Header Ads



சிரியாவில் உடனடியாக போரை நிறுத்துங்கள் - போப் வேண்டுகோள்

சிரியாவில் விமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களை வெளியேற்றும் வரையில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், சிரியா அரசுக்கு ஆதரவாக செயல்படும் ரஷியா, கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் அலெப்போ நகரம் மீது தொடர்ந்து குண்டு வீசி சிதைத்து வருகிறது. சமீபத்தில் நடந்த குண்டு வீச்சில் சுமார் 150 பேர் பலியாகினர். நேற்று நடந்த குண்டு வீச்சில் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர். ஏராளமான பொதுமக்கள் பலியாவதால் மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துவருகின்றன.

இந்த பதட்டமான சூழ்நிலையில் சிரியாவில் உடனடியாக போர்நிறுத்தத்தை அமல்படுத்தவேண்டும் என போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாடிகனின் பீட்டர் சதுக்கத்தில் நடந்த வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் பேசுகையில், சிரியாவில் மனிதாபிமானமற்ற முறையில் நடக்கும் சண்டையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிக்க விரும்புகிறேன். அத்துடன் உடனடியாக போரை நிறுத்த வேண்டும். விமான குண்டுவீச்சில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களை வெளியேற்றும் வரையிலாவது போர்நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும்.” என்றார்.

2 comments:

  1. போப் ஆண்டவரின் உபதேசத்தையாவது இந்த கொலைகார வல்லரசுகள் கேட்டு தலைசாய்க்கும் என்பது எமது பணிவான எதிர்பாா்ப்பு.

    ReplyDelete
  2. எல்லாம் முடிந்தபின் அறிக்கை வெளியிட - போப்பிற்கு ஞானம் வந்திருக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.