Header Ads



விக்னேஸ்வரன் தலையிடத் தேவையில்லை - ரணில்

புதிய அரசியலமைப்பு குறித்து யார் என்ன சொன்னாலும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணியில் நாடாளுமன்றம் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில, இணைந்த எதிரணியின்  தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் என்ன கூறினாலும் அல்லது வேறு எவறேனும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டாலும், இந்த அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

'அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணயக்குழுவும் அரசியல் சட்டசபையும் உள்ளதால், முதலமைச்சர் இதில் தலையிடத் தேவையில்லை. இந்தக்குழுவின் மூலம் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய அதேவேளை, ஆதரவும் கிடைத்தது. அதனால், நாம் எமது பணியை செய்வோம்' என்று கூறியுள்ளார்.

ஆனால், இது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளல் அனைவருக்கும் நல்லதாகும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

2 comments:

  1. இந்த சின்ன நாட்டை பராமரிக்க என்ன பாடு படுறாங்கள்,இவர்கள் எல்லாம் முட்டாள் கழுதைகள் என்று தான் சொல்ல வேண்டும்.

    வடக்கை தாமுளங்களுக்கு கொடுங்கடா,கிழக்கை துலுக்கனுக்கு கொடுங்கடா,தெட்கு பெத்தாக்கும் மத்திய மேல் மாகாணத்தை சிங்களவனுக்கு கொடுத்து நீங்க நீங்க உங்கட வேலையை செய்யுங்கடா!

    ReplyDelete
  2. Ranil has already told in India that Tamil Racist Vicky is a dirty liar.

    ReplyDelete

Powered by Blogger.