October 07, 2016

சுதந்திரம் பறிக்கப்பட்ட 'கூண்டுக்கிளிகள்'

-Muja ashraff-

எமது நாட்டில் கல்வியியல் ரீதியாக உதித்த சீர்திருத்த திட்டங்களில் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் மாணவர்களின் நலன்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட திட்டமே இது

ஆரம்ப காலங்களில் இதன் வளர்ச்சி வேகமும் அதன்பால் கொண்ட ஈடுபாடும் சற்று குறைவாக காணப்படினும் பிற்பட்ட காலங்களில் இதன் தன்மை சிறிது சிறிதாக மாற்றம் பெற்று மாணவர்களை வைத்து தமது திறமையினை நிறூபிக்கும் பரீட்சையாக ஆசான்கள் மத்தியிலும் பெற்றோர்களின் மத்தியிலும் மாற்றம்பெறத் தொடங்கியது

அதன் விளைவு சுதந்திரமாக திரிந்த மலர்கள் சுயலாபத்திற்காக நசுக்கப்பட்டன, விளையாடித்திரிந்த கால்கள் கல்வியின்பால் ஓய்வின்றி ஓட ஆரம்பித்தன, சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய திறன்கள் பறிக்கப்பட்டு மூளையினை மனப்பாடமெனும் கறையான்கள் அரிக்கத்தொடங்கின, உறவுகளோடு மனம்விட்டுப்பேச வார்தைகளிருந்தும் நேரமின்றிய தவிப்பில் உதடுகள் வறண்டு போயின, சுமக்க முடியாத பாரங்களை கொண்ட புத்தகப்பொதிகளை சுமந்த தோல்களோ வலியின்றி மறத்துப்போயிண, அரவனைக்கவேண்டிய கைகளின் அதட்டல்களினால் அலை மோதித் திரியும் நிகழ்வுகள் பரவலாக இடம்பெற ஆரம்பித்தன.

அதன் பிற்பாடுள்ள நிலமைகளாக அதிக மனவழுத்தம், சரியான தூக்கமின்மை, சமூகத்தொடர்புகள் இன்றி தனித்துவிடப்படுகின்றமை, சக மாணவர்களுக்கு மத்தியில் தனது திறமையினை நிரூபிக்கவேண்டிய நிர்பந்த நிலை, வகுப்பிலே சில மாணவர்களை ஆசான்கள் உயர்த்திப்பேசும் போது படிப்பின் மீதான வெறுப்பு, தவணை பரீட்சையிலே சரியான புள்ளிகள் எடுக்காதவிடத்து பெற்றோர்களின் கண்டிப்பென பல்வேறுவகையான உளவியல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் அவல நிலை முடிவில்லா தொடர்கதையாகிப்போய்விடுகின்றது.

ஓர் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றது கூண்டுக்குள்  அடைபட்ட கிளிகளை போல் அவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன ஏணொ தெரியவில்லை இது தொடர்பான அடிப்படை அறிவு கூட இல்லாத அல்லது தெரிந்தும் மறந்து வாழ்கின்ற  ஓர் சமூகமாகவே நாம் இருந்து கொண்டிருக்கிறோம் நமது நோக்கம் என்னவெனில் அவர்கள் என்னவழிப்பட்டாவது பரீட்சையில் சிறந்த பெறுபேறு எடுத்து விட்டால் போதும் என்பதே ஏணனில் நாம் படித்தவர்கள் அதனால் எமது சுய கௌரவம் என்னாவது என்ற ego தொடர்கதையாகிப் போணதன் விளைவுகளே இது.

இதன் பாதிப்புகளை யாழ்பாணம், மற்றும் இதர பகுதிகளில் உள்ள குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை கசக்கிப்பிழியும் தார்ப்பெறிய நிலையினூடாக மேலும் கண்டு கொள்ள முடியும். இன்று பரீட்சையில் சித்திபெற்ற பிள்ளையின் நாளைய உளவியல் ரீதியான பாதிப்புகளை உணர்வதுமில்லை அவை தொடர்பாக சிந்திக்க மனம் இடம்கொடுப்பதுமில்லை இதன் பிற்பாடு உங்கள் மத்தியில் பல கேள்விகள் எழலாம் நாம் அவர்களுக்கு என்ன செய்யவில்லையென்று, படிப்பது மட்டும்தானே அவர்களின் வேலையன்று..?

