Header Ads



நட்டத்தில் இயங்கிய போதிலும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 7 விமானங்கள் கொள்வனவு

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மேலும் ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு, தொட்டலங்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நட்டத்தில் இயங்கிய போதிலும் தேசிய விமான சேவையை நடத்திச் செல்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அதன் காரணமாகவே புதிதாக ஏழு விமானங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. எல்லோரும் கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள் பெரியதோர் கொள்முதல்

    ReplyDelete

Powered by Blogger.