Header Ads



இந்தியா - பாகிஸ்தான் போர் ஏற்பட்டால், முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்..?

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் முஸ்லிம்கள் யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்..?

PJ பதில் :

இதுபோன்ற பிரச்சனைகளில் முடிவெடுக்க இஸ்லாம் கூறும் பொதுவான ஒரு அடிப்படையை நாம் விளங்கிக் கொள்வது அவசியம். எந்த ஒரு விவகாரமானாலும் அதில் நியாய அநியாயங்களைக் கவனத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.

ஒருவன் முஸ்லிமாக இருந்து கொண்டு அநியாயம் செய்தால் அவன் முஸ்லிம் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறவில்லை. இறை மறுப்பாளனாக இருக்கும் ஒருவன் அநீதி இழைக்கப்பட்டால் அவன் இறை மறுப்பாளன் என்பதற்காக அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டக்கூடாது என்றும் இஸ்லாம் கூறவில்லை.

பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதும் அநியாயம் செய்தவன் யாராக இருந்தாலும் அவனைக் கண்டிப்பதும் தான் நேர்மையானது. இதுப்போன்ற விஷயங்களில் இஸ்லாம் நீதத்தைத் தவிர மதத்தைப் பார்ப்பதில்லை.

இஸ்லாம் அல்லாத வேறு கொள்கையில் இருப்பவர்கள் விஷயத்தில் நீதம் தவறக்கூடாது என்று குர்ஆன் கூறுகின்றது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!  நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் -5:8)

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்பட்டால் நாம் யாருக்கு ஆதரவு அளிப்பது என்ற கேள்விக்கு இப்போது வருவோம்.

அப்படியொரு சூழல் வந்தால் யாரிடம் நியாயம் இருக்கின்றதோ அவர்களை ஆதரிப்போம். அக்கிரமக்காரர்களைப் புறக்கணிப்போம். இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுகோலின் அடிப்படையிலேயே நாம் முடிவெடுப்போம். பாகிஸ்தானைப் பொறுத்தவரை அது பெயரளவில் தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கே இஸ்லாமிய ஆட்சியோ அதை ஆளக்கூடியவர்களிடம் இஸ்லாமோ இல்லை.

உலக ஆதாயத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு அமெரிக்காவின் கைகூலிகளாக செயல்படுகிறார்கள். நாட்டின் நிர்வாகத் துறையில் இந்தியாவை விட மிக மோசமான நிலையிலேயே பாகிஸ்தான் உள்ளது.

ஒரு வாதத்துக்காக முஸ்லிம் நாடு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் காரணத்துக்காக அதை ஆதரிக்க முடியாது. ஒருவன் முஸ்லிமாக இருப்பதுடன் அவனுடைய செயல்பாடுகள் முயற்சிகள் இஸ்லாத்திற்காக இருந்தால் தான் அவற்றை ஆதரிக்க முடியும். அவனது செயல்பாடுகள் சுயலாபத்திற்காக இருந்தால் அல்லது தேவையற்றதாக இருந்தால் அதற்கு இஸ்லாமிய சாயத்தைப் பூசி ஆதரிக்க வேண்டியதில்லை.

ஒரு முஸ்லிம் அமெரிக்க குடிமகனாக இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்கக் குடிமகன் என்பதற்காக அமெரிக்காவின் அத்துமீறல்களை ஆதரிக்கக் கூடாது. அமெரிக்கா செய்யும் நல்ல காரியங்கள் ஏதாவது இருந்தால் அதை மட்டும் தான் ஆதரிக்கலாமே தவிர அநியாயத்தை ஆதரிக்க முடியாது.

அந்த அடிப்படையில் இந்தியாவின் நடவடிக்கை அநியாயமாக இருந்தால் அந்த அநியாயத்தை எதிர்க்கும் கடமை முஸ்லிம்களுக்கு உள்ளது.

அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் போர் நடந்து நியாய அநியாயங்கள் அடிப்படையில் முடிவெடுக்க முடியாத நிலை இருந்தால், அப்போது நாம் இந்தியாவின் பக்கம் தான் இருக்க வேண்டும்.

ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளான்.

அந்த அடிப்படையில் பாகிஸ்தான் நமது நாட்டின் மீது படை எடுக்கும் போது நாமும் நமது மக்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நமது நாட்டின் பக்கம் தான் நிற்க வேண்டும்.

20 comments:

  1. Muthalil ivana thukil poduka mulu pakistan makkalium muslim illai enkiran

    ReplyDelete
    Replies
    1. அவர் மக்களை சொல்ல வில்லை மாறாக ஆட்சி செய்பவர்களை கூறுகிறார் பீஜெ மேல் உள்ள கண்மூடித்தனமான வெறுப்பு தான் இவ்வாறான அவசர அறிக்கைக்கு காரணம்.