ஒருவருடைய சுதந்திரத்தை பறித்து விட்டு அவருக்கு ஆடைகள், சைக்கிள்கள், உணவுகள், ஆடம்பரப்பொருட்கள் வாங்கிக்கொடுப்பதினால் என்ன பலன் இருக்கப் போகிண்றது இதே போண்ற ஒரு நிலை உங்களுடைய வாழ்வில் ஏற்பட்டால் உங்கள் மனம் ஜீரணிக்குமா? என்பதை அவர்களின் வயதில் நின்று உணர்ந்து பாருங்கள் அப்போது புரிந்துகொள்வீர்கள் 
உணர்ச்சிகளையும் சுதந்திரங்களையும் கடன் வாங்கவும் முடியாது கடன் கொடுக்கவும் முடியாதென்பதை

இதை உணரும் காலம் வரும்போது  அந்த பிள்ளைகளின் கல்வியியல் ரீதியான முன்னேற்ற பாதை எங்கும் கரைபடிந்திருக்கும், கனவுகள் சிதைக்கப்பட்டு அதன் வலிகளும், ஓலங்களும் உங்கள் வாழ்க்கை பயணத்தின் வடுக்களாக எஞ்சியிருக்கும், கட்டுக்குள் இருந்த பிள்ளைகள் கட்டுப்பாட்டை இழந்து உங்களை கட்டுப்படுத்திக்கொண்டிருப்பார்கள், சமூகத்தில் சுய கௌரவத்தை பாதுகாக்க கடுமையாக போராடிக்கொண்டிருப்பீர்கள், வெளியில் பிள்ளைகளை பற்றி உயர்வாக பேசித்திரிந்த நாவுகள் வார்த்தைகளின்றி வரண்டுபோயிருக்கும், முக்கியமான கூட்டத்தொடரில் முக்கியஸ்தராக கலந்து கொண்டிருப்பீர்கள் ஆனால் பிள்ளைகளின் விடயத்தில் முடிவெடுக்க திறானியற்றவர்களாக மூளைகளில் முடங்கிப்போயிருப்பீர்கள்.

மறுபுறம் சுதந்திரம் ஒன்றே போதும் என்ற மனோநிலையில் இருக்கும்
பிள்ளைகளோ அதற்காக எதையும் இழக்கவும், துரக்கவும் தயாராகி இருப்பர், திறமையிருந்தும் இலக்கினை அடைய முடியாதவர்களாக மனம்போண போக்கில் வாழப்பழகியிருப்பர்,நல்ல விடயங்களை எடுத்துக்கூறும் போது அது நம்மை கட்டுப்படுத்தவே என்ற மணோ நிலையில் அதை என்னவழிப்பட்டாவது நீர்ந்து போகக் கூடிய முகாந்திரங்களை கூட உருவாக்கி வைத்திருப்பர்.

இதுபோண்ற விடயங்களினால் எதிர்காலம் பாழடிக்கப்பட்டு இருண்ட யுகத்தினை நோக்கி ஓர் இளைய சமூகம் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்வினை பார்க்கும் நீங்களோ நிம்மதியிழந்து குற்ற உணர்ச்சியால் மனதோரமாய் துடிதுடித்து கொண்டிருப்பீர்கள். 

குற்றத்தால் சிறைசென்றவர்களை விட குற்ற உணர்சியால் மனமெனும் சிறையில் அடைபட்டு உயிரிருந்தும் நடைபினங்களாக சுற்றித்திரியும் அவலநிலையே இவ்வுலகின் மிகப்பெரியதும் வார்த்தைகளினால் வர்ணிக்க முடியாததுமான தண்டனையாகும் அனுபவிப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள் இஸ்லாம் தற்கொலைக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்திருப்பின் இவர்களல்லாம் எப்போதோ மடிந்துபோய்யிருப்பார்கள் 

ஆகவே அன்புள்ளம் கொண்ட ஆசான்களே, பெற்றோர்களே பிள்ளைகளை அவர்களின் சுதந்திரமான உலகில் விட்டுவிடுங்கள் அவர்களின் மீது அதிக அழுத்தங்களை பிரயோகிப்பதை விடுத்து முடியுமானதை செய்ய ஊக்கமளியுங்கள், அவர்கள் விரும்பும் துறைகளின்பால் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி அந்த பிள்ளைகளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தும் செயற்திட்டங்ளை முன்வையுங்கள் 

உங்கள் திறமைகளையும், கௌரவத்தையும் பாதுகாக்கும் பரீட்சையாக அதனை மாற்றுவதை தவிர்த்து அந்த பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுதந்திர உள்ளம் கொண்ட பரீட்சையாக மாற்றிக் காட்டுங்கள் அதுவே  எதிர்காலத்தை நோக்கிய சிறந்ததும் உண்மையானதுமான வெற்றியுமாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment