Header Ads



தில்ருக்சியின் ராஜினாமாவுக்கு, ஹெல உறுமய சொல்லும் காரணம்

மத்திய வங்கி முறிவிற்பனை விடயத்தில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே லஞ்ச ஊழல்கள் எதிர் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவிவிலகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, பல குற்றச்சாட்டுக்களில் உண்மையை குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க தவறியுள்ளது. இது தில்ருச்சி அரசியல் பின்புலத்தில் செயற்படும் நிர்வாகத்திறமையற்றவர் என்பதை உணர்த்துகிறது.

இந்தநிலையில் கோப் குழுவின் விசாரணை அறிக்கையின்படி மத்திய வங்கி முறி தொடர்பில், அரசியல் ரீதியாக அவர் பலத்த சங்கடங்களை எதிர்நோக்குகிறார். எனவேதான், தருணம் பார்த்து அவர் பதவிவிலகியுள்ளதாக வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திலருக்சியின் பதவிவிலகலுக்கான காரணம் கண்றியப்படாதபோதும், ஜனாதிபதியின் குற்றச்சாட்டு காரணமாகவே அவர் பதவிவிலகினார் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.