October 26, 2016

பிணக்க அரசியல் மூலமே, உரிமைகளை அடைந்துகொள்ள விக்னேஸ்வரன் நினைக்கிறார்

புதிய அரசியல் யாப்பில் கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசையாக உள்ள எங்களை நாங்களே ஆளும் தனி அலகு இருக்குமா இல்லையா என்று சொல்ல வேண்டும். ஒளித்து நாடகமாடக் கூடாது என மு.காவின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். 

இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்களுக்கு யாப்பு மாற்றம் தேவையில்லை என்று ஒரு வரிதான் எழுத வேண்டும். நமக்கு எல்லாமே 1978 ஆம் ஆண்டில் இருக்கின்றது. வேறு எந்த யாப்பும் முஸ்லிம்களுக்கு இது போன்று இருக்காது. அதுதான் இணக்க அரசியல் யாப்பை தந்தது. அதுதான் முஸ்லிம்களை பேரம் பேசும் சக்தியாக மாற்றியது.

அதுதான் 17 வருடங்கள் ஆட்சி செய்த ஐ.தே.க.வின்ஆட்சியை மாற்றியது எனவும் குறிப்பிட்டார்.தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கோரி ஏறாவூரில் கையெழுத்துப் பெறும் நிகழ்வு இடம்பெற்றது. இதன் பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மு.கா.வின் தவிசாளர் பசீர்  உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது அரசியல் முகவரியை எழுதியவரும், இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நீதி கேட்டவருமான தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையை அறிய வேண்டுமென்ற ஆர்வம் சர்வதேசம் வரை இருந்தது. அந்த சந்தர்ப்பம் கைநழுவிப் போய் 16 வருடங்களின் பின்னர் அந்த அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளோம். இது இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு நிகழ்வாகும்.
தலைவரின் மரணம் பற்றி அறிய ஜனாதிபதி சந்திரிகாவினால் தனி நபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதற்கு மீயுயர் நீதிமன்ற நீதிபதி எல்.எச்.ஜி.வீரசேகர நியமிக்கப்பட்டார். அவர் தமது அறிக்கையை உரிய காலத்தில் வழங்கினார்.
இன்று வரைக்கும் வெளியிடப்படவில்லை. இலங்கைக்கு சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பான ஐ.நாவின் அதிகாரி ரீட்டா ஐசாக் நதேயா வந்து சென்றுள்ளார்.
இந்தப் பின்னணியில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிகவும் அவசியமாகும்.
இவரிடம் மு.கா சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைக்குமாறு கேட்டுள்ளது.
இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடனடியாக அங்கீகரித்துள்ளது. மு.கா முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வு தருவதற்கு ஒரு ஆணைக் குழு நியமிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை.
அது பொதுவானதொரு கட்சி என்ற அடிப்டையில் எல்லா சிறுபான்மையினருக்குமாக ஒரு ஆணைக் குழுவை நியமிக்குமாறு கேட்டுள்ளது.
ஜனாதிபதி ஒருவரினால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கையை வெளியிடாது இருப்பதென்றால் அது எங்களின் தலைவர் அஷ்ரப்பின் மரண அறிக்கையாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கின்றேன். முஸ்லிம் சமூகத்திற்கு ஆணைக் குழுவின் மீது நம்பிக்கை வர வேண்டும்.
அந்த நம்பிக்கை வர வேண்டுமாக இருந்தால் தலைவரின் மரண அறிக்கையை வெளியிட வேண்டுமென்று கேட்கின்றோம். 
மரண அறிக்கையில் இதுவொரு விபத்து என்றிருந்தால் அதனை வெளியிடுவதில் என்ன பிரச்சினை இருக்கின்றது என்று கேட்கின்றோம்.
அந்த அறிக்கையை வெளியிட்டால் அரசாங்கம் பாதிக்கப்படுமா? ஏதாவது இயக்கம் பாதிக்கப்பட்டு விடுமா? சர்வதேச சதி அம்பலமாகி விடுமா என்று சிந்திக்கும் நிலைதான் கடந்த 16 வருடங்களாக எமக்குள் இருந்தது. இது பற்றி பாராளுமன்றங்களில் கேட்டிருக்கின்றோம். ஊடங்களிலும் பேசியிருக்கின்றோம்.
ஆனாலும், அவை பற்றி மக்களின் உணர்வுகளுடன் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை நாம் வழங்கவில்லை. அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்காகவே மக்களுடன் இணைந்து கையெழுத்துக்களை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.
இன்று எழுந்துள்ள அரசியல் சூழ்நிலையில் அரசியல் தீர்வு பற்றி பேசப்படுகின்றது. அரசியல் யாப்பில் தமிழர்கள் தங்களுக்கு என்ன தீர்வு வண்டுமென்று ஏற்கனவே தயாரித்துக் கொடுத்து விட்டார்கள். ஆனால், முஸ்லிம்கள் யாப்பு மாற்றத்தில் என்ன இருக்க வேண்டுமென்று இன்னும் சரியாக சொல்லவில்லை. கிழக்கு முஸ்லிம்களின் அபிலாசைகள் பற்றி பேசப்படவில்லை.
1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட யாப்பானது தமிழர்களிடையே வன்முறை அரசியல் வருவதற்கு காரணமாக இருந்தது. முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் தேவையை உணர்வதற்கு வழி வகுத்தது. தலைவர் அஸ்ரப் இதற்காகவே முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும், விகிதாசார தேர்தல் முறையும் முஸ்லிம்களின் அரசியல் பலத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பு செய்துள்ளது.
பிரேமதாஸாவை இளவயதாக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் அவரை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறச் செய்தார். அன்றிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் பெரு வளர்ச்சி பெற்று வந்தது. அவர் 12 வீத வெட்டுப் புள்ளியை 05 வீதமாகக் குறைத்தார்.
அதுதான் முஸ்லிம் காங்கிரஸின் வளார்ச்சிக்கு; காரணமாகும். இந்த யாப்புதான் முஸ்லிம்களின் அரசியல் பலத்தையும், குரலையும் பலமடையச் செய்தது.
தலைவர் அஷ்ரப்  தனித்துவ அரசியலை பேணி இணக்க அரசியலை செய்தார்.
அதனை தமிழர்கள் செய்வதற்கு முன் வந்துள்ளார்கள். அதே வேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான சக்தி இணக்க அரசியலை விரும்பவில்லை.
பிணக்க அரசியல் மூலம்தான் தமிழர்களின் உரிமைகளை அடைந்து கொள்ளலாமென்று நினைக்கின்றது. இந்த இரண்டு சக்திகளும் சமாந்தரமாக செல்லுகின்றது.
இதனை தமிழர்களிடையே பிரிவினை என்று சொல்லவில்லை. அது அவர்களின் அரசியல் தந்திரமாகவே பார்க்க வேண்டியுள்ளது. 
யுத்தத்திற்கு பின்னர் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்து ஒரு அரசியல் தீர்வினை வரைந்து கொள்ள முடியவில்லை.

