Header Ads



இலங்கையின் கடன்சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையின் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சர்வதேச வர்த்தக சஞ்சிகையான போர்பஸ் சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையின் மொத்தக் கடன் சுமை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையின் மொத்தக் கடன் சுமை 64.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இதில் 8 பில்லியன் டொலர் கடன் சீனாவிற்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த தேசிய உற்பத்தியில் 75 வீதமான பகுதி கடன் செலுத்துகைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டியிருப்பதாகவும், இது நாட்டின் மொத்த வருமானத்தில் 95.4 வீதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமர்ஜின் மார்கட்ஸ் ஒப் ஏசியா என்னும் நூலை எழுதிய டெட் செபர்டினால் போபர்ஸ் சஞ்சிகைக்கு இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நாட்டின் மொத்தக் கடன் மூன்று மடங்காக உயர்வடைந்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலக்கீழ் கல் ஒன்றை அகற்றுவதற்காக 42 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த நேரிட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 4 பில்லியன் டொலர் செலுத்த நேரிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இது பெரிய விடயமில்லை எல்லா நாடுகளும் தான் கடன் சுமையுடன் இருக்கிறார்கள் ஆனால் இலங்கைக்கு எப்படியும் கடன் கொடுத்த நாடுகளால் சில சமயங்களில் கடன் தள்ளுபடி மன்னிப்பு பெறவாய்ப்புண்டு அதாவது கடன் திரும்ப கொடுக்க தேவையில்லை.

    ReplyDelete

Powered by Blogger.