      Delete
  2. Both are criminals in this case (India &Pakistsn). Both are occupied the land of Kashmir. So, as we are Muslims should not support any of them accept Kashmiri people's. We will pray for the innocent people's of the world whoever facing difficulties by the occupation & injustice.

    ReplyDelete
  3. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் -5:8)
    பாகிஸ்தான் படை எடுப்பதாக சொல்ல வில்லை இந்தியா தாக்கினால் பதிலடி கொடுப்போம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்..இவ்வளவு சுத்தி வளைக்காமல் இந்தியாவைதான் ஆதரிப்போம் என்று சொல்லி இருக்கலாம்...

    ReplyDelete
  4. நீதி அநீதி என்பது சரியான அளவுகோல்தான், ஆனால் அதை தீர்மானிக்க இயலாத போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆட்சியாளர்கள் ஓரணியிலும்,இஸ்லாம் என்ற ஓர் அடிப்படை காரணத்திற்காகவே எதிர்த்து நிற்கும் இஸ்லாமல்லாத ஆட்சியாளர்கள் இன்னொரு அணியிலும் நிற்கும் போது குடும்பம் என்ற காரணத்தைக் காட்டி இஸ்லாத்திற்கெதிரான ஆட்சியாளர்களின் அணிக்கு ஆதரவளிப்பது எந்தளவுக்கு பொருத்தம் என்பது சிந்திக்கப்பட வேண்டியது.பங்ளாதேஷ் உலமாக்கள் அந்நாடு பாகிஸ்தானிலிருந்து பிரிய முட்பட்ட போது அது இஸ்லாத்துடைய நலன்களுக்கு எதிரானது எனக் கருதி அதற்கு எதிர்பானவர்களாக இருந்தனர்.

    ReplyDelete
  5. serk help from Allah to take a decision, if it is a fight I would say don't support both of them because you don't know who is right and who is wrong, all of them are liers. Our prophet has told the sign of the last days then take a decision on that time.

    ReplyDelete
  6. சகோதரர் ஜைனுல் ஆபிதீன்அ வர்களோ நீங்கள் இந்தியா ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பது என்றால் காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை 92 ஆயிரம் பேர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆயிரம் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு 22 ஆயிரம் விதவைகள் உள்ளார்கள் லட்சக்கணக்கான குழந்தைகள் அநாதையாக உள்ளார்கள் இதட்கு உங்கள் பதில் என்ன ?

    உங்கள் இந்த பதிவின் வெளிப்பாடு இந்தியாவுக்கு ஆதரவு பாக்கிஸ்தான் முஸ்லீம் இல்லை ஆதலால் அவர்களை கொல்வது குற்றம் இல்லை



    ரஸ}ல்(ஸல்) “ முஸ்லிம்களில் இருவர் போராடுவதற்காக எதிர்கொண்டு ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டால் கொலை செய்தவரும், கொல்லப்பட்டவரும் நரகத்தையே சென்றடைவர்.” என்றார்கள். அதற்கு ஸஹாபிகள் கேட்டார்கள் “ அல்லாஹ்வின் து}தரே! நரகம் கொன்றவக்கென்றால் சரி, ஏன் கொல்லப்பட்டவருக்கும் நரகம்” என வினவினார்கள். நபி(ஸல்) சொன்னார்கள். “ அவரிடம் தனது தோழரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” என்றார்கள்.

    “ ஓர் முஸ்லிமை களங்கப்படுத்துவது அத்துமீறலாகும். அவருடன் போராடுவது நிராகரிப்பாகும்.” (புஹாரி, முஸ்லிம்)

    இதன் அர்த்தம் என்னை விட உங்களுக்கு நன்றாக புரியும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  7. This is an another prove that PJ and his Jamath are working for indian RAW in order to weaken Muslims in the subcontinent.

    ReplyDelete
  8. காஷ்மீரை பொறுத்தவரை அங்கு நடப்பது தேவையில்லாத பிரச்னை. இந்தியா சிறப்பாக செயல்படும் நீதித்துறை கொண்ட ஒரு ஜனநாயக நாடு. காஷ்மீர் மக்கள் ,இந்திய ஒருமைப்பாட்டுக்குள் , இந்தியாவின் இறைமைக்குள் இருந்து கொண்டு தங்களை தாங்களே நிர்வாகம் செய்ய தேவையான ஏற்பாடுகள் இந்திய அரசியல் யாப்பிலே உள்ளன. சமஷ்ட்டி ஆட்சி முறை கொண்ட இந்தியாவில் காஷ்மீர் மக்கள் தனி நாடு கேட்பது முட்டாள் தனமான பிடிவாதம். பிரிவினை வாதத்தை கை விட்டு சமாதான சக வாழ்வுக்கு அவர்கள் முன்வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. @Yazir, your point seems correct.

