October 31, 2016

'1990 கறுப்பு ஒக்டோபர் 30' நிகழ்வில், சம்பந்தன் பேசியது..!

-ARA.Fareel-

‘வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு. இந்த இணைப்பு தமிழ் – முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் அமைய வேண்டும்.

எமக்குள் ஒற்­று­மை­யில்லா விட்டால் கிழக்கு மாகாணம் பறி­போய்­விடும்' என எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

கொழும்பு – ஹெக்டர் கொப்பேகடுவ நிலை­யத்தில் நடை­பெற்ற வடக்கு முஸ்­லிம்கள் இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்ட நினைவு நாள் நிகழ்வில் “வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கும் தீர்வு அவ­சியம்” என்ற கருப்­பொ­ருளில் நடை­பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
எமக்குள் முரண்­பா­டுகள் இருக்­கலாம். பிரச்­சி­னைகள் இருக்­கலாம். அவற்றை நாம் பேசித் தீர்த்­துக்­கொள்­ளலாம். வட­மா­காண முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களை வட மாகாண முத­ல­மைச்சர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்­ச­ருடன் பேசி த.தே. கூட்­ட­மைப்பு தீர்த்து வைக்கும் என்றும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது;
1990 ஆம் ஆண்டு வட மாகா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டனர். இதுவோர் பார­தூ­ர­மான விட­ய­மாகும். இது இடம்­பெற்­றி­ருக்­கவே கூடாது. இதுவோர் துன்­பியல் சம்­பவம் என்று கூறி எம்மால் முடிவு காண­மு­டி­யாது.
வெளி­யேற்­றப்­பட்ட மக்கள் நீண்­ட­கா­ல­மாக வெளி மாவட்­டங்­களில் வாழ்ந்து வரு­கி­றார்கள். அவர்­க­ளது மீள் குடி­யேற்ற விட­யங்­களில் சில பிரச்­சி­னைகள் தொடர்ந்து நில­வு­கின்­றன. அம்­மக்கள் மீண்டும் குடி­யேற்­றப்­பட வேண்டும் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. அவர்­க­ளது காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.
வெளி­யேற்­றப்­பட்ட மக்­களின் காணிப்­பி­ரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அவர்­க­ளது காணிகள் மீள ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும். அவர்கள் மீள் குடி­யே­று­வ­தற்­கான அனைத்து வச­தி­களும் செய்து கொடுக்­கப்­பட வேண்டும். இதில் வேறு­பட்ட கருத்­துகள் எம்­மிடம் இல்லை.
வடக்­கி­லி­ருந்து யாரால் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்­களோ அவர்கள் முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மல்ல, தமிழ் மக்­க­ளையும் வெளி­யேற்­றி­னார்கள். சந்­தி­ரிகா அம்­மை­யாரின் அர­சுக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்­துக்கும் இடை­யி­லான யுத்த நிறுத்த ஒப்­பந்தம் 1995 இல் முடி­வுக்கு வந்­ததும் வடக்கில் சில இரா­ணுவ முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அச்­சந்­தர்ப்­பத்தில் தமிழ் மக்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். வடக்கில் அனைத்து மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் தமி­ழர்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்கள். 
வெளி­யேற்­றப்­பட்ட தமிழ் பேசும் மக்கள் அனை­வரும் மீள் குடி­யேற்­றப்­பட வேண்டும். ஆனால் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கைள் திருப்­தி­க­ர­மாக இருக்­கி­றதா? என்­ப­துதான் பிரச்­சினை மீள்­கு­டி­யேற்ற மக்­க­ளுக்கு தொழில், கல்வி மற்றும் வாழ்­வா­தார வச­திகள் செய்து கொடுக்­கப்­பட வேண்டும்.
இது தொடர்பில் நாம் பாரா­ளு­மன்­றத்தில் பேசியும் மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கைகள் இன்னும் முற்றுப் பெற­வில்லை.
