Header Ads



"பிலிப்பைன்ஸ் நாட்டை கீழ்த்தரமாக பார்ப்பதை நிறுத்தாவிட்டால், அதற்காக வருத்தப்பட வேண்டும்"

பிலிப்பைன்ஸ் நாட்டை கீழ்த்தரமாக பார்ப்பதை நிறுத்தாவிட்டால் அதற்காக எதிர்காலத்தில் வருத்தப்பட வேண்டும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் மனித உரிமைகள் மீறப்படுவதாக விமர்சனம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான Rodrigo Duterte கடுமையாக சாடியுள்ளார்.

இதனை தொடர்ந்து அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ‘தென் சீனா கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்துடன் பிலிப்பைன்ஸ் ராணுவம் இணைந்து நடத்தி வந்த போர் பயிற்சிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பயிற்சியில் ஈடுப்படுவது இதே கடைசி எனவும் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, ‘பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக நான் இருக்கும் வரை அமெரிக்காவுடன் ராணுவ பயிற்சி நடைபெறாது.

எங்களை கீழ்த்தரமாக பார்க்காதீர்கள். இதற்காக எதிர்காலத்தில் வருத்தப்படுவீர்கள். இனி நான் உங்களிடம் பேச விரும்பவில்லை. இனிவரும் காலத்தில் சீனாவுடன் உறவு வைத்துக்கொள்கிறோம்’ என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பேசியுள்ளார்.

No comments

Powered by Blogger.