October 09, 2016

யாழ்ப்பாண முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள் - மௌலவி சுபியான் சீற்றம்

-பாறுக் ஷிஹான்-

யாழ் மாவட்ட முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு சொல்லக்கூடிய அளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்களிப்பு வழங்கவில்லை எனவும் அவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றுவதாக முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ் மாவட்ட முஸ்லீம் வெளியேற்றப்பட்டு எதிர்வரும் ஓக்டோபர் 30 ஆம் திகதி  26 வருடங்கள் நிறைவடைவது தொடர்பாகவும்   அம் மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் எமக்கு வழங்கி விசேட செவ்வியில்  மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்

வட மாகாண முஸ்லீம் மக்கள் தொடர்பாக கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது கருத்துக்களை கூறி வருகின்றனர். அது வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. இவ்வாறே தான் எமது மக்களின் மீள் குடியேற்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்பு என்பது போதிய அளவில் இல்லை. இதில் அக்கறை இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இருப்பது மிக வேதனையாக இருக்கின்றது. ஏனெனில் 1990 ஆண்டு யாழ் முஸ்லீம்கள் விடுதலை புலிகளினால் வெளியேற்றப்பட இருந்த காலத்திலும் கூட அம்மக்கள் தமிழ் தேசிய தலைமை கட்சிகளுக்கு தான் தமது ஆதரவினை வழங்கி ஒத்துழைத்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் (இன்று) சொந்த இடத்தில்  தற்போது மீள் குடியேற வந்துள்ள முஸ்லீம் மக்களை வரவேற்று வாழ வைப்பதென்பது தமிழ் அரசியல் தலைவர்களிற்கு பொறுப்பு உள்ளது. ஆனால் தற்போது நடப்பது என்ன?வடக்கு மாகாண சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மை ஆசனங்களுடன் கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. அதன் போது அச்சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைவர்கள் என சொல்லப்படுபவர்கள் யாழ் முஸ்லீம் மக்கள் தொடர்பில் அக்கறையுடன் பல கருத்துக்களை கூறியிருந்தனர்.

ஆனால் வட மாகாண சபை கூட்டமைப்பினால் கைப்பற்றப்பட்ட பின்னர் சம்பிரதாய பூர்வமாக சமயத்தலங்களிற்கு அன்று விஜயம் செய்தனர். இதன் போது யாழ் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பள்ளிவாசல் ஒன்றிற்கும் வருகை தந்தனர். அந்த நேரத்தில் பள்ளிவாசலில் ஒன்று கூடி நின்ற முஸ்லீம் மக்களிடத்தில் அங்கு வந்த வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய எதிர்கட்சித்தலைவருமான இரா .சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, உள்ளிட்டோர் பல வாக்குறுதிகளை வழங்கினர்.

இந்த வாக்குறுதி வழங்கும் போது கூட்டமைப்பின் சார்பாக தேசிய பட்டியல் மூலம் தெரிவான முஸ்லீம் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் என்பவரும் உடனிருந்தார். இந்த உறுதி மொழி வழங்கும் போது மேற் கூறிய தலைவர்கள் எங்களது ஆட்சி தற்போது வந்து விட்டது.உங்களை(யாழ் முஸ்லீம்கள்)  சொந்த இடங்களில் மீள் குடியேற்ற முழுக்கவனமும் செலுத்தவுள்ளோம்.அத்துடன் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் பொறுப்பு இருப்பதாக கூறி சென்றிருந்தனர்.

ஆனால் இரண்டு அரை வருடம் கடந்துவிட்டது. வடக்கு மாகாண சபையினால் எமது மக்களிற்கு என்ன நடந்துள்ளது என நினைத்துக்கொண்டு அதனை மீள ஞாபகப்படுத்த நானும் எனது குழுவினரும் முதலமைச்சரை சந்திப்பதற்காக அவரது வாசஸ்தலத்திற்கு சென்றோம். அங்கு முஸ்லீம் மக்களிற்கு ஏற்கனவே  அவர்கள் கூறிய  வாக்குறுதிகளை நினைவு படுத்தி உடனடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம்.அப்போது முதலமைச்சரும் உறுதியாக செய்து முடிப்பதாக கூறினார். ஆனால் இன்னும் ஒன்றுமே  நடைபெறவில்லை.