நான் இந்த நிகழ்­வுக்கு வரு­வ­தற்கு முன்பு யாழ். இரா­ணுவ தள­ப­தி­யுடன் பேசினேன். இரா­ணுவ வச­முள்ள மக்­க­ளது காணிகள் மீள கைய­ளிக்­கப்­பட வேண்டும் என அவ­ரிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் எனது கோரிக்­கையை ஏற்றுக் கொண்டார்.
இவற்­றுக்­கான ஒழுங்­கு­களைச் செய்­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்தார். ஆனால் இதில் சில தடைகள் இருப்­ப­தா­கவும் கூறினார்.
பலஸ்தீன் மக்கள் தமது சொந்த பூமியில் எத்­தனை வரு­ட­காலம் அகதி வாழ்க்கை வாழ்­கி­றார்கள். அவர்­க­ளது பூமியில் வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் அந்த வீடுகள் அவர்­க­ளுக்­காகக் கட்­டப்­ப­ட­வில்லை. மற்­ற­வர்­க­ளுக்­கா­கவே கட்­டப்­ப­டு­கி­றது. அந்த வீடு­களில் பலஸ்­தீ­னர்­க­ளுக்கு குடி­யேற முடி­யா­துள்­ளது. சமா­தா­ன­மொன்று இல்­லாமல் இருந்தால் இது போன்ற விட­யங்கள் நடை­பெறும்.
முஸ்­லிம்கள் உப்­பட தமிழ் மக்­களின் மீள் குடி­யேற்ற பிரச்­சி­னையை நாமெல்­லோரும் ஒன்று சேர்ந்தே தீர்க்க வேண்டும். இதற்­கென்று புனர்­வாழ்வு அமைச்­சொன்று இருக்­கி­றது. அமைச்சர் ஒரு­வரும் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். வடக்கில் மாகாண சபை என்று ஒன்­றி­ருக்­கி­றது. அதற்கு முத­ல­மைச்சர் ஒருவர் இருக்­கிறார். அவர்­க­ளுடன் நாம் பேச்­சு­வார்த்தை நடத்தி இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு பெற்­றுக்­கொள்ள வேண்டும்.
வட­மா­கா­ணத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் தொடர்பில் புனர்­வாழ்வு அமைச்­சு­டனும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரு­டனும் பேசி சில ஒழுங்­கு­களைச் செய்து குறை­களைத் தீர்த்துக் கொள்வோம். முஸ்­லிம்கள் சார்­பாக அர­சாங்­கத்தில் பல முஸ்லிம் அமைச்­சர்கள் இருக்­கி­றார்கள். கடந்த மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­திலும் இருந்­தார்கள்.
அர­சாங்­கங்­களில் தொட­ராக அமைச்­சுப்­ப­த­வி­களை வகிக்கும் முஸ்லிம் அமைச்­சர்­களால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க ஏன் முடி­யாமல் இருக்­கி­றது. இதனால் தான் 1949 இல் தந்தை செல்­வ­நா­யகம் சமஷ்டி ஆட்சி வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்­வைத்தார். அந்­தக்­கா­லப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் தமி­ழ­ரசுக் கட்­சியில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுள்­ளார்கள் என்­பதை மறுக்க முடி­யாது.
சமஷ்டி ஆட்சி முறை அன்று வந்­தி­ருந்தால் முஸ்லிம் தமிழ் மக்கள் ஒற்­று­மை­யாக வடக்­கையும் கிழக்­கையும் ஆட்சி செய்­தி­ருக்க முடியும். ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக இது நடை­பெ­ற­வில்லை. இதற்­காக நாம் நீண்­ட­கா­ல­மாக சாத்­வீக ரீதியில், அர­சியல் ரீதியில் போராட வேண்­டி­யி­ருக்­கி­றது
. இதற்­காக நாம் ஜன­நா­யக ரீதியில் போரா­டி­யுள்ளோம். ஆயுதம் ஏந்­தியும் போராட்டம் இடம்­பெற்­றுள்­ளது. இப்­போது ராஜ­தந்­திர ரீதியில் போராடி வரு­கிறோம்.
இந்த விட­யத்தில் முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் பங்­க­ளிப்பு குறை­வா­கவே உள்­ளது. முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதை நாம் மறக்க முடி­யாது. முஸ்லிம் மக்­களை நாம் புறக்­க­ணிக்க முடி­யாது.
முஸ்­லிம்கள் வட கிழக்­கிலும் நாடு பூரா­கவும் வாழ்­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்கள். எமது போராட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் தலை­வர்கள் உத­வ­வில்லை. ஜெனீ­வாவின் தீர்­மானம் அழுத்­த­மாக உள்­ளது. ஜெனீவா தீர்­மா­னத்­தின்­போது முஸ்லிம் அமைச்­சர்கள் மஹிந்த ராஜபக் ஷவுக்கு பிர­சாரம் செய்­தார்கள். அதை எம்மால் மறக்க முடி­யாது. இதற்­காக முஸ்லிம் மக்­களை உதா­சீனம் செய்­யவும் முடி­யாது.
