Header Ads



சிறுவர் புற்றுநோய் பிரிவை நிர்மணிக்க, நிதி வேண்டும் - சங்கா + மஹேல ஆதரவுடன் நடைபவனி


-பாறுக் ஷிஹான்-

தெற்கில் காலி கராப்பிட்டியவில் சிறுவர்களுக்கான புற்றுநோய்  சிச்சை பிரிவொன்றை புதிதாக நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடைபவனி இன்று வியாழக்கிழமை (6) வடக்கில் பருத்தித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இவ் நடைபவனியில் கலந்து கொண்டு நிதி திரட்டுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணியிய் முன்னாள் தலைவர்கள் குமார் சங்ககார, மகேல ஜெயவர்த்தன மற்றும் பொலிவூட் நட்சத்திரம் ஜாக்குலன் பெர்னாண்டஸ், பொப் பாடகர்களான பாத்தியா, சந்தூஷ், தொழில் முயற்சி ஒட்டாரா டி ஆகியோரும் இணைந்து கொள்ளவுள்ளனர். 

சுமார் 5 மில்லியன் நிதியினை திரட்டும் நோக்கில் வடக்கில் இருந்து தெற்கிற்கு 28 தினங்களாக பயணிக்கவுள்ள இந்த நடைபவணி வியாழக்கிழமை யாழ். பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

ஒரு நாளில் சுமார் 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் தூரத்தை கடக்கவுள்ள இவ் நடைபவனியானது பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம், மாங்குளம், மதவாச்சி, கல்முனை, குருணாகல், கொச்சிக்கடை, கொழும்பு, பாணாந்துறை மற்றும் சீனிகம போன்ற நகரங்களை கடக்கவுள்ளது. 

இவ் நடைபவனியில் இணைந்து கொள்வதற்கு 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட நன்கொடையாளர்களும், 800 ற்கு மேற்பட்ட நடைபவனியாளர்களும் தங்களை பதிவு செய்துள்ளனர். 

இவ் நடைபவனியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், தமது உடற்தகுதிக்கு ஏற்ப ஒரு நாளோ அல்லது அதற்கு மேற்பட்ட தினங்களோ இணைந்து கொண்டு நடைபவனிக்கு வலுச் சேர்க்குமாறு ட்ராய்ல் அமைப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியில் முன்னாள தலைவர்களாக குமார் சங்ககார, மகேலஜெயவர்த்தன ஆகியோர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். 

மேலும் 2015 ஆம் ஆண்டில் கராப்பிட்டிய போதனா வைத்திய சாலையில் அதிகளவிலான புற்றுநோய் மரணங்கள் பதிவாக்கப்பட்டுள்ளன. 

மேலும் இவ் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அதனைச் சூழவுள்ள மாகாணங்களிலிருந்து ஏராளமான நோயாளர்கள் வருகை தருகின்றார்கள். 

குறிப்பாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை   போன்ற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, பதுளை மற்றும் களுத்துறை போன்ற தூர பிரதேசங்களில் இருந்தும் நோயாளர்கள் இந்த வைத்திய சாலைக்கு வருகின்றார்கள். 

குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் 6 மில்லியன் மக்களுக்கு சேவைகளை வழங்கும் வைத்திய சாலையாக கரப்பிட்டிய வைத்திய சாலை உள்ளது. 

இந்நிலையில் குறித்த வைத்திய சாலையில் தனியான புதிய புற்றுநோய் வைத்தியசாலையினை அமைப்பதற்காகவே இவ் நடைபவனி ஊடாக நிதி சேகரிக்கப்படுகின்றது.

1 comment:

  1. already thees fellows collected millions of dollarsfunds for an cancer hopital named 'HOPE' until now any news about that fund and hospital, further they want to collect again in another name it seems

    ReplyDelete

Powered by Blogger.