Header Ads



200 மில்லியன் வேண்டும் - நாமல் வழக்கு தாக்கல்


ஆதாரமற்ற முறைபாடு மற்றும் கைது செய்த குற்றங்களுக்காக நஸ்ட ஈடாக ரூபா 200 மில்லியன் கோரி நிதி மோசடி விசாரணை பிரிவில் உள்ள இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க வழங்கிய கிரிஸ் ஒப்பந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தான் ஒருவாரம் கைது செய்யப்பட்டிருந்ததாக குறித்த மனுவில் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நிதி மோசடி விசாரணை பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் எஸ்.ஐ ஆகியோரிடம் தலா 100 மில்லியன் ரூபா நஸ்டஈடு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், கிரிஸ் நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஸ, ஜூலை மாதம் 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் ஒரு வாரத்தில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இருக்கும் மில்லியன்கள் போதாதா இன்னும் வேண்டுமா.

    ReplyDelete
  2. இவன் சொல்வது சரீயானது கைது செய்து மாப்பிள்ளை போல் கவனித்து மரியாதையாக அனுப்பினால்,குற்றத்தை நிருபிக்க கைது செய்ய வில்லை மக்களுக்கு காட்டி ஏமாற்ற அதனால் இவனுக்கு உரிமை உண்டு

    ReplyDelete

Powered by Blogger.