Header Ads



சிரியாவில் ரஷ்யாவின் காட்டுமிராண்டித் தாக்குதல், பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை மீட்டபோது..!


சிரியாவில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தையை இடிபாடுகளுக்கிடையே மீட்பு படை வீரர் ஒருவர் காப்பாற்றிய போது கண்கலங்கிய சம்பவம் உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிரியாவில் கடந்த வியாழன் அன்று ரஷ்ய கூட்டுபடையினர் நடத்திய வான்வழி தாக்குதலால் பொதுமக்கள் பலரும் பாதிப்புக்குள்ளாயினர்.

இத்தாக்குதலில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதி Jarjanaz நகருக்கு அருகே உள்ள Idlib கிராமம். இதுவரை Idlib பகுதியில் ரஷ்ய நடத்திய தாக்குதலின் விளைவாக 11 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 7 குழந்தைகள் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் இடிபாடுகளுக்கு இடையே உள்ளவர்களை மீட்பு படையினர் மீட்டு வந்த நிலையில், கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குழந்தை ஒன்று சிக்கியுள்ளது.

இதைக் கண்ட மீட்பு படை வீரர்கள் உடனடியாக கட்டிடத்தை உபகரணங்கள் கொண்டு உடைத்தனர். அதன் பின் உள்ளே சென்று குழந்தையை பார்த்த போது குழந்தையின் முகத்தில் ரத்தம், தூசி படிந்த உடல், குழந்தையின் மெதுவான அழுகுரல். இதைக் கண்ட மீட்பு படை வீரர் (Abu Kifah) குழந்தையை கட்டி அணைத்துக் கொண்டு ஆம்புலன்சிற்கு வேகமாக கொண்டு சென்றார்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்து கொண்டிருந்த போது, Abu Kifah குழந்தையை பார்த்து உணர்ச்சியை அடக்க முடியாமல் அழுத சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

மருத்துவசிகிச்சை அளித்த போது குழந்தை பிறந்து 30 நாட்களே தான் ஆகியுள்ளது என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

அது மட்டுமில்லாமல் இக்காட்சியை நேரடி தொகுப்பு செய்த தனியார் ஊடகத்தைச் சேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் Kate Silverton கண்கலங்கியது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அனைவரது மனதையும் உருக்கியுள்ளது.

இது குறித்து Kate Silverton தனது டுவிட்டர் பக்கத்தில், இக்காட்சியை காணும் போது கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை எனவும், தன்னால் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை என்றும், தானும் ஒரு சராசரி மனிதன் தானே எனவும் கூறியுள்ளார்.

தற்போது அக்குழந்தை நன்றாக உள்ளதாகவும், மேலும் கட்டிட இடிபாடுகளிக்கு மத்தியில் சிக்கியிருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



6 comments:

  1. உங்கு என்ன தான் நடக்கிறது?

    மத்திய கிழக்கில் மாறி மாறி எங்கேயாவது யுத்தம் வருடம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கின்றது. மக்கள் தினமும் இறங்கின்றார்கள்.

    ஏன் யுத்தம் செய்கிறார்கள் என ஒருவருக்கும் புரியாது.

    ReplyDelete
  2. This all planned games of western..innocent childs what they did to be the victim of these war..
    Are the Arab leaders are sleeping..
    Allahu Akbar

    ReplyDelete
  3. This all planned games of western..innocent childs what they did to be the victim of these war..
    Are the Arab leaders are sleeping..
    Allahu Akbar

    ReplyDelete
  4. இதற்கு காரனமான புட்டின், ஆசாதின் குடும்பங்ககளை யாஅல்லாஹ் அழித்து விடுவாயாக. மற்றும எல்லா அறபு நாடுகளிலும் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்து. மேலும் மன்னர் களையும் இராணுவ ஆட்சி யாளர்களையும் அழித்து விடுவாயாக;

    ReplyDelete
    Replies
    1. Aameen! My prayers too in line with you, brother...

      Delete
  5. Mr. Antony, rathr thn qustioning wht s hppnng hre pls search for wt s hppnng. we cd see ur co troversial commnts on some posts. dnt be blindfoldd. jst sptead ur wings thn u wll realize the truth

    ReplyDelete

Powered by Blogger.