நிறை­வேற்று அதி­காரம் எங்­க­ளிடம் இருக்க வேண்டும். அதைப்­பெ­று­வ­தற்கே புதிய அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட்­டுள்ளோம். கல்வி, காணி, சட்டம், சமயம் உட்­பட அனைத்து விட­யங்­க­ளிலும் அதி­காரம் எம்­மிடம் இருக்க வேண்டும். இந்த அதி­கா­ரங்கள் இருந்தால் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்க்க முடியும்.
வட கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யாக செயற்­பட வேண்டும். கிழக்கில் எமது ஆத­ர­வு­டனே முஸ்லிம் முத­ல­மைச்சர் இருக்­கிறார். சிங்­கள மக்­களை நான் அன்­பாக நேசிப்­பவன். இந்த நாட்டில் பெரும்­பான்­மை­யாக வாழும் சிங்­கள மக்­களை நேசிக்க வேண்டும். மதிக்க வேண்டும். அவர்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும்.
இன்று நாடு முன்­னேற்­றப்­பட வேண்­டு­மென திட்­டங்கள் போடப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் சிங்­கள மக்கள் எமது பகு­திக்குள் வரப்­போ­கி­றார்கள். கைத்­தொழில் முயற்­சிகள் மற்றும் அபி­வி­ருத்­திகள் ஊடாக இது நடை­பெ­றப்­போ­கி­றது. இதை நாம் எப்­படித் தாங்­கப்­போ­கிறோம். வட கிழக்கை தவிர ஏனைய பகு­தி­களில் சிங்­கள மொழி முத­லி­டத்தில் உள்­ளது.
வட கிழக்கில் தமிழ்­மொழி உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யாக இருக்க வேண்டும். அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். இதைத்தான் நாம் கேட்­கிறோம். இதை சிங்­க­ள­வர்கள் எதிர்க்­கி­றார்கள்.
வடக்கு கிழக்கு இணைப்பில் குறைகள் உள்­ளன என்றே அது தடுக்­கப்­பட்­டது. வடக்கு கிழக்கு இணைப்பு மீண்டும் ஏற்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பாடு. இந்த இணைப்பு தமிழ் முஸ்லிம் மக்கள் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் அமைய வேண்டும். வட கிழக்கில் நாம் பரம்­ப­ரை­யாக ஒற்­று­மை­யாக வாழ்ந்­தி­ருக்­கிறோம். எமக்குள் ஒற்­றுமை தேவை.
ஜே.ஆர். ஜெய­வர்­தன 1977 இல் எமக்கு அமைச்சுப் பதவி தரு­வ­தாகக் கூறினார். நாம் எவரும் ஏற்றுக் கொள்­ள­வில்லை. அதி­காரம் எமது மக்­களின் கையில் வர­வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.
எமக்குள் ஒற்­று­மை­யில்­லா­விட்டால் கிழக்கு மாகாணம் பறி­போய்­விடும். எமக்குள் முரண்­பா­டுகள் இருக்­கலாம். அவற்றை நாம் பேசித்­தீர்த்­துக்­கொள்­ளலாம். இரு சமூ­கமும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­வாறு நாம் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­ளலாம்.
புதிய அர­சியல் யாப்பில் கணி­ச­மான அதி­காரம் மற்றும் வளங்களும் மத்­திய அர­சாங்­கத்தின் சில அதி­கா­ரங்­களைத் தவிர அனைத்தும் அதிகாரப்பங்கீடு செய்யப்பட வேண்டும். இறைமையின் அடிப்படையில் நாம் ஆட்சி நடத்த வேண்டும்.
முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சருடன் பேசி உங்கள் பிரதிநிதிகளுடன் அவர்களைச் சந்தித்து பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போம்.
எவரையும் எவரும் ஏமாற்ற முடியாது. சிங்கள மக்களுக்கும் அநீதி செய்யக்கூடாது. அவர்களும் மகிழ்வுடன் வாழ வேண்டும். எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும். பதவிக்காக நாம் எமது கௌரவத்தை இழக்கக்கூடாது.
வட மாகாணத்தில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒவ்வொரு பிரதிநிதியை நியமித்து த.தே. கூட்டமைப்புடன் அவர்கள் வட மாகாண முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சரைச் சந்தித்து வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
இதற்கென வடமாகாண சபையில் ஒர் உதவிச்செயலாளரும் புனர்வாழ்வு அமைச்சில் ஒரு உதவிச் செயலாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

