Header Ads



வடக்கு - கிழக்கை இணைக்க ரணில் சதி செய்கிறார் - ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய களம் குதிப்பார்

2002இல் விடுதலைப்புலிகளுடன் ஒப்பந்தம் செய்து இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்ததுபோல் இப்போது அரசியல் தீர்வை வழங்கி நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சி செய்கின்றார்.

வடக்கு - கிழக்கை மீளிணைத்து சமஷ்டி அடிப்பட்டையில் தீர்வை வழங்குவதற்கு அவர் சர்வதேசத்துடன் இணைந்து சதி செய்து வருகின்றார்.

அதற்காகவே புதிய அரசமைப்பை அவசரமாக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தச் சதியை நாம் முறியடிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவினதும் அவர் தலைமையிலான எமது அணியினரினதும் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

தொலைபேசியில் பேசும்போது டிக் டிக் என சத்தம் ஒன்று வருகின்றது. விசாரித்துப் பார்த்தால் அது ஒட்டுக் கேட்கும் சத்தம் எனச் சொல்கிறார்கள்.

அது எமக்குப் பிரச்சினை இல்லை. இவ்வாறு என்ன செய்தாலும் நாம் அரசுக்கு எதிரான போராட்டத்தை - அரசைக் கவிழ்க்கும் போராட்டத்தைக் கைவிடமாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சிகள் இந்த அரசில் இடம்பெறுகின்றன. அது நடந்தால் 2020இல் மஹிந்த ராஜபக்சவை பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைப்போம்.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவோம். அந்தப் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் அவர்தான். எம்மிடம் இருக்கும் மாற்று வழி அவர்தான்.

எமது அணிக்குள்ளும் நாட்டிலும் 90 வீதமான ஆதரவு கோட்டாபயவுக்கே உண்டு. இதை அறிந்துதான் மைத்திரி பயப்படுகின்றார்" என்றும் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சிறுபான்மை மக்களை நேரடியாகக் கொல்பவன், கோத்தா.

    தமிழ், முஸ்லிம்களை நிரந்தரமான பகையாளிகளாக மாற்றி, அரசியல் செய்பவன், ரணில்.

    ReplyDelete
  2. டிக் டிக் என்று ஒரு சத்தம் வருகின்றது என்ன என்று விசாரித்து பார்த்தல் .........இவன் எல்லாம் சிறுபிள்ளைகள் அடுத்தவர்களிடம் விசாரித்து விட்டுதான் ஒரு முடிவுக்கு வருகின்றான் போல் இவனுக்கு இவன் கொள்ளை அடித்த பணத்துக்கு இன்னும் பதில் சொல்ல இயலாமல் தடுமாறுகின்றான் .................

    ReplyDelete

Powered by Blogger.