October 27, 2016

முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைப்பது, ரணில் - மைத்திரி செய்யும் துரோகம்

ஜி எஸ் பி சலுகைக்காக முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைப்பது ரணில் மைத்திரி அரசாங்கம் முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என்பதுடன் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் உலமா சபையும் ஒன்றிணைந்து இதனை நிறுத்த முன்வரவேண்டுமெனவும்  உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கட்சி தலைமையகத்தில் நேற்று இரவு அவசரமாக கூடிய உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஆட்சிக்காலத்தில் நீதி அமைச்சராக ரஊப் ஹக்கீம் இருப்பதை சாதகமாக வைத்துக்கொண்டு சியோனிச சக்திகளிடமிருந்து பணம் பெறும் சில முஸ்லிம் பெண் அமைப்பினர் முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைக்க முணைந்தனர். இதற்கு அமைச்சர் ரஊப் ஹக்கீமும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை உலமா கட்சி மட்டுமே கடுமையாக பகிரங்கமாக கண்டித்ததால் கைவிடப்பட்டது. பின்னர் இந்த ஆட்சி ஆரம்பித்ததும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதற்காக முயற்சித்த போது இதனை செய்ய வேண்டாம் என உலமா கட்சி அவருக்கு பகிரங்க கடிதம் அனுப்பியதால் இது விடயம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது அரசாங்கத்தை முறையாக கொண்டு செல்ல முடியாத ரணில் மைத்திரி அரசாங்கம் ஜி எஸ் பி வரிச்சலுகை பெறுவதற்காக முஸ்லிம் திருமண சட்டத்தை சியோனிசத்துக்கு ஏற்றாற்போல் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பது என்பது வரலாற்றில் எந்த அரசும் செய்யாத அநியாயமாகவும், இனவாதமாகவுமே உள்ளது.

நாளை இன்னொரு வரிச்சலுகைக்காக முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று கூட இந்த அரசின் அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கலாம். முஸ்லிம்களின் 95 வீதமான வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கும் உலமாக்களுக்கும் செய்யும் நன்றிக்கடன் இதுதானா என கேட்கிறோம். இதைத்தான் உலமா கட்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் மிகத்தெளிவாக சொல்லியது, அதாவது, மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க முஸ்லிம்கள் ஒத்துழைப்பது என்பது சட்டிக்குள்ளிருந்து நெருப்பில் விழுவது போன்றதாகும் என. அப்போது எமது கருத்தை ஏற்காமல் எம்மை கடுமையாக சாடிய முஸ்லிம் சமூகமும் உலமாக்களும் இப்போது முஸ்லிம் திருமண சட்டத்தில் அந்நியர்கள் கை வைப்பதை பார்த்து ரசிக்கப் போகிறார்கள்.

முஸ்லிம் திருமண சட்டம் என்பது சமூகப்பற்றும் இறையச்சமும் கொண்ட நமது முன்னோர்களான உலமாக்களாலும் இஸ்லாம் பற்றிய அறிவுள்ள சட்டவல்லுணர்களாலும் குர்ஆன் ஹதீத் அடிப்படையில் வகுக்கப்பட்டதாகும். அதனை மாற்றுவது என்பது குர்ஆன் ஹதீதை அவமானப்படுத்துவதாகும். இஸ்லாமிய திருமண சட்டத்தில் குறை இருப்பதாலேயே அதனை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக முன்னர் சொல்லப்பட்ட நிலையில் ஜி எஸ் பி வரிச்சலுகையை பெறுமுகமாகவே இஸ்லாமிய திருமண சட்டத்தை அரசாங்கம் விற்க முனைந்துள்ளமையை அரசு இப்போது ஏற்றக்கொண்டுள்ளதன் மூலம் மேற்படி திருமண சட்டத்தில் தவறு இல்லை என்பது தெளிவாகியுள்ளது. முஸ்லிம் திருமண சட்டத்தில் எதையும் மாற்ற வேண்டிய தேவை இல்லை. மாறாக இன்னும் சில உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும். அவற்றை உலமா சபை மறறும் உலமா கட்சி என்பனவே செய்ய வேண்டும்  என முபாறக் மௌலவி தெரிவித்தார்.  

7 கருத்துரைகள்:

தயவு செய்து முஸ்லிம் தனியார் விவாக, விவாகரத்து சட்டம் தொடர்பில் வாசித்து, படித்து அறியுமாறு வேண்டிக்கொள்கின்றேன். இஸ்லாமிய ஷரீ ஆ விற்கும் இதற்கும் பாரியளவு இடைவெளியினை காண முடியும். காரணம் 1954 ம் ஆண்டளவில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் , மனிதர்களினால் அப்போதைய இலங்கை சூழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதே! ஆகவே தற்போது எமது கடமை என்னவென்றால் ஏற்படுத்தப்படும் திருத்தங்கள் ஷரீ ஆவின் எல்லையை தாண்டாமல் இருப்பதை அவதானிப்பதே ஆகும்.

அமைச்சரவை கூட்டத்தில் நமவர்களும் தூங்கிட்டுத்தான் இருந்து இருப்பார்கள்,அல்லது ஒருவரை ஒருவர் கள்ளன் பட்டு பாடிக்கிட்டு இருப்பார்கள் அவர்கள் நடத்த வேண்டியதை துல்லியமாக பேசி எழுதிவிட்டு கையொப்பத்தை இடச்சொல்லி இடத்தை காட்டுவார்கள் அவ்வளவுதான்.

Freedom to Practice Religion is a Must.

We Muslims are targeted by Kuffar from the time of History ....

We Muslims can not wed as per civil law, since we are obliged to practice our religion in many issue as per ISLAMIC SHAREEA law which is from the CREATOR of all of us.


Ulema party(?), While many of the facts you have written down are correct, If you come of the UNITY from MARA groups, people will join hand with you to fight the cause.


WHO Ever Targeted Muslim of this country in the past learned the LOST lessons.
Good Example: LTTE who harmed Muslims Lost finally
MARA who harmed Muslims Lost finally

NEXT Trun for MY3 and Ranil.
We Remind you not to PROVOKE Muslims by puting
fingers in to controlling their Religious laws..

IF You Do so,,, You will be NEXT in LIST.. By our strong Prayers to the ALLAH the TRUE ONE GOD of this universe.

Before publishing the articles, could you please get educated about what Muslim Personal Law Reform means. What Sri Lankan Muslim community needs is a reform of Muslim Personal Law which is greatly influenced by the practices of local customs crept into the Muslim community. It should be emphasised that there is a prevailing disconnect between the essence of Islam and many practices of Muslim which are largely cultural. It is unfair and incorrect to label these local customary laws as Sharia Law or Islamic Law. It is fair to say what needed in this context is cultural reform not doctrinal reform.
Please don not mislead people by publishing this kind of article in the future.

Yes, brother...
My views too fall in with you. I reckon that Ranil is a wolf in sheep's clothing.

Post a Comment