Header Ads



நியூசிலாந்து வாழ் இலங்கை இஸ்லாமிய சிறார்களின், திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி (படங்கள்)


-MJM Sharthaar-

 ஆக்லாந்து சிறுவர் கலை/கலாச்சார விழா 2016 (படங்கள்)

நியூசிலாந்து வாழ்  இஸ்லாமிய சிறார்களின்திறமைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த  இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து நடாத்தும் ஸ்ரீ லங்கா சொசைட்டி ஒஃப் நியுச்சிலாட் அமைப்பினால் வருடா வருடம் நடாத்தப்படும் சிறுவர் கலை, கலாச்சார விழா வழமை போல‌ இம்முறையும் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

ஆக்லாந்தில், மௌன்ட் அல்பேர்ட் வார் மெம்மோரியல் ஹாலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பல சிறுவர்களும், பதின்ம வயதினரும் வெகு அக்கரையுடன் பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பரிசில்களை வென்று சென்றார்கள். கட்ந்த முறையை விட பல சிறுவர்கள் இம்முறை தமிழிலும் தம் திறமையை வெளிக்காட்ட முனைந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

சிறுவர்கள் நடித்த "எங்களையும் கொஞ்சம் அண்டர்ஸ்டாண்ட் பன்னுங்க" என்ற தமிழ் நகைச்சுவை நாடகம் அனைவரது பாராட்டை பெற்றதோடு, பல சிறுமிகள் ஒன்றினைந்து நடித்த "போன் அடிக்ட்" என்ற நாடகம் இளம் தலைமுறைக்கு பல செய்திகளையும் சொல்லி சென்றது.

சிறுவர்களின் கிராஅத் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்புடன்  ஆரம்பமான நிகழ்வில், குர்-ஆன் மனனம், கிராத், இஸ்லாமிய மற்றும் சமூக பேச்சுக்கள், குட்டி நாடகங்கள், குழு நடனங்கள், வினோத உடை போட்டிகள் என பலதரப்பட்ட போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. எல்லா நிகழ்ச்சிகளிலும் சிறார்கள் மிக உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் பங்குபற்றியமை பார்வையாளர்கள் அனைவரையும் மகிழச்செய்தது.  வினோத உடை போட்டி நிகழ்ச்சிகளுக்கான நடுவர்களாக சகோதர இனத்தை சேர்ந்த நடுவர்கள் வரவழைக்கப்பட்டிருந்தமையும், அவர்கள் நிகழ்ச்சிகளை பற்றி குறிப்பிட்ட விமர்சனங்களும் அனைவரையும் மகிழ்விப்பதாக இருந்தது.

அமைப்பின் நடப்பாண்டு தலைவரான ஜெரீத் ஆப்தீன் அவர்கள் உரை நிகழ்த்துகையில் இவ்வாறானதொரு நிகழ்வு ஏன் நம் குழந்தைகளுக்கு அவசியமானது என விளக்கி பேசினார்.  கலை விழாவுக்காக குழந்தைகளை பயிற்றுவிப்பதற்காக பெற்றோர்கள் நேரம் காலம் பாராமல் ஒத்திகைகளில் ஈடுபட்டமையினாலேயே இவ்வாரானதொரு நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த முடிந்தது என தெரிவித்த அவர், ஸ்ரீ லங்கா சொசைட்டி ஒஃப் நியுச்சிலாட் அமைப்பு எதிர்காலத்திலும் இவ்வாறான பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடாத்தும் என்றும், அது சார்ந்து அனைவரது முழு ஒத்துழைப்பையும் வேண்டி நின்றார்.  


No comments

Powered by Blogger.