20 கருத்துரைகள்:

History Repeats again with same political ideology...!!!This time we are not fall in to pray Mr.sambanthan Ayya.!!!!

he knew well who have done why they call him to the meeting and he willing do same again

உத்தேச அரசியல் யாப்பில் மாகண எண்ணிக்கையை 4 அல்லது 5ஆக மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.அது தொடர்பாக கண்டிசிங்கள மக்களும் ஆர்வம்காட்டுவதாக தெரியவந்துள்ளது.
மத்திய,ஊவா,சப்ரகமூவ மாகாணங்களை இணைக்க கோரிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளது.
தெற்கு மேற்கு மாகாணங்களை இணைத்து தென்மேற்கு பிராந்தியமும்.
வடமேல்,வடமத்தி என்பவற்றை இணைத்து ராஜரட்ட பிரந்தியங்களை உருவாக்க சிங்கள தலைமைகள் விரும்புவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
பொலீஸ்,காணி,வெளிநாட்டு முதலீடு,நிதி அதிகாரங்களை வழங்க தற்போதைய மாகணங்கள் சிறியவையாக உள்ளதால் இவ்வாறான ஆலோசனை முன்வைக்கபட்டுள்ளது.எனவே முஸ்லீம்கள் தமிழருடன் இணைந்து செயற்பட்டால் நல்லது.மறுபடியும் முருங்கைமரம்ஏறினால் நட்டம் அவர்களுக்கே.

he had spoken in the favor of Tamils not for the Muslims.
Orchestrated Political move to make Mulsim umma fool.
Just for Example: If Sampthanthan(Honest) had past away then who will talk or care about Muslims.
Sampthan Ayya we Muslims respect you much and much but after you what will happen to us? just think the future of Muslims.
Nowadays North CM speaks against to Muslims and resettlement of us.We can't trust that double tongue person.

அப்படி என்றால்வடக்கையும் கிழக்கையும் வட மத்தியையும் ஒன்று சேர்த்தால் நல்லது,mr kuman kumar

குமரன் மீண்டும் முறுங்கை மரம் ஏரினால் நட்டத்தை என்பது உங்களுக்குத்தான் பொறுந்தும்.
கல்வியில் திறமைசாலிகளாக இருந்த Jaffna சிறுவர்களை இன்று கத்தி , கஞ்சா போன்றவற்றில் சிறந்தவர்களாக மாற காரணம் அந்த வீணாப்போன கிறிஸ்துவ பிரபாகரனின் மண்ணாசை எனபதை மறுக்கமுடியாது.

அரசுடன் பேசிபாரும்.நிலத்தொடர்பற்ற முஸ்லீம் ராட்சியம் வேனாமா,
சீ சீ அந்த பழம்புளிக்கும்

இறுதி உத்தேச அரசியல் யாப்பில் 4 பிராந்தியங்கள் உருவாக்கப்பட இருக்கின்றது. அந்த வகையில் வடக்கு பிராந்தியம் (வடக்கு, வடமேல், வாட மத்திய) , கிழக்கு பிராந்தியம் (கிழக்கு, ஊவா, மத்திய), மேட்கு பிராந்தியம் (மேல்,சப்ரகமுவ) மற்றும் தெட்கு (தென்) பிராந்தியம் என அவை அமையும்.

