Header Ads



எம்முடன் இருந்த முஸ்லிம்களை பிரித்துவிட்டார்கள் - இதுதான் உண்மை என்கிறார் மஹிந்த

எந்த இனத்திற்கும் அநீதி ஏற்பட இடமளிக்க போவதில்லை எனவும் தான் ஒரு இனவாதி அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் சில அடிப்படைவாதிகள் இனவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை  தனது அலுவலகத்தில் சந்தித்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கடந்த தேர்தல்களில் நாட்டிற்குள் தவறான விடயங்களை பரப்பினர். முஸ்லிம் மக்கள் மத்தியில் மாத்திரம் அல்ல, சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் இந்த தவறான விடயங்களை கொண்டு சென்றனர்.
நாங்கள் எப்போதும் தமிழ் மக்களுடன் போரிடவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளுடனேயே போரிட்டோம்.

முஸ்லிம் மக்களை வடக்கில் இருந்து விரட்டிய போதும், கிழக்கில் இருந்து விரட்ட முயற்சித்த போது ஒரு மாதத்திற்குள் நாங்கள் முஸ்லிம் மக்களை மீண்டும் மூதூருக்குள் அனுப்பினோம்.

யாருடைய காலத்தில் அந்த சுதந்திரம் கிடைத்தது? பேருவளை , அளுத்கம சம்பவங்கள் நடக்கும் போது, நான் மற்றும் கோத்தபாயவும் வெளிநாட்டில் இருந்தோம். சம்பவத்தை அடுத்து முஸ்லிம் அமைச்சர்களை அனுப்பினோம். நாடு திரும்பிய பின்னர், நானும் அங்கு சென்றேன்.

இந்த சம்பவத்தின் பின்னர், தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நாங்கள் இருப்பதாக பிரச்சாரம் செய்தனர்.

எம்முடன் முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்திருந்த போது, அவர்களை எம்மிடம் இருந்து பிரித்து அடுத்த பக்கம் சேர்க்க மேற்குலக நாடுகள் செய்த சூழ்ச்சிக்குள் நாம் சிக்கினோம். இதுதான் உண்மையான கதை.

நான் எந்த இனத்திற்கு அநீதி இழைத்ததில்லை. நான் இனவாதியல்ல. இனவாதியாகவும் மாறமாட்டேன். நாட்டில் உள்ள அனைத்து இனங்களும் சுதந்திரமாக வாழவே போரை முடிவுக்கு கொண்டு வந்தேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. முஸ்லீம்களும் தமிழர்களும் ஆட இடம் கொடுக்க முடியாது என்று சொன்னது யாரு??
    புலிகள் மற்றும் பாதாள குழுக்களை ஒழித்த உங்களுக்கு நீங்கள் கூறும் சிங்கள அடிப்படைவாதிகளை பற்றி அப்பொழுது வாய் திறக்க முடியாமல் போனது ஏன்? Bbs இடம் வாக்கு வங்கி உள்ளது என்று நினைத்து அவர்கள் செய்த அநியாயத்தை கண்டும் காணாதது போல் இருந்தீர்கள். இப்பொழுது தான் முஸ்லிங்களின் வாக்கு தேவை படுகின்றதா?

    ReplyDelete
  2. ஞானசாரரையும் BBS ஐயும் இனவாதிகள் என்றும் சட்டத்துக்கு முரணாக செயட்பட்டார்கள் என்று சொல்லுவதட்கு தயங்கும் நீங்களும் உங்கள் சகோதரர் கோத்தபாயவும் இந்த இனவாதிகளுக்கு பின்னால் நின்று இயங்கிவர்கள் என்பதையே சுட்டி காட்டுகிறது. இலங்கையின் வரலாற்றில் அதிகார துஸ்பிரயோகமும், ஊழலாலும், சட்டம் ஒழுங்கும் சீர்குலைவும் உமது அரசாங்கத்திலேயே நடந்தேறியது என்பது இந்த உலகத்துக்கே புரிந்த விடயம். இவற்றையெல்லாம் தெரிந்தும் உம்மை சுற்றி நிக்கும் இந்த கூட்டம் மாபெரும் சுயநல கும்பல்களே.

    ReplyDelete
  3. Muslim makkalin trohi SATHTHAR ASWER MUBARAK MAULAVI Pondrawargal than unakku waakku taruwargal.ALUTHGAMA MUSLIMGALAI KAPPATHTHA MUDIYATA UNAKKU AEN WAKKU TARA WENDRUM.ENNUM MUTTAL AAHA MUDIYATHU.

    ReplyDelete
  4. දමල වෙව මුස්ලිම් වෙවා මෙ රටෙ නටන්ට බෙ කිව්ව කවුද தமிழனும் ,முஸ்லிமும் இந்த நாட்டில் ஆட்டம் போட முடியாஎன்று சொன்னது இனவாதம் இல்லாமல் மதவாதமா?உன்னோடு இப்போது கூட இருக்கும் கூட்டம் முஸ்லிமா என்று நாங்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம்

    ReplyDelete
  5. மேற்குலக நாடுகள் செய்த சூழ்ச்சியின் உள்ளூர் சூத்திரதாரிகளான பொதுபலசேன வை ஏன் இன்னும் நீங்கள் எதிர்க்காமல் இருக்கிறீர்கள்?

    ReplyDelete

Powered by Blogger.