Header Ads



பௌசிக்கு ஆதரவாக அமைச்சரவையில், குரல் எழுப்பிய ஜனாதிபதி மைத்திரி

சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என்றால், அமைச்சரவையிலுள்ள அனைவரின் மீதும் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சர்கள் முன்னிலையில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பௌசி என்பவர் எங்களை விடவும் அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்த ஒருவராவார். 50 வருட அரசியல் அனுபவத்தை கொண்டவர். அவ்வாறான ஒருவரை நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டால் கௌரவமான முறையில் நடத்த வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் அவரை ஒரு காட்சி பொருள் போன்று காட்டி வாக்குமூலம் பெறுவது தவறாகும். அவ்வாறு ஏற்பட்டால் அவருக்கு ஏற்படும் மன ரீதியான தாக்கங்களை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர் பௌசி என்பவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக பாரிய சேவைகளை செய்த ஒருவரே தவிர பயிற்சி பெறும் ஒரு பொருள் அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கருத்து அமைச்சரவையினால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

2 comments:

Powered by Blogger.