Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் மகனுக்கு, மதம் பிடித்துள்ளது - விமல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாஹாமுக்கு மதம் பிடித்துள்ளதாகவும், அவர் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை அடித்து நொருக்கியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தாஹாம் பொடியனுக்கு மதம் ஏறியுள்ளது. கிளப் ஒன்றை அடித்து நொருக்கியுள்ளார். தாஹாம் சிறிசேன ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருடன் சென்று இரவு நேர களியாட்டு விடுதியை தாக்கியுள்ளார்.

நாமல் ராஜபக்ச மற்றும் யோஷித்த ராஜபக்ச ஆகியோரை திட்டி பெரிய வாத விவாதங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

தாஹாம் சிறிசேன, கொழும்பு - டவுன் ஹோலில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினருடன் சென்று தாக்கியுள்ளார்.

அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளனர். அந்த ஊழியர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுகின்றார்.

அந்த ஊழியருக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். நாம் கேட்ட மாற்றம் இதுதானே.

ராஜபக்சவினர் இரவு நேர களியாட்ட விடுதிகளுக்கு செல்லவில்லை. அங்கு சென்று எவருடனும் சண்டையிட்டு கொள்ளவில்லை.

மைத்திரியும் ரணிலும் ஜாடிக்கு ஏற்ற மூடியை போன்றவர்கள். மைத்திரி - ரணில் ஜோடி பட்டப்பகலில் இந்த நாட்டை அழித்து வருகிறது.

மேற்குலக நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ரணில் விக்ரமசிங்க நாட்டை ஆட்சி செய்கிறார். ஜனாதிபதி சிறிசேன பத்திரிகையில் எதையாவது பார்த்து குழப்பமடைகிறார் எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. Night Club Culture does not suit to Sri Lankans, It is a west innovation to detroy the peaceful family life style. It is destroying the norms of all the religious practices in Sri Lanka.

    ReplyDelete
  2. யார் பிழை செய்தாலும் பிழை பிழையே ராஜபக்ச மற்றும் அவரின் புத்திரர்களின் ஊலலின் போது சத்தமில்லாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் கதருவது பிழை

    ReplyDelete
  3. உனக்கு மதம் பிடித்து அலைவதாக எல்லோரும் அறிந்து வைத்திருக்கின்றனர்.

    ReplyDelete
  4. எல்லாம் கழுதை தேய்த்து கட்டறுப்பா ஆகிய கதைதான்,

    ReplyDelete
  5. சட்டம் பிரர்மீதுமட்டும்தான் நிறைவேற்றபடவேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆசிக்கின்றான் அவன் எத்தனை தவறை செய்தாலும் நான் தண்டிக்கப்பட கூடாது என்று கருதுகிறான் உதாரனம் கள்ளன் அனைத்து வீட்டிலும் திருடுகின்றான் அவன் வீட்டில் திருடப்பட்டால் உடனடியாக காவல்நிலையதிட்கு சென்னறு முறைபாடு செய்கின்றான் இந்த ஒட்டுன்னி வீரவனசவும் இப்படிதான்.

    ReplyDelete

Powered by Blogger.