Header Ads



இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு, சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த வகையில் 37 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த பயங்கரவாத தடைச்சட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில் மனித உரிமை காப்புவிடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளன என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

புதிய சட்டம், 1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்ததாகவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.