Header Ads



இஸ்லாமிய சட்டங்களில், பிறர் தலையிட யார் காரணம்..?

-சல்மா-    

கடந்த சில நாட்களாக ஊடகங்கள் சுமந்து திரிகிற ‘முத்தலாக்’ விவகாரம் குறித்த சில விவாதங்களில் பேசிவிட்டுவந்த பிறகு, உண்டாகிய களைப்போடும் முத்தலாக் என்கிற விவகாரம் பொது சிவில் சட்டம் என்கிற நீட்சியை நோக்கி இந்தியாவைக் கொண்டுசெல்லக்கூடுமா என்கிற கேள்வியோடும் இந்த கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறேன். ‘முத்தலாக்’ என்பது, இஸ்லாம் சமூகத்தில் கணவன் ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக் தலாக் தலாக்’ என்று கூறித் தன் மனைவியை விவாகரத்து செய்வது. இது இந்தியாவின் பல இடங்களில், பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது. தொலைபேசி, வாட்ஸ்அப் போன்ற தொலைத்தொடர்புச் சாதனங்களின் மூலமாகவும் அதிகம் நடைபெறக்கூடியதாக இது இருக்கிறது.

பிரச்சினையின் ஆணிவேர்
மூன்று தலாக்குகளுக்கு இடையிலும் குறிப்பிட்ட கால அவகாசம் தேவை என்கிற குர்ஆனின் வாசகம் இந்தியாவில் பல வேளைகளில் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால், ஆயிரமாயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, விவாகரத்து செய்யப்படுகிற இந்திய இஸ்லாமியப் பெண்களில் 60% பேர் இந்த நடைமுறையினால் பாதிக்கப்படுவதாக பாரதிய மகளிர் அமைப்பு ஆதாரங்களைக் காட்டி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. இந்தக் கொடுமையான பாதிப்பிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும், முஸ்லிம் மகளிர் அமைப்பும் ஒன்றிணைந்து நீதிமன்றத்தை அணுகியதுதான் இந்த விவாதங்களின் அடிப்படை. இந்த வழக்கு குறித்து, நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அறிக்கை தந்திருக்கும் மத்திய அரசு, முத்தலாக் செல்லாது என்று கூறியதோடு நில்லாமல், பொது சிவில் சட்டம் தேவை என்கிற ஒரு விஷயத்தை நோக்கியும் தனது கவனத்தை முன்னெடுத்திருக்கிறது. தனது பன்முகத்தன்மையினால்தான் இந்த நாடு ஒரே நாடாக நீடித்துவருகிறது. இந்தியாவைப் போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாடொன்றைப் பொது சிவில் சட்டத்தின் கீழாகக் கொண்டு வர இயலும் என்று நம்புவது மிக வேடிக்கையான ஒன்று. அது நடைமுறையில் எள்ளளவும் சாத்தியமில்லை. இது மத்தியிலுள்ள ஆட்சியாளர்களும் அறிந்ததுதான்.

முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்
இதில் முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியமும் அதன் தோழமை அமைப்புகளும் மிகக் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்து, “பொது சிவில் சட்டம் தேவை இல்லை. தலாக் போன்ற விஷயங்கள் முஸ்லிம்களின் உள் விவகாரம்: அதில் அரசோ, நீதிமன்றமோ தலையிட உரிமை இல்லை” என்று கடுமையாகச் சொல்லியிருக்கின்றன. ஆனால், இதே அமைப்புகள் பொது அரங்குகளில் இந்த விவாதம் நடக்கும்போது, தலாக்குக்குப் பிறகு, அப்பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குரானில் சொல்லப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் முத்தலாக் நடைமுறை குரானில் உள்ளதுபோல நடைமுறையில் இல்லை என்றும் ஒப்புக்கொள்கின்றன. இந்த முரண்பாடுதான் பிரச்சினையின் மூல வேர். எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் வழக்கத்தில் இல்லாத, ஒரே சமயத்தில் கூறப்படும் முத்தலாக் முறை இந்தியாவில் பல வேளைகளில், நடைமுறையில் உள்ளது என்பதையும், அதனால் தங்களது சமூகத்துப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தே அதைக் கண்டும் காணாமல் புறக்கணித்துவந்திருக்கிறது இந்த அமைப்பு. முத்தலாக்குக்குப் பிறகு, ஜீவனாம்சம் தரலாம் என்று குரானில் கூறியிருப்பதாக பிளேவியா ஆக்னஸ் என்கிற கட்டுரையாளரின் மேற்கோள்களைக் காட்டிப் பொது விவாத அரங்குகளில் பேசும் இஸ்லாமிய அமைப்பினர், இந்த அநீதிகளுக்கு எதிராகப் பல காலங்களாகப் பாராமுகமாக இருப்பது ஏன் எனும் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல மறுக்கிறார்கள். மாற்றத்துக்கான காரணமும் வாய்ப்பும் மார்க்கத்திலேயே இருப்பதாக வாதிடுபவர்கள், இத்தனை காலம் அதைச் செய்யாமல் இருந்தது ஏன்? பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனைக்குத் தீர்வுகாண முன்வராமல் இருப்பது ஏன்?

