Header Ads



பௌத்த சிலை உடைப்பு, விசாரணையிலிருந்து விலகிய ஸ்ரீபவன் - பிரதிவாதிகளாக முக்கிய 5 பேர்

பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகிக் கொண்டுள்ளார். கனராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் விலகிக்கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர்களான புவனக்க அலுவிஹார மற்றும் கே.ரீ. கித்சிறி ஆகியோர் இந்த மனுவை விசாரணை செய்தனர்.

வட மாகாண முதலமைச்சர், சட்டம் ஒழுங்கு அமைச்சர், வட மாகாண ஆளுனர், பௌத்த சாசன அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணைகளை மேற்கொள்ளும் நீதியரசர் குழாமிலிருந்து விலகிக்கொள்வதாக பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். இந்த மனு எதிர்வரும் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.