Header Ads



வடக்கு கிழக்கை இணைத்து, சம்பந்தனை முதலமைச்சராக்க அமெரிக்கா திட்டம் - வாசுதேவ

அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு வடக்கு முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரனின் குரலில் செயற்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இந்த குற்றச்சாட்டினை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார முன்வைத்துள்ளார்.

வடக்கு கிழக்கை இணைத்து சம்பந்தனை முதலமைச்சர் ஆக்குவதற்கு அமெரிக்கா செயற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவு சீ.வி. விக்னேஸ்வரனின் குரலில் செயற்பட்டு வருகின்றது.

தற்போது தென் இலங்கை மற்றும் ஏனைய இடங்களிலும் விக்னேஸ்வரன் தொடர்பிலேயே பேசப்படுகின்றது. ஆனால் சம்பந்தனோ நல்லவர் போல சித்தரித்து காட்டப்படுகின்றார் என தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறு வடக்கு கிழக்கை இணைத்து சம்பந்தனை முதல்வராக்கும் திட்டத்தை அமெரிக்கா முன்னின்று செயற்படுவதாகவும் வாசுதேவ நாணயக்கார குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 comments:

  1. Then national list will be given to Hakeem?

    ReplyDelete
  2. சம்பந்தியை விட்டுக்கொடுக்காத சம்பந்தி எப்படி சம்மந்தன் அவர்கள் பக்கம் கத்தியை திருப்புறான். புரிகிறதா எழுக தமிழ் யாரால் யாருக்காக என்று

    ReplyDelete
    Replies
    1. விக்கியைவிட சம்பந்தனே வடகிழக்கு இணைப்பைஅதிகம் வலியுறுத்துபவர்.

      Delete
    2. வட கிழக்கு இணைப்பு என்கிற விடயத்தை தாண்டி ஒரு சிறந்த மனிதராக பண்பான நெகிழ்வு போக்குடைய தலைவராக சம்பந்தன் ஐயாவை பிடிக்கும். கொள்கையில் வேறுபடுவதால் தமிழர்கள் அனைவரும் நமக்கு எதிரானவர்களாகிவிடாது. நாம் பிரபாகரனின் இன வெறி சிந்தனையில் ஊறிய மண்ணாசை பிடித்த வெறியர்களையே எதிர்க்கின்றோம்.

      Delete
    3. வடகிழக்கில் 75%நிலம் தமிழருடையது தமிழர் நிலத்தை தமிழர் கோரினால் மண் ஆசையாம்.

      Delete
  3. உண்மைதான் IR MS br.

    ReplyDelete
  4. Heta anidda merenna inna wasudeewa mokatada ane jathiwadayak.taman mona jathiyada kiyala hariyatama dannawada? Demala manussayata duwa bandala deela duwata wiruddawa katayutu karanawa neda? Wede kethai.

    ReplyDelete
  5. When Vasu Deva with Ex President Chandrika he was Supporting Federal system now he is against merging north and east. Politics is playing he seems honest but we can see his real face.
    By the way I am not supporting north east merge.

    ReplyDelete

Powered by Blogger.