Header Ads



'கறுப்பு ஒக்டோபர் 26' வருடங்கள் (1990-10-30)

-Muja Ashraff-

பேரினவாதத்தின் கறுப்புப் பக்கங்களாக கறுப்புஜூலை,  அழுத்கமை தர்காடவுன் போன்றவை பதியப்பட்டதுபோல் புலிகளின் கறைபடிந்த கறுப்புப் பக்கங்களில் முதன்மையாகப் பதியப்பட்ட நிகழ்வே வடபுல முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு

விடுதலைபுலிகளின் நாமங்கள் யாருக்காக எதைவிட்டுவைத்ததோ தெரியவில்லை வடபுல முஸ்லிம்களுக்கென்று எதையுமே விட்டுவைக்கவில்லை. 2 மனிநேர கால அவகாசத்தை மட்டுமே வழங்கியது தம்முடன் அகதியன்ற நாமத்தை மட்டும் எடுத்துச்செல்ல

எந்த இனத்தின் உரிமைகளை வென்றடுக்க வேண்டுமன்ற இலட்சியத்துடன் ஆயுதமேந்தினார்களோ அந்த இனத்தின் உணர்வுகளையும் புறந்தள்ளிவிட்டு மற்றுமொரு சக இனத்தவரின் உரிமைகளை பறித்தடுப்பதற்காக அவ் ஆயுதங்களை பயன்படுத்தியமையானது காலத்தால் அழிக்கமுடியாத வடுக்களையே வடபுல முஸ்லிம்களுக்கு மத்தியில் விட்டுச்சென்றுள்ளது

அன்று காத்தான்குடி ஏறாவூர்,மூதூர் என்று இப் பட்டியல் நீண்டுசென்ற விதம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் மீதான நம்பிக்கையினையும் கேள்விக்குள்ளாகி நின்றதுடன் அவர்களை பற்றிய வெறுமைநிலையினையும் உள்ளத்தில் வழங்கியதன்றால் மிகையாகாது.

வாழவேண்டுமென்ற போராட்டத்தில்  வாழ்க்கையுடன் போராடி வெற்றியடைந்த வடபுல முஸ்லிம்களால் அகதியன்ற நாமத்தை களைவதற்கான போராட்டத்தில் மட்டும் வெற்றியடைய முடியவில்லை.

தவறுகள் செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பது நியதி இருந்தும் தவறுகளின்றியே ஓர் சமூகத்தின் புறமுதுகில் குத்தப்பட்ட நம்பிக்கை துரோகங்களின் பக்கங்கள் வருடங்கள் தோறும் புறட்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கும் கசப்பான நினைவுகளாக...

No comments

Powered by Blogger.