October 07, 2016

குப்பி விளக்கில் படித்தேன், செருப்­பு­டன்தான் பாட­சாலை சென்றேன் - ஜனாதிபதி உருக்கம்

நான்  எனது கிராமப் பாட­சா­லை­யி­லேயே பயின்றேன். எனது வீட்டில் மின்­சாரம் இல்லை. குப்பி விளக்­கொ­ளி­யி­லேயே  நான் பாடங்­களைப் படிப்பேன். அரைக்­காற்­சட்டை, செருப்­பு­டன்தான் பாட­சாலை செல்வேன் என்று  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

சர்­வ­தேச ஆசி­ரியர் தினத்தை முன்­னிட்டு கொழும்பு தாமரைத் தடாக மண்­ட­பத்தில் நடை­பெற்ற "குரு பிர­தீபா பிரபா "விருது வழங்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். ஜனா­தி­பதி மேலும் உரை­யாற்­று­கையில், 

எமது நாட்டு கல்­வித்­து­றையில் எவ்­வ­ளவோ மாற்­றங்கள் செய்ய வேண்­டி­யி­ருக்­கி­றது. பாட­சா­லை­களில் பிள்­ளை­களைச் சேர்ப்­ப­தி­லி­ருந்து பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. நான் அண்­மையில் வழி­பாடு ஒன்­றுக்­காக கதிர்­காமம் சென்றேன். அப்­போது அங்கு வழி­பாட்டில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்த இளம் பெண்­மணி ஒருவர் ஓடி­வந்து நான் தெய்­வத்­திடம் வேண்­டியபடியே நீங்கள் இங்கு வந்து விட்­டீர்கள். எனது பிள்­ளையை ஒரு பாட­சா­லையில் சேர்க்க வேண்­டினேன். எப்­ப­டி­யா­வது என் பிள்­ளையை ஒரு பாட­சா­லையில் சேர்த்துத் தாருங்கள் என்று அழாத குறை­யாக முறை­யிட்டார். இதி­லி­ருந்து பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைச் சேர்ப்­ப­தி­லுள்ள குறை நிறை­களைப் புரிந்து கொள்ள முடி­கி­றது. எனவே  நடை­மு­றை­யி­லுள்ள சிக்­கல்­க­ளுக்கு தீர்வு காணும்­படி கல்­வி­ய­மைச்சைப் பணித்­தி­ருக்­கிறேன். 

ஆசி­ரியர் தொழில் என்­பதை விட "ஆசி­ரியர் சேவை" என்ற பதமே மிகவும் பொருத்­த­மாகும். இந்தப் பணி­யி­லுள்ள  நெளிவு சுளி­வு­க­ளையும் நான் சிறு வய­தி­லி­ருந்தே நன்கு அறிந்­தி­ருக்­கிறேன். ஏனெனில் எனது தாய் ஆசி­ரியர் தொழிலில் ஈடு­பட்­டவர். களுத்­துறை, கம்­பஹா என்று நாட்டின் பல பாகங்­க­ளிலும் உள்ள பாட­சா­லை­களில் கற்­பித்­தி­ருக்­கிறார். தனது சொந்த பிர­தே­சத்­திற்கு இட­மாற்றம் கோராது தனது பொறுப்பை உரிய பாட­சா­லை­க­ளில் செய்தார். ஆசி­ரியப் பண்பு அப்­ப­டித்தான் இருக்க வேண்டும். அப்­போ­துதான் அவர்­களால் உரு­வாகும் பிள்­ளை­களும் நல்ல சீலர்­க­ளாக உயர்­வார்கள். 

நானும் எனது கிராமப் பாட­சா­லை­யி­லேயே பயின்றேன். எனது வீட்டில் மின்­சாரம் இல்லை. குப்பி விளக்­கொ­ளி­யி­லேயே  நான் பாடங்­களைப் படிப்பேன். அரைக்­காற்­சட்டை, செருப்­பு­டன்தான் பாட­சாலை செல்வேன்.  ஒரு­முறை எனது வகுப்பு மாண­வர்கள் புரிந்த கலாட்­டாவில் ஆசி­ரியர் என்­னைத்தான் குற்­ற­வா­ளி­யாகக் கண்டு கொண்டார். ஆனால் நான் தவ­று­களில் ஈடு­ப­ட­வில்லை. என்­றாலும் என்னை அதிபர் அறைக்குக் கூட்டிச் சென்று பிரம்­பினால் அடித் தார். அதிபர் அறையில் சில நிமி­டங்கள் அடைத்து வைத்­தி­ருந்தார். ஆனால் அதனை நான் வீட்டில் வந்து முறை­யி­ட­வில்லை. அப்­படி முறையிட்­டாலும் ஆசி­ரியை என்ற வகையில் எனது தாய் என்­னைத்தான் மீண்டும் தண்­டிப்பார்.  இன்று நிலைமை எப்­படி?-ஆசி­ரியர் தண்­டித்­த­தற்­காக பொலிஸ் நிலையம், நீதி­மன்றம் என்­றெல்லாம் செல்­கி­றார்கள். ஆசி­ரியர் பிள்­ளை­களை நல்­வ­ழிப்­ப­டுத்­த­வேதான் தண்­டிக்­கவும் கண்­டிக்­கவும் செய்­கி­றார்கள். 

