Header Ads



இந்தியாவைவிட பல முஸ்லிம் நாட்டு பெண்கள், அதிக சமத்துவத்தை அனுபவிக்கிறார்கள் - மேனகா காந்தி

இந்தியாவை விட பல முஸ்லிம் நாடுகளில் பெண்கள் அதிக சமத்துவத்தை அனுபவிக்கிறார்கள் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி  கூறியுள்ளார் இந்தியாவில்  முஸ்லிம்களிடையே விவாகரத்து செய்வதில் தலாக் முறை உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்  விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஆண்-பெண் சமத்துவத்துக்கு தலாக் முறை எதிரானது என்று  கூறப்பட்டிருக்கிறது. 

இதுகுறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் துறை அமைச்சர் மேனகா காந்தி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தலாக் முறை விவாகரத்து  விஷயத்தில் மத்திய அரசு தெளிவான முடிவு எடுத்துள்ளது. நாம் பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்து சிந்திக்க வேண்டும். இது போன்ற  நடைமுறைகள் சரியானதல்ல. பல முஸ்லிம் நாடுகளில் இந்த தலாக் முறையே கிடையாது. சொல்லப் போனால், இந்தியாவை விட அந்த நாடுகளில்  பெண்கள் அதிக சமத்துவத்தை அனுபவிக்கிறார்கள். 

பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் தலாக், பலதார மணமுறை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெண்களின் சமத்துவம், கண்ணியம்  பாதிக்கப்படக் கூடாது. பெண்களுக்கு சமஉரிமை மறுக்கப்படுவதற்கு மதத்தை காரணமாக சொல்ல முடியாது. எனவே, அந்த சட்டங்களை மீண்டும் மறு  பரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றார்.

1 comment:

  1. Lots of Indian girls are wearing Tee and shorts. Why don't you make everyone to wear the same I/o saree to keep equal? In India people are not equal.Even you or your son have not been given equal right in your famous family.

    ReplyDelete

Powered by Blogger.