Header Ads



அப்போலோ வளர்ந்த கதை

"அரசாங்க ஹாஸ்பிடல் வேண்டாம், என்ன செலவானாலும் சரி, பெஸ்ட் டிரீட்மென்ட் வேணும்ன்னு வர்றவங்களுக்காக வெளிநாட்டுல இருந்து விலை உயர்ந்த கருவிகள் வரவழைக்கப் போறோம். டாக்டர்கள் கூட வெளிநாட்டுல இருந்து வரப் போறாங்க. இதன் மூலமா வெளிநாட்டுப் பயணக் கட்டணம்,நேர விரயம்,மொழிப் பிரச்னை ஏதும் இல்லாம சிகிச்சையைக் குறைந்த செலவுல எடுக்கலாம் " 33 ஆண்டுகளுக்கு முன்பு அப்போலோ ஆரம்பிக்கப்பட்ட போது பிரதாப் ரெட்டி சொன்ன வார்த்தைகள்தான் இவை.

ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாகக் கொண்ட ரெட்டி படித்தது சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில். 1983-ம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்று இந்தியா முழுவதிலும் 69 மருத்துவமனைகள் என கிளைகளை பரப்பி இருப்பது, ரெட்டி வாழ்க்கையின் நெடும் பயணத்தின் வெற்றி தான் என்கிறார்கள் மருத்துவ உலகில்.

தொலைநோக்கு

நாள் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்த பிரதாப் ரெட்டி என்கிற அந்த இளைஞன், கார்ப்பரேட் மருத்துவமனை தொடங்கப் போவதாக 33 வருடத்துக்கு முன்பு கூறியதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் 150 படுக்கையுடன் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ மருத்துவமனை இன்று 12 நாடுகளில் 69 மருத்துவமனைகளையும் 9,500 படுக்கைகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவ சாம்ராஜ்யமாக வளர்ந்து உள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சையை அப்போலோ அளித்து வருகிறது. 60 ஆயிரம் செவிலியர்கள் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் என தற்போதைய வளர்ச்சி எல்லாமே 'மெடிக்கல் மிராக்கிள்' பிரம்மாண்டம் தான். வருடத்திற்கு 3லட்சத்து 70 ஆயிரம் உள்நோயாளிகளும் 33 லட்சம் வெளிநோயாளிகளும் அப்போலோ வந்து செல்கின்றனர். இந்த வருடத்தில் மட்டும் 5,900 மூட்டு ,இடுப்பு அறுவை சிகிச்சைகளும், 14 ஆயிரம் நரம்பு அறுவை சிகிச்சையும், 400 கல்லீரல் மாற்றும், 1,100 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளன. 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட 100 கோடி அதிகம். நாள் ஒன்றுக்கு எல்லா செலவுகளும் போக 2 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது அப்போலோ.

பிரபலங்களால் பிரபலம்

1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்போலோ பிரபலம் ஆனதே 1984-ல்தான்.  அப்போதுதான் எம் .ஜி .ஆர். சிகிச்சைக்காக அங்கு சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்த 10 நாட்களும் அப்போலோ ஏரியாவை தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். எம் .ஜி .ஆர் உடல் நிலை குறித்த அறிக்கைகளை அப்போது உடனுக்குடன் வெளியிட்டது அப்போலோ. அதன் பிறகு கடந்த 2002-ம் ஆண்டு உடல்நல குறைவால் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முரசொலி மாறனை பார்க்க, திமுக தலைவர் கருணாநிதி தினமும் அப்போலோ வந்தார். அப்போதும் தொண்டர்களால் நிரம்பி வழிந்தது அப்போலோ. சென்ற 2011-ம் ஆண்டு தொடர் பிரசாரத்தால் கருணாநிதியும் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். ரஜினியும் உதடு சிகிச்சைக்காக அப்போலோ வந்துள்ளார். இப்படி அரசியல், சினிமா நட்சத்திரங்களின் மருத்துவமனையாகத் திகழ்கிறது அப்போலோ.

எல்லாமே காசு தான்..... 

இந்தியாவின் அத்தனை மெட்ரோ நகரங்களிலும் அப்போலோ மருத்துவமனை உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மதுரை,கோவை, காரைக்குடி என இரண்டாம் நிலை நகரங்களிலும் தனது கிளைகளை தொடங்கியுள்ளது.33 வருடத்திற்கு முன்பு ரெட்டி சொன்னது போல், அப்போலோ இப்போது பணக்காரர்களின் மருத்துவமனை தான். நட்சத்திர ஹோட்டல்களில் வசூலிக்கப்படும் அறை வாடகையை விட அப்போலோ ரூம் வாடகை அதிகம். மேற்கு உலக நாடுகளில், மருத்துவமனைகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தான் இயக்குகின்றன. இந்தியாவில் அப்படி ஒரு கார்ப்ரேட் மருத்துவமனை இருக்குமானால் அது அப்போலோ மட்டுமே. இங்கு நோயாளிகளுக்கான கட்டணங்கள் எல்லாமே பேக்கேஜ் முறையில் தான் வசூலிக்கப்படுகிறது. சாதாரண நோய்க்கே லட்சங்கள் இல்லாமல் நீங்கள் அப்போலோவிற்குள் நுழைய முடியாது. 3,500 ரூபாயில் இருந்து 30 ஆயிரம் வரை அப்போலோவில் அறைகள் உள்ளன என்பது கூடுதல் தகவல்.

அப்போலோ அறை வாடகை விபரம்

அடுத்த 10 அறைகள் தனி வார்டுகள் ஆகும். அறை. ஒன்றுக்கு ரூ.8,500-ல் இருந்து ரூ.8,800 வரை உள்ளது. அதன்படி 10 நாட்களுக்கு ரூ. 85 ஆயிரம் ஆகிறது. மீதம் உள்ள அறைகள் மூன்று வகை சூட் ரூம்கள் உள்ளன. அதன் தொடக்க வாடகை 12,500 ரூபாயில் இருந்து 26,300 வரை உள்ளது. மொத்தம் முதல்வர் தங்கிய, தங்காத என அந்த தளத்துக்கான ஒரு நாள் வாடகை மட்டும் 3 லட்சத்து 18 ஆயிரத்து 600 ரூபாய். 12 நாட்களுக்கு 38 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் வரை ஆகும் என்கின்றனர் .

No comments

Powered by Blogger.