Header Ads



சவூதியின் வீடமைப்புத் திட்டம் - ஜனாதிபதி, பிரதமர் மட்டத்தில் விசாரணை

நுரைச்சோலை சுனாமி வீடமைப்பு திட்டத்தின் வீடுகள் பகிர்ந்தளிப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலக மட்டத்திலான விசாரணை முடிவுற்றதும் பாராளுமன்றத்துக்கு பதிலளிக்கப்போவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவிப்பு!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உத்தரவின்  பேரில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம் சல்மான் கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மேற்படி விடயம் சம்பந்தமாக  எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கைலே உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன மேற்படி பதிலளித்துள்ளார் .

சவூதி அரேபிய நிதியுதவி  மூலம் நுரைச்சோலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள (சுனாமி )500 வீடுகளையும் , பகிர்ந்தளிப்பது சம்பந்தமாக இலக்கம் – 178/2008 கொண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அவ்வீடுகளை பகிர்ந்தளிக்க அம்பாறை அரசாங்க அதிபர் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா ?  என்பதாகவே சட்டத்தரணி  சல்மான் எம்.பி  பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தார் .

2009/12/02 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கியிருந்த போதிலும் ஆறு வருடங்களாக இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்படாமலேயே, இருந்துள்ளது .

இதுவிடயமாக தற்போதே ; ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்தின்  கவனம் திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது . 

- அப்ஹம் என் ஷபீக்- 

2 comments:

  1. So-called good governance must act immediately to prorate the houses.

    ReplyDelete
  2. நல்லாட்சி அரசிலாவது நீதம் கடைக்குமா???? ஏன் காலதாமதம் பாதிக்கப்பட்டால் தானே அதன் உண்மை உணர்வுகள் புரியம் அதிகாரிகளுக்கும் அரசியல் அல்லககைகளுக்கு என்ன!! ஏன் இனனும் இவர்களது விடயத்தில்இழுத்தடிப்பு

    ReplyDelete

Powered by Blogger.