Header Ads



அர­சாங்கம் முஸ்­லிம்­களை எவ்­வாறு நடத்­து­கி­றது..? ரீட்டா ஐசாக் கேள்வி

 -விடிவெள்ளி ARA.Fareel-

அர­சாங்கம் முஸ்­லிம்­களை எவ்­வாறு நடத்­து­கி­றது? முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின்­றன என சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யா­ முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஹலீம், நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக ஆங்­காங்கே சிறு பிரச்­சி­னைகள் நிகழ்கின்றன.  

அவற்றை அர­சாங்கம் உட­னுக்­குடன் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்­கி­றது. சிறு­பான்மை இனத்­த­வர்­கள்­தொ­டர்பில் அர­சாங்கம் அதிக அக்­கறை கொண்­டுள்­ளது என தெரிவித்துள்ளார். 

நேற்று பிற்­பகல் ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட பிர­தி­நிதி ரீட்டா ஐசாக் நதேயா அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமை அமைச்சின் காரி­யா­ல­யத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.

அவர் இலங்­கையில் சிறு­பான்மை இன­மான முஸ்­லிம்­களின் கல்வி, பள்­ளி­வா­சல்கள், மத்­ர­ஸாக்கள், பாட­சா­லைகள் பற்­றிய விப­ரங்­களைக் கேட்­ட­றிந்தார். அர­சாங்கம் முஸ்­லிம்­களை எவ்­வாறு நடத்­து­கி­றது? முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் எவ்­வாறு கையா­ளப்­ப­டு­கின்­றன என்றும் வின­வினார். புதிய அர­சி­ய­ல­மைப்பும் முஸ்­லிம்­களும் பற்­றிய விளக்­கங்­க­ளையும் கேட்­ட­றிந்தார்.

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கையில் பின்­வரும் கருத்­துக்­களை வெளி­யிட்டார். 

கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தை இன்­றைய அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்­துடன் ஒப்­பிட்டுப் பார்க்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்­பான சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. அனைத்து மதங்­களும் சம­மாகக் கணிக்­கப்­ப­டு­கின்­றன.

அனைத்து மதங்­களின் அலு­வல்­களைக் கவ­னிப்­ப­தற்­காக ஒவ்வோர் மதத்­துக்கும் தனி­யான அமைச்சு நிறு­வப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் சிறு­பான்மை மக்கள் மீது மிகவும் கரி­ச­னை­யுள்­ள­வர்­க­ளாக இருக்­கி­றார்கள். தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான தனி­யான அமைச்­சொன்றும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்டில் 20 வருட கால­மாக முஸ்­லிம்­களின் அலு­வல்­களைக் கவ­னிப்­ப­தற்­கென தனி­யான அமைச்­சொன்று இருக்­க­வில்லை.

தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான அமைச்­சொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்­ச­ரவை அந்­தஸ்து அமைச்சுப் பத­வியும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதனால் முஸ்லிம் விவ­கா­ரங்கள் ஒரு ஒழுங்கின் கீழ் முறை­யாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் முஸ்­லிம்­களும் பங்­கு­தா­ரர்­க­ளாக இருக்­கி­றார்கள். நாடெங்கும் உள்ள பள்­ளி­வா­சல்­களில் நடத்­தப்­படும் குத்பா பிர­சங்­கங்­களில் நல்­லி­ணக்கம் வலி­யு­றுத்­தப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் மாண­வர்கள் சிங்­கள மொழி பாட­சா­லை­க­ளிலும் கல்வி பயில்­கி­றார்கள்.

கடந்த கால அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் போன்று நல்­லாட்சி அர­சாங்­கத்தின் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பாரிய நட­வ­டிக்­கைகள் உரு­வா­க­வில்லை. முஸ்­லிம்கள் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை கொண்­டுள்­ளார்கள்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும். பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தில் பாதிப்­புகள் ஏற்­ப­டக்­கூ­டாது என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கிறோம். முஸ்லிம் தரப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­வாங்­கப்­பட வேண்­டி­ய­வை­களை பரிந்­துரை செய்­தி­ருக்­கி­றது. ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றது.

