Header Ads



அலெப்போவில் நிலவும் பயங்கர நிலையை, முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - யுனிசெப் அழைப்பு


சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.

இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 7 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சண்டை நிறுத்தம் அறிவித்தனர்.

ஆனாலும், அலெப்போ நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் இருதரப்பினரும் உடன்படிக்கையை மீறி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அலெப்பே நகரில் நிலவும் பயங்கரமான நிலைமையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் எனப்படும் யுனிசெப் அழைப்புவிடுத்துள்ளது.

அலெப்பேவில் நிலவி வரும் பயங்கரமான சூழல் மனிதநேய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு நகரை துண்டாடி உள்ளதாக சிரியாவிற்கான யுனிசெப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அலெப்போ பகுதியில் நடைபெற்றுவரும் விமான தாக்குதல்களுக்கு முடிவுகட்டி, அங்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்தவும், மனிதநேய அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் பிரான்ஸ் கொண்டுவந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தால் ரஷியா முறியடித்தது.

No comments

Powered by Blogger.