October 06, 2016

"ஒழிக்கப்படவேண்டியதே, 5 ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை"

-Ash-Sheikh Aashik Rasool-

5ம் ஆண்டு புலமை பரிசில் Result, #சில பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியளித்தாலும்! #பல்லாயிரம் பிள்ளைகளின் மனதில் விரக்தியையும் கல்விமீது வெறுப்பையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குகிறது.

ஓடியாடி விளையாடிக் கொணடிருந்த பிள்ளை Result ஐ பார்க்க ஓடி வந்து ஆர்வமாய் நின்று! Result ஐப் பார்த்ததும் துக்கமாய் ஓடிச் சென்று பட்டினியுடன் படுக்கிறது.

மாதரிப் பரீட்சையில் எடுத்த புள்ளியில் அரைவாசியும் கிடைக்காத Result இன் அதிர்ச்சியால்! இலட்சியத்தை மறந்து அவநம்பிக்கை எனும் மாலையை சூடிக்கொள்ள ஆரம்பிக்கிறது.

பாதை நெடுகிலும் "உங்களது Result என்ன?" எனும் கேள்விக்குப் பயந்து.... வெட்கித்து வீட்டினுள் அடங்குகிறது. அந்தோ பரிதாபம்.. துள்ளியோடிய மான் கட்டிலில் அழுது கொண்டு....

நாளை விடிந்ததும் வைத்தியசாலைகளில் எத்தனையோ தாய்மார் அனுமதிக்கப் படுவார்கள். தன் பிள்ளை சி்த்தியடையவில்லை என்பதற்காக நஞ்சு அருந்தியவர்களாக.

எத்தனையோ பிள்ளைகளுக்கு மறுந்து கட்டப் படும். சித்தியடையவில்லை என்பதற்காக மௌடீக பெற்றார்களால் தண்டிக்கப் பட்டமைக்காக.

எத்தனையோ மாணவர்களது தாய்மார்களுக்குள் பகை ஏற்படும். பொறாமை எனும் தீயால். 

#ஒழிக்கப்_படவேண்டிய உளவளத்துக்கு எதிரானதோர் கல்வி முறைமையே ஐந்தாம் ஆண்டு குழந்தைகளுக்கான புலமை பரிசிலாகும்.

13 கருத்துரைகள்:

ஒழிக்கப் பட வேண்டும் என்பதை விட ஏழை மாணவர்களுக்கு மாத்திரம் நடாத்தப் பட வேண்டும்

This grade 5 exam system should widraw no need any competitions for kids.

Pulamai pareecaiil etpadum tholvi
Kastamanathu,indru varai marakathathu enralum
Valkaiyai uyarthi irukirathu

இது நல்ல விடயம் தான் ஆனால் இதில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் .இதில் ஒருசில புள்ளிகளால் சித்தியடையாத பிள்ளைகள்தான் இதில் மனதளவில் கடுமையாக பாதிப்படைகின்றார் தேர்வு முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.இளம் வயதில் இருந்தே கல்வி என்றால் ஒரு பயம் ஏற்படுத்தும் மனநிலையை இந்தப் பரீட்சை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி மன நிம்மதியோடு படிக்குநிலையற்றதை காணக்கூடியதாக இருக்கிறது .பதற்றம் எப்போதும் நினைவாற்றலை இல்லாமல் செய்து விடும் ,

Examinations are part and parcel of Education system

We need to make some amendments in this examination system. We should not consider this exam as measurable system of the pupils for the cutoff Marks. This exam should be considered as a general exam to up grow their knowledges. So, this exam should be continued with further amendments.

அவதானம்!!!!
எந்தவொரு பரீட்சை முடிவுகளும் ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த வாழ்வின் நன்மை, தீமையை தீர்மானிப்பதில்லை!

பரீட்சைகள் வெறும் வெற்றி,தோல்விகளை மட்டுமே நிர்ணயிக்கின்றன!

வாழ்வின் வெற்றி என்பது இறைவன் கைகளில் உள்ளது!

எத்தனையோ பரீட்சைகளில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோல்வியை தழுவியிருக்கின்ற வரலாறுகளை கண்கூடாக காண்கின்றோம்!

ஒரு பரீட்சையின் முடிவை மட்டும் வைத்து பிள்ளைகளை நச்சரிப்பதோ, துன்புறுத்துவதோ அறிவார்ந்த செயலாகாது!

5 ஆம் தரத்தில் வெற்றிபெற்ற பிள்ளை உயர் தர பரீட்சையில் தோற்பதும்,
5 ஆம் தரத்தில் தோற்ற பிள்ளை உயர்தரத்தில் வெற்றி பெறுவதும் வரலாறுகள்!

எனவே பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகுந்த அவதானமாய் இருத்தல் வேண்டும்! மென்மேலும் நம்பிக்கை ஊட்ட வேண்டும்!

மாறாக மனம்தளர செய்து மனநோய் ஏற்பட காரணமாய் அமைந்து விடக்கூடாது!

This should be seen as an opportunity for talented students to get admissions to better schools. Parents and teachers should prepare students accordingly. Learning to live with failure and fighting back is part of education. Everybody cant be successful all the time.

Brother Yasir's message should be taught each parent, child as well as teacher.

முதலில் ஏன் இந்த பரீட்சை ஆரம்பிக்கப்பட்டது என்ற விளக்கம் இருந்தால் நான் சொல்ல வரும் கருத்து புரியலாம்.
ஆனால் அடுத்த பக்கத்தில்....
ஏழைகளுக்கு இனாமாக கொடுப்பது எனக்கும் வேண்டும் என்ற குறுகிய சிந்தனை மற்றும் கல்வியை சுமக்க ஏழைகள் படும்பாபாட்டை அறியாத மேட்டுக்குடி சிந்தனைகளின் பிரதிபலிப்பு (இந்த comment)

இப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதும் கல்வியில் சிறந்த திறமை காட்டும் மாணவர்களுக்கு சிறந்த பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கவுமேயாகும்.கவலைக்குரிய விடயம் றோயல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனும் இப்பரீட்சைக்கு தோற்றுவதாகும்.அது மட்டுமல்ல வெட்டுப்புள்ளி என்ற ஒரு மாயையினால் வரவு செலவுத் திட்டத்தால் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன் படுத்தப்படுவதுமில்லை.காரணம் வெட்டுப்புள்ளிக்கு மேல் உள்ள மாணவர்களில் நிதி வசதி உள்ளவர்கள் 50% மேல் இருப்பதாகும்.

Post a Comment