Header Ads



இது ஒரு, அதிபரின் பேச்சு..!

கடந்த யுத்த காலத்தில் இருந்து முறாவேடை சக்தி வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள கிராமமும் பல்வேறுபட்ட பிரச்சினைக்கு முகம்கொடுத்து வந்த நிலையில், இப்பொழுது தலை தூக்கியிருக்கும் எல்லைக் கிராமங்களிலுள்ள கபாலிகளினால் தமிழ் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொல்லை மிகவும் வேதனையளிக்கின்றது என பாடசாலையின் அதிபர் சா.சுதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்கு உட்ட முறாவேடை சக்தி வித்தியாலத்தின் 125ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தனது விசேட தலைமை உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இக்கிராமத்திலுள்ள முதியோர்கள் மற்றும் மூத்தோர்களினால் தெரிவிக்கப்பட்டதாவது, இக் கிராமம் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் உருவாக்கம் பெற்ற ஒரு பழம்பெரும் கிராமம் என அறிதல் கிடைக்கின்றது.

அந்த வகையில் இன்று இக்கிராமத்தை சகோதர இனத்தவர்கள் கபளிகரம் செய்யும் நடவடிக்கை அதிகளவில் இடம்பெற்று வருகின்றது, இதனை அரசியல் வாதிகள் நிர்வாக உத்தியோகத்தர்கள் பாராமுகம் பாராமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு எம் தமிழ் பேசும் தலைமைகளுக்கு இருக்கு, அதனை செய்துதர வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் எங்களுடைய சிறு மாணவச் செல்வங்களுக்கு எல்லைக் கிராமங்களில் இருக்கும் கபாலிகளினால் பல்வேறுபட்ட தொல்லைகள் இடம்பெறுகின்றது.

எமது அரசியல்வாதிகள் பிட்டும் தேங்காய்ப் பூவும் போல் இருக்கின்றோம் என பேசிக்கொண்டு திரிவதில் எமது தமிழ் சமூகத்திற்கு ஒன்றும் நடைபெறுவதில்லை. இதனால் எங்கள் மாணவச் செல்வங்களும் இந்த முறாவேடை மக்களும் தான் பரிதவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அரசியல் வாதிகளாகிய நீங்கள் எவ்வளவு தான் வேதாந்தங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும், இரவு சுமார் 12 மணிக்கு அப்பால் தமிழ் பிரதேசங்களுக்குள் அத்துமீறி வந்து காணிகளைப் பிடிக்கும் கூட்டம் ஒருபுறம், காணியைப் பிடித்த பிற்பாடு அதனை அகற்றி அது என்னடைய காணி என உரிமை கூறுவது இன்னொருபுறம்.

எனது பாடசாலையில் காலை சுமார் 7 மணிக்கு மணியடித்ததும் காலைக் கூட்டத்தை ஆரம்பித்தால் பாடசாலையின் எல்லையில் நின்று கொண்டு கீழாடையை உயர்த்திக் காட்டும் கூட்டம் ஒருபுறம்.

இன்னொரு புறத்திலே இந்த பாடசாலை 5ஆம் தரத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கறுவாக்கேணியான தாய்ப் பாடசாலையை நோக்கிச் செல்லுக்கின்ற வீதியிலே எங்களுடை மாணவர்களாகிய சின்னச் சிறார்களை கையிலே பிடித்து பற்றைக்குள் இழுத்துச் செல்லும் ஒரு கபாலிக் கூட்டம் ஒருபுறம்.

ஏன் மாலைநேர பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திக் கொண்டிருக்கும் சமயத்திலே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதே நிலையை காட்டும் கபாலிக் கூட்டம் ஒருபுறம்.

எங்கள் காளி கோயிலிலே வெள்ளிக் கிழமை வேளை பூசாரியாரோ அல்லது பக்தர்களளோ சென்றால் அங்கு வெட்டப்பட்ட மாட்டு இறைச்சி, எழும்பு, தோலுமாக கிடக்கும் ஒருபுறம் இவ்வாறான அவல நிலை ஏன் இந்த கிராமத்துக்கு என்று நான் கேட்கின்றேன். எனது தமிழ் மக்களின் அவலை நிலை மாறாவேண்டுமென நான் இத்தனை விடயங்களையும் முன்வைக்கின்றேன்.

