Header Ads



மஹிந்தவின் 'மிஹின்' 30 ஆம் திகதியுடன் பறக்காது..!


இம்மாதம் 30 ஆம் திகதியுடன் மிஹின் லங்கா விமான சேவை இலங்கை வரலாற்றில் இருந்து நீக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விமான சேவை, தொடர்ந்தும் அதிக நட்டத்தை ஈட்டியமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு 2 விமானங்களுடன் மிஹின் லங்கா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு விமான சேவைகள் இதன் மூலம் முன்னெடுக்கப்பட்டன.

ஆரம்பத்தில் இருந்து மிஹின் லங்கா விமான சேவையின் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெறாமையினால், கடந்த பல வருடங்களாக நட்டத்தை எதிர்நோக்கிய அரச நிறுவனமாக காணப்படுவதாக நிதி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மிஹின் லங்கா நிறுவனம் 3160 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

2008 , 2009 ஆம் ஆண்டுகளில் அந்த நிறுவனம் 1300 மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்தும் மிஹின் லங்கா நிறுவனம் நட்டத்தை எதிர்நோக்கியதுடன், 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாத அறிக்கையின் படி அந்நிறுவனம் 17 ஆயிரம் மில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது.

மஹிந்த சிந்தனை திட்டத்தை வலுப்படுத்துவதற்காக மிஹின் லங்கா விமான சேவை உருவாக்கப்பட்டதே தவிர, தேசிய தேவைகளைக் கருத்திற்கொண்டு அந்த விமான சேவை ஆரம்பிக்கப்படவில்லை என அந்த வேளையில் எதிர்க்கட்சி தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வந்தது.

எனவே, அதிகளவிலான மக்களின் பணத்தை வீண் விரயம் செய்த திட்டமாக அது அமைந்துள்ளது .

ஒக்டோபர் 30 ஆம் திகதியுடன் மிஹின் லங்கா நிறுவனத்தின் விமான சேவைகள் இடம்பெற மாட்டாது.

1 comment:

  1. அரச நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குவதாகவே அறிக்கை வருகின்றது அப்போ எந்த திணைக்களம் இலாபத்தில் இயங்குகிறது ?இலஞ்சம் ,களவு.கொள்ளை.கொலை,கொமிஷன் ஆகிய திணைக்களங்கள் பெரும் இலாபத்தில் இயங்குகிறது ,

    ReplyDelete

Powered by Blogger.