Header Ads



3 வயது குழந்தை, எத்தனையாம் தரத்தில் கல்வி கற்கும் - மூக்குடைபட்ட பொன்சேக்கா

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளமை அனைவரும் அறிந்த விடயமே. ஆனால் அண்மையில் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்னம் தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.

“அரசியலில் ஈடுபட மாட்டேன்” என்ற கருத்தை கமால் குணரட்ன ஏன் கூறினார் என்று சரத் பொன்சேகா குழப்பத்தில் இருந்ததுடன், தமது ஆலோசகர்களிடமும் இது பற்றி வினவியுள்ளார். இதற்கு அவரது ஆலோசகர்கள் செயன்முறை மூலம் விளக்கியுள்ளார்.

“ஏதாவது ஒரு ஊருக்குச் சென்று குழந்தைகளை உங்கள் கைகளால் தூக்கி குழந்தைகளிடம் ஏதாவது கேளுங்கள்” என பொன்சேகாவிடம் அவரது அரசியல் ஆலோசகர்கள் தெரிவித்தனர்

இதற்கு, “நான் எனது குழந்தைகள் இருவரையும் கூட இவ்வாறு என் கைகளால் தூக்கியதில்லை, அய்யோ மஹிந்த செய்யும் அறுவருப்பான விடயங்களை நான் செய்ய போகமாட்டேன்” என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

அரசியல் ஒரு நேர்மையான விடயம் அல்ல எனவும், அப்படியே அரசியலில் ஈடுப்பட வேண்டுமாயின் புத்தி கூர்மை அவசியம் எனவும் ஆலோசகர்கள் பொன்சேகாவிடம் தெரிவித்துள்ளனர்.

பொன்சேகா தனது ஆலோசகர்களின் அறிவுரைக்கு பின்னர், சில நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக கிராமங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றார்.

பின்னர் அவரது ஆலோசகர்கள் கூறியது நினைவுக்கு வந்தமையினால், கூட்டத்தில் உள்ள ஒரு குழந்தையை அவரது கைகளால் தூக்கினார்.

பொன்சேகா, கோழி இறைச்சியின் விலை பற்றி விசாரிக்க செல்லும் வாடிக்கையாளர் போலவே இந்த குழந்தையை தூக்கி சில கேள்விகளை வினவியுள்ளார்.

குழந்தையிடம் “ஓ, பேபி உங்களது வயது என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அதை புரிந்துக் கொள்ள முடியாத குழந்தை அமைதியாக இருந்தது. குழந்தையின் தாய் பேபிக்கு 3 வயது சேர் என தெரிவித்துள்ளார்.

குழந்தையிடம் அடுத்த கேள்வியை பொன்சேகா கேட்டார். அது என்ன கேள்வி தெரியும், “குழந்தை எத்தனையாம் தரத்தில் கல்வி கற்கின்றது? என்று கேட்டுள்ளார். இதைக் கேட்ட குறித்த குழந்தையின் தாயின் வாய் பூட்டு போட்டாற்போல் போல இருந்தது.

இங்கிருந்து எதையும் தெரிந்தக் கொள்ள முடியாது சேர் வாருங்கள் போகலாம் என பொன்சேகாவின் பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர். நேரமாகின்றது என அவசரமாக அவரை வெளியே அழைத்துச் சென்றார்கள் பொன்சேகாவின் பாதுகாவலர்கள்.

என்ன நடந்தது என பொன்சேகாவின் ஆலோசகர்களும், அனோமோ பொன்சேகாவும் கேட்டனர், அதற்கு சரத்பென்சேகா சற்றும் எதிர்பார்க்காத விடயம் ஒன்றை கூறியுள்ளார்.

“மரியாதையோடு இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் அரசியலில் நுழைய மாட்டேன், என்னால் மீண்டும் ஒரு குழந்தை ஆக முடியாது என மேஜர். ஜெனரல் கமல் குணரத்ன பகிரங்கமாக கூறியிருந்தார்” இதற்கான அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிகின்றது என சரத் பொன்சேகா பதிலளித்துள்ளார்.

பொன்சேகா அரசியலில் இவ்வாறன ஒரு பாடத்தை படித்துக்கொண்டமையை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.