Header Ads



சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின், மனிதாபிமானச் செயற்பாடு..!

இலங்கை பிரஜை என்று கூறி சவூதி ஜெட்டாவில் பணி செய்து வந்த இந்திய பெண்ணுக்கு அவரின் வேலை கொள்பவர் வழங்காத 45ஆயிரம் தினார் நிலுவைகளை இலங்கையின் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.

சென்னையை சேர்ந்த செல்லமுத்து கேதீஸ்வரி என்ற இந்தப்பெண், சவூதிக்கு 2003ம் ஆண்டில் இலங்கையர் என்ற கடவுச்சீட்டில் அனுப்பப்பட்டுள்ளார்.

ஸெரீனா சாலி என்ற முஸ்லிம் பெயரிலேயே அவர் சவூதிக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

போலி ஆவணங்களை சமர்ப்பித்தே இலங்கையின் குடிவரவு திணைக்களத்தில் அவர் கடவுச்சீட்டை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரின் தகவல்படி தம்முடன் மேலும் இரண்டு பெண்கள் இதேபோன்று குவைத்துக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த செயற்பாடுகள் தெளிவாக மனிதக்கடத்தல் நடவடிக்கைகள் என்று சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் மனிதாபிமான அடிப்படையில் ஜித்தாவில் உள்ள இலங்கை தூதுவர் மக்கீன், குறித்த பெண்ணின் வேலை கொள்வோருடன் பேசி அவருக்கு வழங்கப்படாமல் இருந்து சம்பள நிலுவையை பெற்றுக்கொடுத்ததாக அரப் நியூஷ் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த பெண் இலங்கையை சென்றடைந்ததும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

மனித கடத்தலுக்கு பின்னால் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் முகமாகவே இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக மக்கீன் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. சவூதீயில் தினார் சம்பலமா? புதிதாக இருக்கே?

    ReplyDelete

Powered by Blogger.