மோசமான பிம்பம்
இஸ்லாமியச் சட்டங்கள் தெரிந்த வழக்கறிஞர்கள், ஹாஜி, கல்வியாளர்கள், மற்றும் பெண்கள் இணைந்த ஒரு சட்டரீதியான முறையீட்டு மன்றங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலாவது, இந்தப் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்களது தரப்பை முன்வைக்க ஒரு இடமாக அது இருந்திருக்கும். அவர்கள் நீதிமன்றங்களை நாடும் தேவையும் இருந்திருக்காது. அதைக் கூட இந்த முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அமைத்துத்தரவில்லை. இஸ்லாமியச் சமூகத்தில் குர்ஆனுக்கு முரணாக நடைமுறையில் இருக்கும் ஒரே நேரத்தில்  முத்தலாக் போன்ற விஷயங்கள் இரண்டு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஒன்று, இஸ்லாமியப் பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். மற்றொன்று, இந்த நடைமுறைகளால்தான் இந்திய அளவில் இஸ்லாமிய மண விலக்கு குறித்த மோசமான ஒரு பிம்பம் இந்தியப் பொதுச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

நீதிக்கான இடம் நீதிமன்றம்தானே?
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்குச் சொத்துரிமை, பெண் கல்வி ஆகியவற்றுக்கு ஆதரவாகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் பேசிய ஒரு மதத்தின்மீது மோசமான பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? நடைமுறையை மாற்றும் பொறுப்பும் அதிகாரமும் இருந்தும் இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது யார்? இந்த இரண்டு விஷயங்களையும் யார் சரி செய்திருக்க வேண்டும்? மதத்துக்குக் கெட்ட பெயரை உருவாக்கியதில் அந்த அமைப்புகளுக்குப் பங்கு இருக்கிறது அல்லவா? தங்களை அதிகாரம்மிக்கவர்களாக முன்னிறுத்தி, பெண்களின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கியபடி இருக்கிற யாரிடமிருந்தும் தங்களுக்கு நீதி கிடைக்காது என்கிற நிலையில்தான், அந்தப் பெண்கள் அமைப்பு, பாதிக்கப்பட்ட பெண்களின் சார்பாக நீதிமன்றத்தை அணுகிற்று. குடும்பமும் சமூகமும் கைவிட்ட பிறகு அவர்கள் செல்லவிரும்புவது நீதிக்கான ஒரு இடம். அது நீதிமன்றமாகத்தானே இருக்க முடியும்?

மாற்றத்துக்கான குரல்கள்
இஸ்லாமியச் சட்டங்களிலும் நடைமுறைகளிலும் வேறு ஒருவரும் தலையிடக் கூடாது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறுகிறது. ஆனால், சீர்திருத்தும் உரிமைபெற்ற இந்த அமைப்பு, இந்தனை ஆண்டுக் காலமும் என்ன செய்துகொண்டு இருந்தது? இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் தேட வேண்டுமே தவிர, வழக்குப் போட்டவர்கள் மீதோ நீதிமன்றத்தின் மீதோ குறை சொல்வதில் பொருளில்லை. மும்பை ஹாஜி அலி தர்காவில் பெண்கள் நுழையவும் வழிபடவும் உரிமை உண்டு என்று சமீபத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை அடியொற்றி, நீதிமன்றங்கள் வழியே தங்களது உரிமைகளை உறுதிசெய்வதை யாரும் தடுக்க இயலாது என்று இஸ்லாமியப் பெண்கள் இன்று நம்புகிறார்கள்.