பிள்­ளைகள் பெரும்­பா­லான நேரங்கள் பெற்­றோ­ருடன்  தான் இருக்­கி­றார்கள். சில மணி நேரங்­களே ஆசி­ரியர் பொறுப்பில் இருக்­கி­றார்கள். அந்த சில மணி­நேர உழைப்­பி­லேயே நாட்­டுக்குத் தேவை­யான நல்ல பிர­ஜை­களை உரு­வாக்கித் தரும் பாரிய பணி அவர்­களால் நிறை­வேற்­றப்­ப­டு­கி­றது. இதற்கு அவர்கள் எவ்­வ­ளவோ அர்ப்­ப­ணிப்புச் செய்­கி­றார்கள்.  நாடு வேண்டி நிற்கும் சமூ­க­மாற்­றத்தை மாணவர் மனதில் விதைக்கச் செய்யும் பணியை ஆசி­ரி­யர்­களால் தான் நிறை­வேற்ற முடி­யு­மா­கி­றது. 

அரசின் கொள்­கை­களைச் செயற்­ப­டுத்த அர­சி­யல்­வா­தி­களால் இய­லாது. அதற்­காக ஒவ்­வொரு துறை­க­ளிலும் கல்­வி­பெறும் மாண­வர்­க­ளால்தான் அரசின் திட்­டங்கள் அமு­லாக்கம் பெறு­கின்றன. அதனால் தான் இந்­நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு எமது அரசு முன்­னு­ரிமை கொடுத்து செயற்­ப­டு­கி­றது. 

நான் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த காலத்­தில் நாட்டின் பல பாகங்­க­ளுக்கும் சென்­றி­ருக்­கிறேன். அப்­ப­டி­யொரு சந்­தர்ப்­பத்தில் வவு­னி­யாவில் பாட­சா­லை­யொன்றில் க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்­றிய 35 மாண­வர்­களும் சித்­தி­ய­டை­ய­வில்லை என்றும் அதற்கு ஆசி­ரியர் பௌதிக­வள குறை­பா­டு­களே காரணம் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­பட்­டது. 

பின்­தங்­கிய பகு­தி­க­ளுக்கு வளங்கள் வந்­த­டை­வ­தில்லை என்ற குறையும் நில­வி­வ­ரு­கி­றது. எனவே எமது ஆட்சிக் காலத்தில் வளங்கள் சம­மாக நாட்டின் நாலா பகு­தி­க­ளையும் சென்­ற­டைய வேண்டும் என்­பதில் நான் உறு­தி­யாக இருக்­கிறேன். ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் பௌதிக வளங்கள், ஆளணி வளங்கள் சம நிலையில் பகிர்ந்­த­ளிக்­கப்­பட வேண்டும் என்று கல்வி அமைச்சைப் பணித்­தி­ருக்­கிறேன். 

ஆசி­ரியர் தினத்தில் ஆசி­ரி­யர்கள் எல்­லோரும்  கௌர­விக்­கப்­பட வேண்டும். பெற்றோர் 3–4 பிள்­ளை­க­ளைத்தான் பரா­ம­ரிக்­கின்­றனர். ஆனால் ஆசி­ரி­யர்கள் 40 –50 பிள்­ளை­களை அதுவும் அதிபர் ஆயி­ரத்­திற்கு மேற்­பட்ட பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்கும் பாரிய பொறுப்பில் இருக்கிறார்கள்.   எனவே இத்தினத்தில் எனது மேலான வாழ்த்துக்களை அவர்களுக்குத் தெரிவிக்கிறேன். நாட்டின் சுதந்திரம், மேலான ஜன நாயகத்தை நாம் அனைவரும் நல்ல முறையில் அனுப விக்க நற்பிரஜைகளை உருவாக்கித் தரும் ஆசிரிய சமூகம் வாழ வாழ்த்துகிறேன் என்­றார்.

5 கருத்துரைகள்:

மஹிந்தவை பெரும்பாலான முஸ்லிம்கள் வெறுக்க காரணம் இரண்டு அவரின் செயல்களால் தான் முதலாவது பொதுபலசேனா உருவாக்கம் ரெண்டாவது ரகர் வீரனின் மரணம் மேட்ஸோன்னவை நடைபெறாமல் இருந்து இருந்தால் உண்மையிலே அவர் சிறந்தவர் தான் நாட்டை கடன்பெற்று பணத்தை கொள்ளையிட்டு சரி நாட்டை அபிவிருத்தி பாதையில் எடுத்து சென்றார்.

மைத்திரி நல்லம் ஆனால் பேச்சு மட்டும் தான் விஷயம் ஒன்றுமில்லை.

We too studied some time no lamp and walked to school more than 3km back and forth without bata.

This is not sacrifice as far as our country situation was concerned. As the president of the country he must find the best ways to develop the country but it's seems prime minister is taking upper hand always.

I would like to ask that still the president live a poverty stricken life?

Post a Comment