ஆயினும் இன்று வடக்கு மாகாண சபை யாழ் முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவி செய்வதான ஒரு மாயையை கூட்டமைப்பின் ஊடாக தேசிய பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் மேற்கொண்டு வருகின்றார். அவர் வடக்கு மாகாண சபை அவருக்கு ஒதுக்கிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலத்தை கொண்டு கூடுதலான நிதியினை யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கி செலவழிக்கின்றார்.

இவ்வாறு மாகாண சபையினால் அவருக்கு ஒதுக்கப்படுகின்ற 60 இலட்சம் ரூபா நிதியை கொண்டு சில உதவிகளை செய்து விட்டு அதனை செய்தியாக மீண்டும் மீண்டும் பிரசுரித்து அதிகளவான உதவிகள் என வெளிக்காட்ட முயல்கின்றார். இந்த நிதி மூலம் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட உதவிகள் செய்வதாகவே அந்த செய்திகளில் அடிக்கடி சொல்லப்படுகின்றது. நான் அறிந்த மட்டில் அந்த நிதியில் மாகாண சபை உறுப்பினர் வழங்குவது குறைவு.செய்தியாக வெளியிடுவது அதிகம். இதனால் அந்த செய்தி மூலம் வெளி உலகிற்கு தான் அதிகமாக முஸ்லீம்களிற்கு உதவுவதாக கூற முற்படுகின்றார்.

இந்த விடயத்தை பார்க்கும் வெளி உலக மக்களும் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் யாழ் முஸ்லீம் மக்களிற்கு அதிகமாக உதவுகின்றார்  என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது.ஆனால் இவ்விடயம் உண்மையல்ல. எனவே மேற் சொன்ன மாகாண சபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட வாழ்வாதார உதவி என்பது மீள்குடியேறிய அல்லது மீள் குடியேறவுள்ள முஸ்லீம் மக்களிற்கு முற்று முழுதான பாரிய வேலைத்திட்டமாக கருத முடியாது. 

ஆகவே இந்த விடயங்களை ,உதவித்திட்டங்களை வைத்துக் கொண்டு வடக்கு மாகாண சபை யாழ் முஸ்லீம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுகின்றது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவுகின்றது என யாரேனும் சொல்வார்களே ஆனால் அது நிச்சயமாக யாழ் முஸ்லீம் மக்களை ஏமாற்றுவதாகவே கருத வேண்டியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

8 கருத்துரைகள்:

உங்கள் சினேகிதர் டக்ளஸ் அமைச்சராய் இருந்த 5வருடத்தில் அவருடன் சுற்றினீரே ஐயா!!
அப்போது மீள்குடியேற்றிருக்கலாமே!!

வடமாகாண முதமைச்சர் பதவியைமுஸ்லீம்களுக்கு தரசொல்லுவார்போல

Moulavi Sufiyan - You know better than us about the racist Tamil parties and its leaders.

You should better contact President to tackle this inhuman problems faced by Muslims.

Yes, it is a government duty implementing fairness among it's people. It must do on gun point by it's Army as it was did in the past.

பலவந்தகாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லீம்களுக்கு இன்றுவரை ஒரு காத்திரமான முன்னெடுப்புக்கள் வடமாகாண சபையினால் செய்யப்படவில்லை.நல்லாட்சி அரசு இதுவிடயமாக விஷேட ஆணைக்குழு அமைத்து உண்மைநிலையைக் கண்டறிந்து உலகறியச் செய்து இம்மக்களின் வாழ்விட உரிமையையும் உரிய நஷ்டஈடுகளையும் முழுமையான மீள்குடியேற்றத்தையும் விஷேட கவனம் செலுத்தி ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் முன்னெடுக்கவேண்டும்

தமிழர் தலைமைகள் எப்பொழுதுமே உளுத்துப்போன துவேஷத்தத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் வக்கிமானவர்கள் என்பதையும் அவர்களது முழு பலமும் குமரன்குமரன் போன்ற வெறும் வாய்ச்சவாடல்கள் இருக்கும் எதுவரை தெறியுமா? அரசியல் வங்குரோத்து அடைந்தபின்னர்தான்
என்பதற்கு
ஒரு நல்ல சான்று இதோ!
ஈழபோராளி தமிழினி எழுதிய "ஒரு கூர்வாளின் நிழலில்" என்ற புத்தகம் வெளிவந்து வந்து பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது, அந்த தமிழினி பெண்புலிகளின் தலைவியாய் இருந்து, சிங்களனால் கைதுசெய்யபட்டு பின் விடுதலையாகி சமீபத்தில் மரணமடைந்தார், இறுதிகாலத்தில் அவர் மனமுடைந்து அப்புத்தகத்தில் சொல்லியிருக்கும் வரிகள்

>> "நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டோம். ஆயுதங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்துவிட்டோம்"

>>" எமது வாழ்வு இறுதிவரை போராளியாகவே இருக்கும். ஆயுதம் ஏந்துவதன் மூலம், பழிவாங்குதலின் மூலம் எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் செய்துவிட முடியாது என்பதை அனுபவப் பாடங்கள் கற்றுத்தந்தன."

