Header Ads



யுத்தத்தினால் இழந்த காணிகளை மீட்பதற்கான, ஆலோசனை வழங்கல் தொடர்பான அறிவித்தல்

உள்நாட்டில் இடம்பெற்ற  யுத்தத்தின் காரணமாக, 1983.05.01 தொடக்கம் 2009.05.18 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதிக்குள், யுத்தத்தினால் தமது காணிகளை அல்லது  அசையா சொத்துக்களை  இழந்த, கைவிட்ட, பலாத்காரமாக விற்பனை செய்த தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு, அக்காணிகளை காலவிதிப்பின் காரணமாக (ஆட்சியுரிமை ) நீதிமன்ற நட படிமுறையினை நாட முடியாதிருப்பின் அதனை இயலச்செய்யும் வகையில் ' 2016 ம் ஆண்டின் 05ஆம் இலக்க காலவிதிப்பு (விசேட சட்ட ஏற்பாடுகள் ) சட்டம் 2016.04.26 ஆம் திகதி அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

இவ்விசேட சட்ட ஏற்பாட்டின் கீழ், காணி உரிமையாளர் இறந்திருப்பின், அவரது மரபுரிமையாளர் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இச்சட்ட்டமானது 2018.04.26 ஆம் திகதியுடன் காலாவதியற்று போகவுள்ளதனால், சேவை நாடுனர் அதீத கவனம் செலுத்துமாறு வேண்டப்படுகின்றீர் .

இச் சட்ட ஏற்பாட்டின் பிரயோகத்தினை இயலச்செய்யும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சட்ட ஆலோசனை பிரிவு, விசேட செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. அந்த வகையில், மேற்குறித்த வரையறைக்குட்பட்ட வகையில், காணி தொடர்பான பினக்குகளைகொண்டுள்ள சேவை நாடுனர்கள், ஆலோசனை சேவையினை பெறும் பொருட்டு கீழ்கானும் முகவரியுடன் தொடர்புகொண்டு, தகவல்களை திரட்டுவதற்கான விண்ணப்பபடிவத்தை பெற்று தம்மையும் சேவை பெறுனர் பட்டியலில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர் .

தொடர்புகளுக்கு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
'சட்ட ஆலோசனை பிரிவு'
53, Vauxhall Lane
Colombo 2
Sri Lanka
தொலைபேசி இல :  011 2436752
பேக்ஸ் : 011 2436752
மின்னஞ்சல் : darussalam.slmc@gmail.com

2 comments:

  1. This way of announcement will not reach Muslims ad a whole. People who are connected with media less in number. Further, most of the people who lost their lands are uneducated poors.

    So, trustees of each mosque should be given instruction to use loud speakers of their mosques to announce this information to their mahallas.

    ReplyDelete
    Replies
    1. Dear brother. Please use the word of Masjith instead of mosque. I also came to know recently tha the meaning of mosque is against to Islamic concern.

      Delete

Powered by Blogger.