Header Ads



மைத்திரிபாலவின் பதவிக்காலத்துடன், நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும் - ரணில்

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலத்துடன் ஒழிக்கப்படும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஓக்லாந்து நகர சபையில் அளிக்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு, அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா பிரதமர்,ரணில் விக்கிரமசிங்க,

“ நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு நாம் எதிர்பார்த்திருக்கிறோம்.

எனினும், நிறைவேற்று அதிகார அதிபர் முறைக்குப் பதிலாக எத்தகைய ஆட்சி முறையைக் கொண்டு வருவது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை.

எவ்வாறாயினும், இதன் அதிகாரங்கள் அனைத்தையும் நாடாளுமன்றத்துக்கு அல்லது  தேசிய சட்டசபை, செனட் சபை மற்றும் மாகாணசபைகளுக்கு மாற்றுவது குறித்து கலந்துரையாடப்படுகிறது” என்று தெரிவித்தார்.

3 comments:

  1. Why abolish presidency ? What is the best suitable
    explanation ? Simple answer is : OUR MEN ARE SO
    ABUSIVE OF POWER . THIS GOES RIGHT EVEN FOR AN
    OFFICE BOY . FROM HEAD TO TOE , 98 % OF PUBLIC
    SERVICE IS CORRUPT. Abolishing Presidency alone
    can not bring the situation to normal. We are a
    country of thieves at every given opportunity.
    That is the strength of Mahinda . All thieves
    in the country are with Mahinda opposing any
    move that will try to put the country on the
    right track . Those who thrive on corruption
    supported by power abusive politicos are in
    majority . Don't forget that My3 Ranil also
    came to power with the offer of RS 10,000.
    allowance to public servants' salary pack.
    What is the guarantee that Mahinda won't
    offer more at the right time ? So,hurry up
    and send them all to "AUNTY'S BOARDING."

    ReplyDelete
  2. நிறைவேற்று அதிகாரம்
    நிறைவேற முன்னால்
    நிறைவேற்ற வேண்டியவை
    நிறைவேற்றா விட்டால்
    நிறைவற்றோரே நாமெல்லாம்!



    ReplyDelete
  3. It will be the end of MY3

    ReplyDelete

Powered by Blogger.