குறித்த கபாலித்தனத்தையும் கபாலிக் கூட்டத்தையும் யாவருக்கும் தெரிந்தது, யார் செய்கின்றார்கள் என்பதும் தெரிந்தது. குறித்த விடயங்களுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆகவே தான் இங்கு வந்திருக்கும் பெரியோர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இரு சமூகங்களின் அரசியல் தலைகைள் அனைவரும் சேர்ந்து குறித்த விடயத்திற்கு ஒரு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தரவேண்டும்.

இதனால் அப்பாவி மக்கள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றார்கள், ஆனால் மேலானவர்கள் மேலிடத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

10 comments:

  1. கீழ்த்தரமான பேச்சு.

    ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய ஒழுக்க, விழுமியங்கள் கூட இவருக்குத் தெரிவதில்லை.

    யார்தான் இவரை பாடசாலை அதிபராகத் தேர்ந்தெடுத்தார்களோ தெரியாது.

    ReplyDelete
  2. கபாலிகள் யார்

    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் சாரனை கிளப்பி காட்டும் இனம் ஒன்றே ஒன்று தான்

      Delete
  3. Principal's speech must be taken into paramount consideration.
    All the immoral public enemies should be given due punishment or finish them off in the way of Philippines president.

    ReplyDelete
  4. முள்ளிவாய்க்காலில் கோவணத்தைக் காட்டிய இனத்தை பாடசாலை அதிபர் விளக்குகிறார்.

    ReplyDelete
    Replies
    1. அளுத்கமமவில் என்ன காட்டினீர்கள்

      Delete
  5. @ Gowri stop ur racist rants. If it's Muslims
    Who is doing this, no one should be sympathetic or protect them sort of idiots and they can't be real Muslims. They should severe punishments.

    ReplyDelete
  6. என் இனிய நண்பர்களே சின்ஹல இனவாதிகளினால் பல பள்ளிகள் உடைக்கப்பட்டன . பல கோடி பெறுமதியான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது புலிகளினால் அப்பாவி உயிரிகள் காவு கொள்ளப்பட்டது. முஸ்லிம்களால் என்தே இனத்துக்கும் என்தே சேதமும் இது வரை இழைக்கவில்லை எனவே மகேந்திரன் கோவரிசங்கர் சொல்லுவது அவர் இனத்துக்கே உங்கள் வார்த்தை யாருக்கு சொல்லபடுகுது என சிந்துயுங்கள் 24 மணிநேரத்துக்கும் 150 ரூபா மாத்திரம் கொண்டுசெல்ல பணித்து முஸ்லிம்களை வெளியேற்றிய காவு கொண்ட பாசிச புலிகளே நீங்கள் எனவே அதட்காக எல்லா தமிழ் மக்களும் தப்பானவர்கள் அல்ல உங்கள் இன எழுச்சிக்காக உருவாக்கப்பட்ட புலிகளே உங்களையும் அழித்தது எனவே நீங்களும் அவ்வாறு இல்லாமல் சமாதானதுக்கா உழையுங்கள் உங்கள் இன நலவுகளை மேம்படுத்தும் வழிகளை சிந்துயுங்கள் நாங்களும் கை கொடுக்குறோம் அதை விட்டு விட்டு இனபிரச்சனை தீ மூட்டி குளிர் காயா எண்ணி பார்க்க வேண்டாம் 3 தசாப்தங்களாக யுத்தத்தின் மூலம் ஏற்றப்பட்ட அழிவுகள் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு போதும் ஒற்றுமைக்கு குரல் குடுக்கும் வழியை சிந்துயுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. பாசிச. ஜிகாத்கள் நீங்கள்.

      Delete
  7. இதை விட படு கேவலமாக இந்தியாவில் நடப்பதாக பொய்ச்செய்திகள் பிரசுரித்து அதட்கு மகா கீழ்த்தனமான வார்த்தைகளால் கருத்துக்களை பதிவுசெய்யும் கீழ்த்தனம் யாருக்கு வரும்?

    ReplyDelete

Powered by Blogger.