Header Ads



முந்திய ஒரு வருடத்தின் பாவங்களை போக்கும், ஆஷூரா நோன்பு நோற்போம்


-Ash-Sheikh TM Mufaris Rashadi-

முந்திய ஒரு வருடத்தின் பாவங்களை போக்கும் ஆஷூரா நோன்பு நோற்போம்.

ஆஷுரா நோன்பு அதற்கு முந்திய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என நான் கருதுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்

ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்

எனவே முஹர்ரம் மாத்தின் ஒன்பதாம் மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்த வழிமுறையாகும்.

1 comment:

  1. بارك الله فيك ،الدين النصيحة

    ReplyDelete

Powered by Blogger.