October 09, 2016

சாய்ந்தமருதின் நலன்சார் விடயங்களை, முன்னெடுக்க 'ஷூரா சபை' உதயம்


(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேசத்தின் நலன்சார் விடயங்களை முன்னெடுப்பதற்காக "ஷூரா சபை" எனும் சிவில் சமூக அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த சபைக்கான நிர்வாகிகளை தெரிவு செய்யும் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றபோது தலைவராக டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல், செயலாளராக எஸ்.எம்.கலீல், பொருளாளராக பொறியியலாளர் இல்ஹாம் ஜெஸீல், பிரதித் தலைவராக டாக்டர் என்.ஆரிப், உப தலைவர்களாக எம்.ஐ.அப்துல் ஜப்பார், எம்.ஐ.ஆதம்பாவா மௌலவி, எம்.எஸ்.எம்.நுஹ்மான் மௌலவி, உப செயலாளர்களாக எம்.சி.எம்.கமருல் முனீர், என் நஹீம், உப பொருளாளர்களாக எம்.ஐ.எம்.இஸ்திகார், யூ.எல்.சத்தார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்துடன் இந்த ஷூரா சபையின் நோக்கங்கள், குறிக்கோள்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒன்பது உப குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதன் பிரகாரம் உட்கட்டமைப்பு, சுற்றாடல் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளராக பொறியியலாளர் யூ.கே.எம்.முஷாஜித், கல்வி, கலாசார, நூலக அபிவிருத்தி- அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி, அரசியல் மற்றும் நிர்வாக கொள்கைகள் மீளாய்வு- கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால், தகவல் சேகரிப்பு, திட்டவரைபு- ஏ.எம்.சுல்பிகார், சுகாதார அபிவிருத்தி, வலது குறைந்தோர், முதியோர், பெண்கள் பாதுகாப்பு- எம்.ஆதம், தொழில்கள், சேவைகள், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி- ஏ.உதுமாலெப்பை, இளைஞர், யுவதிகள் வலுவூட்டல், விளையாட்டுத்துறை  அபிவிருத்தி- ஏ.சி.முஹம்மத், வாழ்வொழுங்கு மேம்படுத்தல், சமூக சீர்திருத்தம்- எம்.பி.எம்.அன்லைஸ், ஜனாஸா நலன்புரி, பைத்துஸ்ஸகாத், இணக்க சபை, காதி நீதிமன்றம் போன்ற சமூக நல நிறுவனங்களின் அபிவிருத்தி- அல்ஹாஜ் எம்.சி.எம்.ஹனீபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அதேவேளை ஷூரா சபையின் யாப்பின் பிரகாரம் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் யூ.எல்.எம்.காசிம் மௌலவி, பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த நிர்வாகத் தெரிவுக்கு முன்னதாக ஷூரா சபைக்கான யாப்பு சமர்ப்பிக்கப்பட்டு, சில திருத்தங்களுடன் அது ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 

சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் துறைசார் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கியதாக நடைபெற்று வந்த பல கலந்துரையாடல்களின் போது பல்வேறு வகையான கருத்துகள், ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு, இந்த யாப்பு தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

1 கருத்துரைகள்:

மாஷா அல்லாஹ ஓரணீயில ஒற்றுமையுடன் செயற்பட்டால் அல்லாவின் உதவி நிச்சயம் இன்ஷாஅல்லாஹ

Post a Comment