      Delete
    2. Yasir! You read my previous comment FYI. Kashmir is not belongs to inda Or Pakistan. It's separate country since beginning that's what Kashmir propels requesting. It's not an unnecessary problem for them. Try to change your attitude.

      Delete
    3. Brother..
      Kashmir must be given autonomy from the clutch of nefarious Indian troops. BJP and RSS are killing dozens of Muslims in that land.

      Delete
    4. இதில் காமடி என்னவென்றால்.. இலங்கைக்குள் தனி நாடு கேட்கும் Ajan, யாசிரின் கூற்றை சரி கண்டது தான்.

      Delete
  9. கேஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நசிய காரணம் இரு நாட்டு அரசாங்கம் செய்யும் தவறுதான் குறைந்த பட்சம் பாகிஸ்தான் முஸ்லிம் நாடு என்ற வகையில் கேஷ்மீர் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில்,ஏற்க்கனவே இருக்கும் ஐநா வின் ஒப்பந்தப்படி கேஷ்மீர் மக்கள் விரும்பும் வகையில் பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் பகுதியை விட்டுக்கொடுக்க இணக்கம் தெரிவித்தால் இந்தியாவின் பிடியில் இருக்கும் பகுதியை கொடுக்குமாறு சர்வதேசம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும்.
    அடுத்தது பாகிஸ்த்தானில் எந்தக்கட்சி அரசாங்கம் அமைத்தாலும் ஏதாவது பயங்கரவாத அமைப்பின் அனுசரணையுடன்தான் ஆட்சி செய்கின்றது.பயங்கர வாதத்தின் தலைமை பீடமாக பாகிஸ்த்தான் திகள்கிறது.இதில் பொது மக்களை குறை கூற முடியாது அரசாங்கம் விடும் பிழைதான் இது.

    ReplyDelete
  10. இந்தியாவுக்கு பாகிஸ்தான் மீதான பகைமைக்கு அடிப்படைக் காரணம் அது இஸ்லாத்தை காரணம் காட்டி தன்னிலிருந்து பிரிந்தமைதான்.(இஸ்லாமிய நலன்களை பேண முடியாதெனக் கண்டு இந்தியாவிலிருந்து பிரிந்தமை.)ஒருவர் எதற்காகவும் இஸ்லாத்தை தியாகம் செய்ய முடியாது. ஆனால் இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்யலாம். இஸ்லாத்திற்காக துாக்கிலிடப்பட்ட செய்யித் குதுாப்பின் இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள் என்ற நுாலை வாசித்தால் இது தொடர்பான விளக்கங்கள் கிடைக்கும்.

    ReplyDelete
  11. இந்திய ஆட்சியாளர்கள் பாகிஸ்தானை வெறுக்க காரணம் அது இஸ்லாமிய நாாடு என்பது ஆகும்

    அந்த காரணங்களுக்காக எதிர்கும் இந்திய ஆட்சியாளர்களு உங்கள் கண் மூடித்தனமான தேச பக்தியை காட்டி இந்திய இஸ்லாமிய எதிரிகளான ஆட்சியாளர்களுக்கு இந்திய முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிப்பதை உலக முஸ்லிம்கள் வண்மையாக கண்டிக்கிறோம்

    ReplyDelete
  12. Brother....
    It's not fair to castigate a person individually.
    Try to write smart and emphasize the unity of Muslims in your suggestions.
    Unity is of paramount importance to Muslims.

    ReplyDelete
  13. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் பாகிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் காஷ்மீர் மக்கள் தனி நாடு கேட்டு எந்த போராட்டமும் செய்யவில்லை. எல்லா சண்டைகளும் இந்திய எல்லைக்குள் இருக்கும் காஷ்மீரில்தான். எனினும் பாக்கிஸ்தான் எல்லைக்குள் இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு உள்ள அதே மத சுதந்திரம் இந்திய எல்லைக்குள் இருக்கும் காஷ்மீர் மக்களுக்கும் உள்ளது. இந்தியா இந்து மத சகோதரர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடாக இருந்த போதிலும் அது ஒரு "மதச்சார்பற்ற" நாடு என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  14. Mr. Yasir (may be you are fake)... your comment itself has the clear answer that Kasmir people who live in Pakistan entertain all rights and live peacefully, but indian kasmir people only have suffer or fight....yes of course it is because of india's racism and double standard! because of india's anti-muslim policy, and massacre of innocent kasmir muslims!!

    ReplyDelete
  15. I’m not fake. நான் சொல்வதெல்லாம் ஒன்று தான். இந்து என்பதால் எதிர்ப்பதோ முஸ்லீம் என்பதால் ஆதரிப்பதோ எனது நிலைப்பாடு அல்ல. உண்மையையும், நியாயத்தையும், நடைமுறைச் சாத்தியமானவற்றையும் மதம் என்கிற எல்லைகளைக் கடந்து நாம் சிந்திக்கவும் பேசவும் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.