Header Ads



புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட, வலம்புரி கப்பல் கண்டுபிடிப்பு (படங்கள்)




புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையின் வலம்புரி என்ற கப்பலின் சிதைவுகள், சிறிலங்கா கடற்படை சுழியோடிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பருத்தித்துறைக்கு வடக்கே 8 கடல் மைல் தொலைவில், 15 மீற்றர் ஆழத்தில் இந்தச் சிதைவுகள் நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டன.

சுழியோடியான பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே வலம்புரி கப்பலின் சிதைவுகளை சிறிலங்கா கடற்படை சுழியோடிகள் கண்டுபிடித்தனர்.

சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான வலம்புரி என்ற துருப்புக்காவி கப்பல், 1998ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் நாள், திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறைக்குச் சென்று கொண்டிருந்த போது கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் 20 சிறிலங்கா கடற்படையினர் பலியாகினர். கடற் கொந்தளிப்பு மற்றும் பாதுகாப்பு நிலைமைகளால் அப்போது இந்தக் கப்பலை மீட்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

18 ஆண்டுகளாக கடலுக்கு அடியில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் கப்பலின் ஐந்தில் ஒரு பகுதி கடலுக்கு அடியில் உள்ள மண்ணில் புதையுண்டு போயுள்ளது.

கப்பலின் சிதைவுகளைச் சுற்றி கடல் தாவரங்கள் வளர்ந்திருக்கும் நிலையில், மீன்களின் வாழ்விடமாகவும், அது மாறியுள்ளது.



1 comment:

  1. இலங்கை பொருளாதாரத்தை சீரழித்த தமிழ் தீவிரவாதிகள் இன்னும் ஒருசிலர் ஆதரித்து அவர்கள் செய்தது சரியென்று இன்னும் வாதாடுகிறார்கள்.தமிழர்களின் அழிவுக்கு முழு காரணகழுத்தறிகள் பிரபாகரன் என்னும் பைத்தியக்காரன் அவனால் தான் மக்களின் உயிர் உடமை பொருளாதாரம் அழிக்கப்பட்டன.
    இந்த கொடிய யுத்தம் இல்லாமல் இருந்தால் நாட்டில் இவ்வளவு அதிகம் பொருளாதாரம் விலை வாசிகள் உயர்ந்து இருக்காது.முன்பு ரயிலில் , பஸ்ஸில் பயணிக்க முடியாது ஏன் விமான நிலையத்தை கூட தாக்கினார்கள் அதன் கஷ்ட நஷ்டங்கள் யாரு பொறுப்பெடுப்பார்கள்?இந்த படத்தில் இருக்கும் யுத்த கப்பல் அந்த காலத்தில் எவ்வளவு பெருமதியானது இதன் இழப்பு பலகோடி அரசாங்க பண இழப்பு நேரடியாக தாக்கம் கொள்ளப்படுகிறது இலங்கை பொருளாதாரத்துக்கு.

    ReplyDelete

Powered by Blogger.