Header Ads



பிரான்சில் தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டு படுகொலை

பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் 16.10.2016 அதிகாலை  தமிழ் இளைஞர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். . இந்தச் சம்பவத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு வீட்டில் நடந்து கொண்டிருந்த கொண்டாட்டம் ஒன்றில், அதிகாலை மூன்று மணியளவில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள தமிழ்ர், கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு சிறீலங்காச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

‘என்ன நடந்தது என்று இன்னமும் முழுமையான விபரங்கள் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளது, மோதல்கள் நடந்ததற்கான அடையாளங்கள் வீடுகள் எங்கும் காணப்படுகின்றன.

தொலைக்காட்சி உடைக்கப்பட்டுள்ளது, சுவர்களில் குத்து உடைவுகள் ஏற்பட்டள்ளன’ எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளளனர்.

வீட்டின் கீழ் மாடியில் இருந்த ஒரு இளைஞனே, காவற்துறையினர்க்குத் தகவல் தெரிவித்துள்ளார். பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், காவற்துறையினர் உடனடியாகக் கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

4 comments:

  1. இவங்களுக்கு இன்னும் ஈழம் மட்டும் கிடைத்து இருந்தால் இன்னும் வெட்டி குத்தி கொண்டு இருப்பார்கள்.இவர்கள் என்ன செய்றவென்று Paris London சென்று பார்த்தால் விளங்கும்.
    தமிழர்கள் யாழ்பாணத்தையும் விட கனடா,பாரிஸ்,லண்டனில் வாழுறார்கள் அவர்கள் அங்கே அவர்களுக்கு என்று ஈழம் கேட்டு வாழ முடியும் தானே, ஏன் இலங்கையில் மட்டும் ஈழத்தை கேட்டு சண்டை பிடிக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இது தனிப்பட்ட பிரட்சனை போல தோண்றுகிறது, இதற்காக உணர்வுகளை உந்தும்வகயில் கருத்திடுதலை
      தவிர்ப்பது சிறப்பு?

      Delete
  2. நன்றி உங்களை போன்ற மனப்பான்மை உள்ளவர்கள் தான் இலங்கை முன்னேற்றத்திற்கு தேவை வாழ்துக்கள்

    ReplyDelete
  3. ஒருவேளை ஈழம் கிடைத்திருந்தால் எல்லோரும் ஒழுங்காகத்தான் இருந்திருப்பார்கள். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் ஐஸ் பயங்கரவாத தேசத்தில் நடப்பது போன்று இருந்திருக்காது.

    ReplyDelete

Powered by Blogger.