Header Ads



ஆண்களில் 60 சதவீதமானவர்களுக்கு, Sex குறித்து தெளிவில்லை - சுகாதார அமைச்சு

-Vi-

எதிர்பாலின மீளுற்பத்தி செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையிலுள்ள இளைஞர்களுக்கு போதிய அறிவில்லாமலுள்ளது என ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயளாளர் அனுர ஜெயவிக்கிரம தெரிவித்துள்ளார்.  

சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கில் தேசிய இளைஞர் சுகாதார தரவு முடிவுகள் இன்று  வெளியிடப்பட்டன. இந்நிலையில்  . சுகாதார அமைச்சின் செயளாளர் அனுர ஜெயவிக்கிரம தெரிவிக்கையில் 

பொதுவாக 15 தொடக்கம் 24 வரையிலான சனத்தொகை பரம்பலே இளைஞர்களாக கருதப்படுகின்றனர். அதனடிப்படையில் 15.6 சதவீதமானோர் இலங்கையில் இளையோர்களாக காணப்படுவதோடு நூற்றுக்கு பதினாறு பேர் குறித்த வயதெல்லையில் உள்ளனர். எனவே இந்நாட்டில் சனத்தொகையில் முக்கியமான பங்காளிகளாக விளங்கும் இளைஞர்களின் பாலின் வேறுபாடுகள், அவர்களின் நடத்தைக்கோலங்கள், வன்முறை, உணவுப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றை அடையாளம் காணுவதற்காகவே குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தன்னின சேர்க்கை தொடர்பில் இளைஞர்களிடத்தில் அறிவு காணப்படுகின்ற போதிலும் எதிர்பாலின சேர்க்கை தொடர்பில் போதிய அறிவில்லாமல் இருப்பது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. அதனடிப்படையில் 50 சதவீதமான ஆண்களுக்கு பாலியல் உளச்சார்பு பற்றி தெரியாதவர்களாக காணப்படுவதோடு 60 தொடக்கம் 65 சதவீதமானவர்களுக்கு ஆண்களின் பாலியல் நடத்தைக்கோலத்தைப்பற்றி தெளிவில்லாதவர்களாக காணப்படுகின்றனர்.

இந்நடத்தை பாலியல் செயற்பாடுகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் குறிப்பாக எதிர்பாலின செயற்பாடுகளில் தெளிவற்று காணப்படுவதனால் இளைஞர்களிடத்தில் அவை பற்றிய அறிவூட்டல் நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்றார்.  

No comments

Powered by Blogger.