் இருந்து சிறப்பான பதில் ஒன்று வழங்கப்படவில்லை. எனினும் பலரின் கோரிக்கையின் காரணமாக தற்போது சந்திரிக்காவும் சாதகமான பதில் வழங்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அரசியலில் ஈடுபட்ட காலப்பகுதியில் விமுக்தி மற்றும் அவரது சகோதரி யஷோதரா ஆகியோர் அரசியலை விரும்பில்லை எனவும் அதற்கு சில காரணங்களும் கூறப்படுகின்றது.

அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக இருந்த போதிலும் மோசடி குற்றச்சாட்டுகள் சந்திரிக்கா மீது சுமத்தப்படவில்லை. அவர் தனது சொந்த உடமைகளை கூட விற்பனை செய்து தேர்தல் காலங்களில் செயற்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை விமுக்தி குமாரதுங்க அரசியல் பிரவேசம் முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

சமகால ஜனாதிபதியின் மகள் மற்றும் மகன் அரசியல் பிரவேசத்தை இலக்காக வைத்து பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டாலும், எதிர்கால ஜனாதிபதி ஆகும் கனவில் உள்ளார்.

இந்நிலையில் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் மகனின் அரசியல் பிரவேசம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.