3 கருத்துரைகள்:

இவர் பெரிய டுபுக்கு

பஷீர் அவர்களே, சில உண்மையற்ற, உடன்பாடற்ற கருத்துக்கள் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

** சிறுபான்மை மக்களின் பிரச்சினையை அறிவதட்கான ஆணைக்குழு மீது, முஸ்லிம்களுக்கு நம்பிக்கை வருவதாக இருந்தால் தலைவர் அஸ்ரப் அவர்களின் மரண அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது எம்மை பொறுத்த வரைக்கும் தனித்தனியான விடயம். வெவ்வேறாகவே கையாளப்பட வேண்டும்.

** தமிழர்களிடையே வன்முறை வரக் காரணமும், முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் தேவையை உணர்வதட்கு வழி வகுத்தது; 1978 அரசியல் சட்டம் என்பது, மொட்டைத் தலைக்கும் முடங்காலுக்கும் முடிச்சி போடுவதை போல் உள்ளது. சிறு பிள்ளைத்தனமாகவும் உள்ளது. இந்த நாட்டின் அரசியல் வரலாறு ( அரசன் காலத்தில் இருந்து) உங்களுக்கு புரியவில்லை, தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது.

** தமிழர்களின் இணக்க அரசியல் குழுவும், பிணக்க அரசியல் குழுவும் இருப்பது அவர்களது அரசியல் தந்திரம் என்று நீங்கள் கூறியதை; சம்பந்தன் ஐயா அவர்களும், விக்னேஸ்வரன் ஐயா அவர்களும் ( இந்த குழுக்களில் உள்ள ஏனையவர்களும் ) அறிந்தால் விழுந்து விழுந்து சிரிப்பது மட்டும் இல்லாமல்; நம்மளே இப்படி சிந்திக்கவில்லையே என்று அதிசயமும் ஆச்சரியமும் படுவார்கள்.

எங்களது பணிவான வேண்டுகோள் நீங்கள், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லா போன்றவர்களெல்லாம் அரசியலில் இருந்து ஒய்வு பெறுவதுதான் முஸ்லிம்களுக்கு நீங்கள் அனைவரும் செய்யும் சிறந்த விடயம் என கருதுகிறோம்.

Post a Comment