Header Ads



விருப்பம் இல்லை என்றால், கட்­சியைவிட்டு உடனே வெளி­யே­றிப்­போ­கலாம் - ஹக்கீம்

கட்­சியின் கட்­டுக்­கோப்பை மீறு­வோர்­களும்  கட்­சியின் தலை­மைக்கு கட்­டுப்­ப­டா­த­வர்­களும் கட்­சி­யிலிருந்து உட­ன­டி­யாக வெளி­யே­றுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும்  அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் ஏற்­பாட்டில் உத்­தேச புதிய தேர்தல் முறை தொடர்­பான ஒரு நாள் செய­ல­மர்வு கொழும்பு தபா­லக தலை­மை­யக கேட்போர் கூடத்தில் இடம்­பெற்ற­போது மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், ஒரு சில அர­சியல் உச்­ச­பீட உறுப்­பி­னர்கள் கட்­சியின் கொள்­கைக்கு மாறாக நடந்து வரு­வது மிக தெட்­டத்­தெ­ளி­வாக விளங்­கு­கி­றது. இவர்­களின் செயற்­பா­டுகள் யாவும் கட்­சிக்கும்  தலை­மைக்கும் எதி­ரான செயற்­பா­டு­க­ளா­கவே அமைந்­துள்­ளன. அவர்­களின் சொந்த சுய­நல அர­சி­ய­லுக்­காக கட்­சியை மோசப்­ப­டுத்த  நினைக்க வேண்டாம்.

சிலர் கட்­சியைக் குழப்பச் செய்யும் அவர்­களின் செயற்­பா­டு­களை கட்­சி­யும், கட்­சியின் தலை­மையும் தொடர்ந்தும் பார்த்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது.

குழம்­பிய குட்­டைக்குள் மீன் பிடிப்­ப­தாக நினைத்து கட்­சிக்குள் விளை­யாட­வேண்டாம். விருப்பம்  இல்லை என்றால் கட்­சியை விட்டு உடனே வெளி­யே­றிப்­போ­கலாம் என்றார்.

இந்த உத்­தேச புதிய தேர்தல் முறை தொடர்­பான ஒரு நாள் செய­ல­மர்வில் அமைச்சர் மனோ கணே­சன், கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் செயி­னு­லாப்தீன் நஸீர் அஹமத், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர்,  நாடா­ளு­மன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்  மு.காவின் உச்சபீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.

-பைஷல் இஸ்­மாயில்-

9 comments:

  1. வியாபாரிக்கும், சுயநலவாதிக்கும் - தலைமைத்துவதத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான். கட்சியின் கட்டுக்கோப்பையும், தலைமைத்துவத்தையும் மதிக்காதவர்களை வெளியேற்றுவதட்கு வக்கில்லாத தலைவர், முதலில் தலைமைத்துவத்திலிருந்த்தும் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். இந்த கட்சி உமது வாப்பா ஊட்டு சொத்தும் இல்லை, இதை வளர்த்தெடுத்த போராளிகளும், ஆதரவளித்த முஸ்லிம்களும் கேனப்பயல்களும் அல்ல.
    நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம், சகோதரர் ஹக்கீம் அவர்கள் தலைமைத்துவத்துக்கு கொஞ்சம் கூட தகுதி, அற்றவர். இவரை நம்பி இந்த அரசியல் யாப்பு விடயத்தில் இருந்தால் அது நிட்சயம் முஸ்லிம்களுக்கு பெரும் கைசேதத்தையே தரும். எனவே புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் மாற்றத்துக்கு தங்களது பங்களிப்பை செய்வார்களா?

    ReplyDelete
  2. ஏணிகள் இனித் தேவையில்லை.

    ReplyDelete
  3. யெஸ்!! சமூகத்தையும், மக்களையும் விற்று பையை நிரப்புவதே என் வேலை. அமைச்சுப் பதவி தந்தால் போதும். மக்களா ? அது யார்?. இதையெல்லாம் கண்டும் காணாத கள்ளப் பூனைகளாக இருக்க விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து கட்சியை விட்டு வெளியேறவும் !

    ReplyDelete
  4. மர்ஹூம் அஷ்ரப் இருந்திருந்தால், இந்த ஹக்கீம் பாராளுமன்றப்படிகளை மிதிப்பதை விட்டும் எப்போதோ தூக்கி எறியப் பட்டிருப்பார்.

    எல்லாரும் சேர்ந்து, ஹக்கீமை கடசியில் இருந்து வெளியேற்றப் பாருங்கள்.

    அவர் இருப்பதால், முஸ்லிம்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

    ReplyDelete
  5. தலைவரே உங்களை பார்த்து எங்களுக்கு நிறைய அனுபவம் வந்து விட்டது கொஞ்சம் வழி விடுங்கள் நீங்கள் சுமந்தது போதும்

    ReplyDelete
  6. SLMC is not your father property. You should chased first from leadership

    ReplyDelete
  7. எங்கே எனது com.ஒன்னையும் பிரசுரிப்பதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.