>> "போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடர வேண்டும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை. ஆனால் தலமையோ அடுத்த தலைமுறையும் துப்பாக்கி தூக்கவேண்டும் எனபதில் கடுமையாக இருந்தது, பல தளபதிகள் கூட இறுதி நேரத்தில் மனமொடிந்துபோக அதுதான் காரணம்."

>> "பயிற்சி இல்லாதோர் கையில் துப்பாக்கி கொடுத்து, அவர்கள் இறந்தபின் டிராக்டரில் மொத்த உடலையும் கொண்டு குவித்து, உங்கள் பிள்ளைகளை தேடுங்கள் என சொன்னபொழுது சனங்கள் இட்ட சாபம் கொஞ்சமல்ல"

>> "முள்ளிவாய்க்காலில் முடக்கபட்ட நிலையிலும், 20 ஆயிரம் போராளிகளை திரட்டி கிளிநொச்சியினை பிடிக்கபோகிறோம் என ஏமாற்ற நினைத்த பொட்டம்மானை நினைத்தால் விசிர்(பைத்தியம்) பிடிக்கும், அவர் மீதான மரியாதை போயிவிட்டது, நாம் ஏமாற்றபட்டா இந்நிலைக்கு வந்தோம்?

>> அண்ணன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இப்படி ஏன் நிலை மாறிற்று என்றபொழுது , அண்ணன் சொன்னார், "எல்லோரும் என் கையில் எல்லாம் இருக்கின்றது நினைக்கின்றீர்கள், என் கை வெறும் கை" என விரித்து காட்டியபொழுது உண்மை விளங்கிற்று.

>> போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக் கொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன். ஒரே போராளியாக தன்னை அடையாளபடுத்திய புலிகள், அரசியல் பொறுப்பில் பெரும் பிழை செய்தனர், இறுதிவரை ஆயுத நம்பிக்கை மட்டும் இருந்தது, யதார்த்த உலகம் வேறு, இவர்களின் கனவு உலகம் வேறு.

இந்த கடும்போரால் இன்று எமது மக்களின் வாழ்வு இருநூறு வருடங்கள் பின்னோக்கிப் போயிருக்கிறது.

>> அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இயல்பான சாத்தியத்தை உருவாக்கும்.

* சொல்லி இருப்பது ராஜபக்சேயோ, கலைஞரோ,காங்கிரசோ அல்ல. 20 வருட்ம் பிரபாகரனின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிய முண்ணனி போராளி, அவருக்கு உண்மை புரிந்து தனது இறுதிகாலத்தில் சொல்லிய வார்த்தைகள் இவை.

* இந்த அழிவினை தடுக்கத்தான் 13ம் சட்ட திருத்தமும் அமைதியான வாழ்வும் ராஜிவ் அரசாலும், ஏன் 2002ல் நார்வே அரசாலும் இன்னும் சிலராலும் முன்னெடுக்கபட்டன. பிரபாகரனின் கடும்போக்கு எல்லாவற்றையும் சிதைத்து முள்ளிவாய்க்காலில் நிறுத்தியது. சொந்த குடும்பத்தை, தாய்தந்தையினை, பெற்ற பிள்ளையினை கூட காப்பாற்ற விரும்பாத அல்லது முயற்சிக்காத பிரபாகரனுக்கு தமிழின அழிவு பெரும் விஷயமே அல்ல.

*உண்மைகள் உறங்காது,

மனிதன் பலவீனமானவன். தவறு செய்யக்கூடியவன். உலகில் எவர் தான் அவர்களைக் கைவிட்டாலும் அவர்களைப் படைத்த இறைவன் அவர்கள் மேல் கருணை மிக்கவன். இந்த இடத்தில் அவன் சொல்வதையும் கொஞ்சம் கேட்போம்:

"நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.
"
(அல்குர்ஆன் : 6:54)

Post a Comment