Header Ads



சம்பந்தனை கொலைசெய்ய 25 மில்லியன் - விக்னேஸ்வரன் தெரிவிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை படுகொலைசெய்வதற்கு சிலர் திட்டமிட்டுள்ளதாக பலப்பிட்டியை சேர்ந்த நபர் ஓருவர் தனக்கு தகவல் வழங்கியதாக வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஆங்கிலநாளேடு ஓன்றிற்கு தெரிவித்துள்ளார்

முதலமைச்சர் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

வடமாகாண முதலமைச்சர் தனக்கு செப்டம்பர் மாதம் பலப்பிட்டியவை சேர்ந்த சிங்கள நபர் ஓருவரிடமிருந்து மின்னஞ்சலொன்று வந்ததாகவும் பின்னர் அந்த நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தெரிவித்தார். நபர் ஓருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது, அனேகமாக மின்னஞ்சல் அனுப்பிய நபராகத்தான் அவர் இருக்கவேண்டும். அவர் எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை கொலைசெய்வதற்கு தீட்டப்பட்டுள்ள திட்டம் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்தாா் இதற்காக நபர் ஓருவரிற்கு 25 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது எனவும்  இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் மீது  பழிபோட திட்டமிட்டுள்ளனர் எனவும் அந்த நபர் குறிப்பிட்டார்.விடுதலைப்புலிகள் அமைப்பு இன்னமும் இயங்குகின்றது என்பதை காண்பிக்கவே அவ்வாறு திட்டமிடப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார். அந்த நபர் தானே குறிப்பிட்ட மின்னஞ்சலை அனுப்பியதாக குறிப்பிட்டார்,தனக்கு இது குறித்து எவ்வாறு தெரியவந்தது,எதிர்கட்சி தலைவரை கொலை செய்யும் பொறுப்பு யாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளது போன்ற விபரங்களையும் அவர் என்னிடம் தெரிவித்தார்.

நான் இந்த விடயம் குறித்து ஆராய்ந்த பின்னர் பொலிஸ்மா அதிபரிடம் தெரிவிப்பதாக கூறினேன். எனது முறைப்பாட்டினை ஜனாதிபதிக்கும் அனுப்புவதாக தெரிவித்தேன். நான் எனக்கு பாதுகாப்பு கோரவில்லை. இந்த விடயம் குறித்து அறிந்த பின்னர் வடமாகாண சபையே எனக்கான பாதுகாப்பை கோரியது. நான் ஓருபோதும் எனக்கு பாதுகாப்பை கோரியதில்லை. வடமாகாணசபை அரசாங்கத்திடம் எனக்கான பாதுகாப்பை கோரிய வேளை அரசாங்கத்திடமிருந்து வந்த பதிலில் அரசியல் தொனி காணப்பட்டது.

சில நாட்களிற்கு முன்னர் அந்த நபர் மீண்டும் என்னுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். பயங்கரவாத விசாரணை பிரிவின் தலைவர் டி சில்வா என்பவர் எனக்கு தகவல்களை வழங்கியதற்காக தன்னை துன்புறுத்துவதாக  அவர் குறிப்பிட்டார்.  நான் அவரிடம் ஏன் தமிழர் ஓருவருக்கு உதவுகின்றீர்கள் என கேட்டேன். நான் அந்த நபரின் தொலைபேசி இலக்கங்கள் உட்பட முக்கிய தகவல்களை பொலிஸ் மா அதிபரிற்கு வழங்கியுள்ளேன். அவர் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். மிகவும் பாரதூரன இந்த விடயத்தை அரசியல் கோமாளித்தனத்திற்கு பயன்படுத்த எவரும் முயலக்கூடாது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

9 comments:

  1. இந்த இனவாத விஷக் கிருமி விக்கி ஏதாவது அடிக்கடி உளறிக் கொண்டே இருக்குது.

    ஒருமுறை, தன்னைக் கொலை செய்யப் போகிறார்கள் என்று ஒரு புரளியைக் கிளப்பியது.

    இப்போது, சம்பந்தன்???

    இந்தாளுக்கு வேறு வேலையே கிடையாது.

    இவனெல்லாம் ஒரு முதலமைச்சர்.

    ReplyDelete
    Replies
    1. @ISIS Racist,
      ISIS இலங்கையில் கால் ஊன்றிவருதாக அமேரிகாவும் இந்தியாவும் இலங்கையை எச்சரித்துள்ளன. அதனை நம்பி அரசும் பயங்கரவாத சட்டத்தை பலப்படுத்தி வருகின்றது.

      இலங்கை நிலமை இப்படி உள்ளது. எனவே எல்லா அரசியல் தலைவர்களின் பாதுகாப்பும் அவசியம் தான்.

      Delete
    2. காள்ப்புணர்வுள்ள முஸ்லீம்கள் சிலரால்தமிழ்தலைமைகள் தாக்கபட வாய்ப்புள்ளது.

      Delete
  2. பதவிகலம் முடியபோகுதெண்டதும் காலில் சுடுதண்ணி ஊத்தன மாரி ஒருத்தர் ஓடி திரிய.யுறாறே அவர பத்தி என்ன நினைகிறீர்.

    ReplyDelete
  3. These two old persons should retaire.

    ReplyDelete
    Replies
    1. What about Mr.fousy

      Delete
    2. தமிழ் அரசியல்வாதிகளுக்கு நீயா வாக்களித்தாய்.உன் அரசியல் தலைமைகளை திருத்த பார்.

      Delete
  4. செத்த பாம்பை யாரையா கொல்ல போறாங்க?

    ReplyDelete
  5. இலங்கை அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை நிர்ணயம் செய்ய, இலங்கை போலீஸ் நன்கு போதும்.

    இனவாத விக்கி சும்மா அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.