Header Ads



வடக்கு முஸ்லிம்களின் அவலங்கள் - றீட்டாவிடம் 3 ஆவணங்களை கையளிப்பு

-பாறுக் ஷிஹான்-

ஐ. நா வின் சிறுபான்மையினரின் விடயங்களை கவனிப்பதற்கான பிரதிநிதி  ரீட்டா ஐசக்கினை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் செயலாளரும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மக்கள் பணிமனைத் தலைவரும் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினருமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பு இன்று(19)    ஐ.நா வின் கொழும்பு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது இலங்கையில்  சிறுபான்மை சமூகமான முஸ்லிம் மக்களின் நிலைமைகளை விளக்கியதுடன்  இலங்கையின் வட மாகாணத்தில் 1990க்கு முன்னர் 95% தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் 5%வீதம் முஸ்லிம்கள் வாழ்ந்துவந்தனர். 1990 ஒக்டோபர் இறுதி வாரத்திலிருந்து முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக வட இலங்கையிலிருந்து முழு முஸ்லீம் மக்களும்  புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டமை குறித்து இதன் போது சுட்டிகக்காட்டப்பட்டது.

அத்துடன் இந்த  உலக வரலாற்றில் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட மிகமோசமான சமூகமாக வட இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர் எனவும்  ஆனால் உலகம் இவர்களின் பிரச்சினையை கண்டு கொள்ளாதது கவலையளிக்கின்றது. 

 மேலும் இலங்கை இனப்பிரச்சினைவரலாற்றில் எந்த ஒரு சமூகமும் இப்படியொரு அனுபவத்தைப் பெற்றிருக்கவில்லை. 1983 இனக்கலவரத்தில் தென் பகுதியைவிட்டுச் சென்றதமிழ் மக்கள் மிகக் குறுகிய காலத்தில் அவர்களது சொந்த இடத்திற்கு திரும்பிவிட்டனர். ஆனால்  இப்பொழுது 26 வருடங்கள் கழிந்தும் வட இலங்கை முஸ்லிம் மக்கள் தங்கள் சொந்த இடத்திற்கு கௌரவமுகமாகவும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் திரும்பமுடியவில்லை.

 தங்களுடைய இலங்கை விஜயத்தையிட்டு வட இலங்கை சிறுபான்மை முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  தாங்கள் எமதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு வந்து தங்கள் குறைகளை கேட்டறிவீர்கள் என எதிர்பார்த்தனர். ஆனால் அது ஏமாற்றமாகவே போய்விட்டது. எனினும் தங்களை நேரடியாகச் சந்தித்து எமது மக்களின் பிரச்சினைகளை முன் வைக்க நேரத்தை ஒதுக்கியதற்கு மிகவும் நன்றி. இச்சந்தர்ப்பத்தில் மூன்று ஆவணங்களை தங்களிடம் கையளிக்கின்றேன்.

இதில் முதலாவதில் விடுதலைக்கான தேடல்வடக்கு முஸ்லிம்களின் கதை  வடக்கு முஸ்லிம்களுக்காகதேடல்  இரண்டாவது வடக்குசிறுபான்மை முஸ்லீம்களின் சோகங்களும் சட்டரீதியாகஎதிர்பார்க்கப்படும்  தீர்வும்  மூன்றாவது வட இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய வாழ்விடங்களின் கண்ணீர் காட்சிகள் ஆகும்.

இந்த ஆவணங்களில் வட இலங்கை முஸ்லீம்களின் பூர்வீக வரலாறு தென் இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டவிதம் வெளியேற்றத்தின்  பின் வடமாகாண முஸ்லிம்களின் இடப் பெயர்வு மீள்குடியேற்றச் சவால்கள் போன்ற அனைத்து விடயங்களிலும்  எவ்விதமாக படுமோசமான மனிதஉரிமைமீறல்களுக்கு இம் மக்கள் ஆளாகியுள்ளனர் என்பதையும் தற்போது வடக்கு முஸ்லிம்களுக்குத் தேவையான பொருத்தமான பாதுகாப்பு சொந்தமண்ணில்  கௌரவத்துடன்  வாழ்வதற்கான உரிமை இபொருத்தமான மீள் குடியேற்றம்  சொத்து இழப்புக்கான  நஷ்டஈடு நிர்மானம் உட்கட்டமைப்பு மற்றும் அரசியல்  பிரதிநிதித்துவம் காணி கல்வி  தொழில் வாய்ப்பு  சமூக முன்னேற்றத்திற்கான வேலைத்திட்டம்  இனங்களுக்கிடையிலான உறவு இவற்றுக்கான சட்டரீதியான உத்தரவாதங்கள் ஏற்பாடுகள்  எவ்வாறு அமைய வேண்டும் என்பனபற்றி எடுத்துக்  கூறப்பட்டுள்ளது.

இவ்விடங்களை  இலங்கை அரசாங்கமும் வலியுறுத்துவதோடுதங்களுடைய 2017ம் ஆண்டுஅறிக்கையிலும் இவ்விடயங்களைஉள்ளடக்கி ஐ.நா. மன்றத்திதல் சமர்ப்பிக்கவேண்டும் என்பதுடன் இவ் அறிக்கையின் பிரதியும் எமக்கு கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என விளக்கிக் கூறினார்.

 இதனை அடுத்து ஐ. நா வின் சிறுபான்மையினரின் விடயங்களை கவனிப்பதற்கான பிரதிநிதி  ரீட்டா ஐசக்கினை  வட பகுதி முஸ்லீம்கள் பற்றியும் அவர்களது பிரச்சினை குறித்தும்  ஆராய்வதாகவும் இது தொடர்பாகதனதுகவனத்தைசெலுத்துவதா கவும்மூறியதுடன் ஏதும் அவசரம்  இருப்பின் தனது மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கும்படியும் நம்பிக்கையுடன் இருக்குமாறு இச்சந்திப்பில் கேட்டுக் கொண்டார்.

இதன் போது  மூன்று ஆவணங்கள் அடங்கிய மகஜர் ஒன்று   ரீட்டா ஐசக்கினிடம்  மௌலவி பி.ஏ.எஸ் சுபியானினால்கை யளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. சுபியான் சாஹிபுக்கு ஜசாக்கல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.