Header Ads



ஜனாதிபதியை விமர்சிக்கத் தயாரான யானைகள் - தடுத்துநிறுத்தினார் ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விளக்கமளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பை உடனடியாக இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்தியில் பதிலளிக்கும் போது, அது கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக கூடும் என்பது பிரதமரின் நிலைப்பாடாகும்.

பிரதமரின் அந்த ஆலோசனைக்கமைய நேற்றைய தினம் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிகார் பங்குப்பற்றலுடன் இடம்பெறவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதியின் கருத்திற்கு ஊடகத்தினூடாக பதிலளித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஜனாதிபதி வெளியிட்ட கருத்து அவரது தனிப்பட்ட கருத்து மாத்திரமே எனவும் அது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.

1 comment:

  1. யார் ஆட்சிக்ககு வந்தாலும் கள்வர்கள் கூட்டம் காப்பாற்றப்படும். அப்பாவி மக்களுக்குத்தான் ஆப்பு......

    ReplyDelete

Powered by Blogger.