இந்திய இஸ்லாமிய அமைப்புகள் பலவும், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து அதிகமும் விலகி இருந்துவிட்டன. ஷாபானு வழக்கின்போதே இஸ்லாமியச் சமூகம் விழித்திருக்க வேண்டும். இப்போது பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு கையிலெடுக்க அவர்களது மத அடிப்படைவாதம் மட்டும் காரணமல்ல. பரிதவித்துக்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் மீதான இஸ்லாம் சமூகத்தின் பாராமுகமும்தான் காரணம் என்பதை இந்த அமைப்புகள் சற்றுத் தீவிரமாகவே யோசிக்க வேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான நடைமுறைகள் மாறித்தான் ஆக வேண்டும். மாற்றத்துக்கான குரல்கள் இப்போது உள்ளிருந்தே உரக்க ஒலிக்கின்றன. நியாயமான இந்தக் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டிய கடமை இஸ்லாமியச் சட்ட அமைப்புகளுக்கு இருக்கிறது. இதைக் கண்டுகொள்ள மறுத்தால், மாற்றத்தைக் காலம் அவர்கள் மீது சுமத்திவிட்டுப் போவதைத் தவிர்க்க முடியாது.

5 comments:

  1. In a non - Muslim country we can not always have ideal life as we wish and as we want to have? ...
    Morever application of Islamic law will be limited ??
    For instance when it comes to punishment laws of Islam we do not have that such of power to apply them. Likewise Isamic laws of trade such as interest dealing is left at individual description..
    This does not mean that we do not apply Islamic law in our life ..
    In Sri Lanka we have freesome to practise our regigion in most cases..
    No country has given freedom to practise Islam as a minority as Sri Lanka???
    We have our own mosques
    We have our school
    Our holidays
    Our training college
    Our raidio program
    Our villagese
    Our Eid holidays
    Our code of dress
    Our Halal food ?
    What is more is we have our own legal court
    Our law of marriage
    Our law of divorce
    Our law of inheritance
    Our law of waqf
    Our law of family maintenance?
    But we may have some conflict in some areas as we say ..
    But generally we all should.respect and follow law ofland in.public matters..
    What is the problem if government want to make some in change of marriage for Muslim girls?
    International law says it is 18
    If so we should follow that..
    Why we need to have different age limit for us alone ?.government need to follow international norms and laws ..
    We should not make a fuss about it ?
    Why should not we follow it ,?
    If not we can have religious marriage before that age and do official marriage at 18 ??
    It is not big deal

    ReplyDelete
  2. those who criticize these moves by the government should first blame themselves for turning a blind eye when injustice happened for women in the hands of the husbands and crooked Kaazi judges.

    I have heard of a Kaadi approving thalaqs upon accepting santhosams from the one party day before the hearing of the case. Also it is a common practice for Kaazi judges to give consultations on the cases days before the hearing. This is a mockery of the oath they have taken up. On what earth judge gives consultation to the party of the case before the case is taken up..(i'm not referring to consultation to the couple with the intention to get them back together). Also I know of a Kazi who got suspended from the service for his autocratics and subsequently continue to pose himself to be the Kazi and perform (this was done with a support of another kazi who would actually do the official documentation which are issued by this kazi)

    When our judges become crooked the justice goes for a six, then one day or the other the voices of the parties affected heard mainstream.. GSP or something else, its our society is the first reason for others to poke nose in our matters.

    ReplyDelete
  3. Approve anyway it will soon வெடிக்கும் by the இலங்கை முஸ்லிம்களாள்

    ReplyDelete
  4. மதலில் நமது நாட்டில் ஷரீயா சட்டங்களை முழுமையாக நிரைவேற்ற முபியுமா என்று யோசித்துபாருங்கள்.கொலைக்கு கொலை செய்யும் சட்டத்தை நம்மால் அமுல் படுத்த முடியுமா?எனவே நமது நாட்டை பொருத்தமட்டில் முடியுமானவரை ஷரீயா சட்டங்களை பின்பற்றுவோம்.அது மட்டுமல்ல நாம் கொடுக்கும் தண்டனைகள்,தீர்ப்புகள் இறைவனது கட்டளைகளுக்கு
    அடிபனிந்தவர்களுக்கே.எவர்கள் இவ்வாறான சட்டங்களை மறுத்து போலீஸ் கோர்ட் எனுறு போகின்றனறோ அவர்கள் இறைவனின் சட்டத்தை மீரிய வழி தவரியர்காவர்

    ReplyDelete

Powered by Blogger.