எனது தனிப்­பட்ட கருத்­தொன்­றையும் நான் இங்கு முன்­வைக்க விரும்­பு­கிறேன். எமது நாட்டில் 30 வருட கால­மாக நீடித்த யுத்­தத்­தினால் இனங்­க­ளுக்கு இடையில் விரி­சல்கள் ஏற்­பட்­டன. யுத்தம் முடி­வுக்கு கொண்டு வந்த பின்பு சமா­தான சூழ்­நிலை உரு­வா­கி­யது. அதன் பின்பு நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் இன­வா­தி­களால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன என்­றாலும் தற்­போ­தைய அர­சாங்கம் இன­வா­தத்தை முறி­ய­டிப்­பதில் மும்­மு­ர­மாகச் செயற்­பட்டு வருகிறது என்றார்.

இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் அமைப்பின் விசேட அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யா­வு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் எம்.எச்.எம். ஸமீல், அமைச்சின் செய­லாளர் ஆகி­யோரும் கலந்து கொண்டிருந்தனர்.

3 comments:

  1. அரசியல் பசப்புகள் கலந்த பதில்.முஸ்லிம் பாடசாலைகளில் குறிப்பாக கிராமப்புற பாடசாலைகளில் முக்கியமான பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. அது பற்றி கல்விக்காரியாலயங்கள் எந்தக் கரிசனையும் காட்டவில்லை.சோனக அரசியல்வாதிகள் அவர்களின் கமிசன் வாசிகளில் மூழ்கித்திளைக்கின்றனர்.எந்த ஒரு அரசியல்வாதியும் எமது சிறார்களின் கல்வி பற்றி எந்த அக்கறையும் இல்லை. கிழக்கு மாகாணம் இதற்கு ஓரளவு விதிவிலக்காக இருக்கலாம். ஏனைய பகுதிகளின் நிலை பெரும்பாடும் வீழ்ச்சியும் அவலமும்தான். முஸ்லிம் அமைச்சு அமைத்து இன்று 30 வருடங்களுக்கு மேல்.அது பற்றிக்கூட பொறுப்பானவர்களுக்கு விளங்குவதாத் தெரியவில்லை.

    ReplyDelete
  2. Enga wa thaduthu niruthina...eppa niruthina ...

    ReplyDelete
  3. எமது அரசியல் பிரபுக்களுக்கு எம் சமூகம் பற்றிய எவ்வாறான சிந்தனையும் தூரநோக்கு என்பதை உள்ளது.என்பதைப்பாருங்கள் .பலவந்தமாக ஆயுத முனையில் வெளியேற்றப்படட முஸலீம்களின் மீழ்குடியேற்றம் .நஷ்டஈடு,காணியற்றவர்களுக்கான அரசகாணி,வாழ்வாதார வசதியின்மை.எல்லை நிர்ணய முறைபில் பாகுபாடும் அநீதமும்.அரசியல்யாப்பு சீர்திருததம் என்ற பெயரில் வடக்கு.கிழக்கு மாகாணத்தை இணைக்க முற்படுபவை.தொகுதிவாரி தேர்தல்முறையில் முஸ்லீம்களின் பிரதிநிதுத்துவ இருப்பு பறிபோகும் நிலை.பொதுவாக கடும்போக்கு வாதிகளினால் முஸலீம்களுக்கு ஏற்பட்டுவரும் சேதங்களும் இழப்பீடுகளுக்கும் இன்னும் உண்மை நிலைகண்டறிப்படாமல்இரும்கும் நிலை சுதந்திரமாக எமது கலாசாரத்தையும் எமது மதஅனுஷ்டதானங்களை வேறகொள்ளுவதற்கான இடையூறுகளும் தடங்கள்களும் .வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லீமகள்எதிர்கொள்ளும் அரச நிர்வாகிகளினால் திட்டமிட்ட புறக்கணிப்புக்களும் சாட்டுப்போக்குகளும் இழுத்தடிப்புக்களும் நடைபெற்றுவருவது முஸலீம்கள் இன்று எதிர்கொள்ளும்பாரிய சவால்களும் பிரச்சினைகளுமாகும்

    ReplyDelete

Powered by Blogger.