இதட்கு முஸ்லிம்களும் பூரண ஆதரவை தெரிவிக்க முன்வந்துள்ளனர்.
ஒப்பீட்டளவில் தமிழர்களை போல சிங்களவர்கள் முஸ்லிம்களிட்கு பாரிய அநியாயம் செய்யாமையாலும், பல இடங்களில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதாலும், எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தமிழர்களை நம்ப தயாராக இல்லாமையாலும் இந்த முடிவுடன் உடன்பட இருக்கின்றோம் என்ற விடயத்தை விக்னேஸ்வரனுக்கும், அவரை போன்ற இந வெறியர்களிட்கும் கூறிக்கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைகின்றோம்.

@ kamaaran..........

முருங்கை மரத்தில் நாமேறினால் உமெக்கென்ன???
நாங்கள் எவ்வளவுதான் நஷ்ட்டப்பட்டாலும் உம் (தமிழ்) சமூகத்தால் பட்ட நஷ்ட்டத்திற்கு ஈடாகாது தம்பி, எனவே எங்களது நஷ்டம் பற்றி நீரும் உம் தலைமைகளும் முதலை கண்ணீர் வடிக்க வாணாம்............

தமிழர் 98%வாழும் யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் ஆயுதக்குழு ஒன்று இயங்குவதை பொலீஸ்மா அதிபர் அண்றிமையில் குறிப்ட்டிருந்தார்.
வவுனியா மதினா நகரில் முஸ்லீம் ஆயுதக்குழு தமிழர்களை தாக்கிய செய்தி நேற்று முன்தினம் பரபரப்பாக பேசப்பட்டது.நடுநிலை ஊடகங்களை படிப்பவர்களுக்கு இவை தெரிந்திருக்கும்.
வடகிழக்கு எமது தாயகம் அதை யாருக்கும் விட்டு குடுக்க மாட்டோம்.மண் அற்றவர்கள்அவதுறுகளை அள்ளி வீசட்டும் வாய்வலிக்கூம்வரை.

உரிமைக்கா போராடிய இனமும் அரசும் பேசும்போது இடையில் நீங்கள் யார்?


இதட்கு முஸ்லிம்களும் பூரண ஆதரவை தெரிவிக்க முன்வந்துள்ளனர்.
ஒப்பீட்டளவில் தமிழர்களை போல சிங்களவர்கள் முஸ்லிம்களிட்கு பாரிய அநியாயம் செய்யாமையாலும், பல இடங்களில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதாலும்,
இந்த நூற்றாண்டின் காமடி

அரசே நாங்கள்தான்.
நாங்கள் நினைத்தால்தான் அரசு இயங்கும். நாங்கள் நினைத்தால் அரசும் மாறும். இதுதான் வரலாறு.

யாருடைய உரிமைக்காக போராடின நீங்க?????
மகிந்தகிட்ட காசு வாங்கிகிட்டு வாக்களிக்காம மக்களை தடுத்து, சொந்தக்கையால சூன்யம் செய்ததுதான் உங்கள் உரிமைக்கான போராட்டமா???

எந்தப்பாவமும் அறியாத அப்பாவிகளை இனச்சுத்திகரிப்பு செய்து அவர்களது உடமைகளை கொள்ளையடித்தமைதான் உங்கள் உருமைக்கான போராட்டமா????

தொழுகையில் ஈடுபட்ட அப்பாவிகளை பள்ளியில் சென்று கொன்று குவித்தமைதான் உங்கள் உரிமைக்கான போராட்டமா???

தமிழ் முஸ்லீம் சிங்கள தலைமைகளை பாகுபாடில்லாமல் கொன்று குவித்தமைதான் உங்கள் உரிமைக்கான போராட்டமா????

வெட்கமில்லாமல் உங்கள் உரிமைக்கான போராட்டம் பற்றி பேச வர வேண்டாம்.
எதோ போராடி வென்று அந்த வெற்றிக்கான பரிசாக அதிகாரப்பகிர்வு பெறுவது போன்றல்லவா இருக்கின்றது உங்களது நடவடிக்கை????

ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள் இவ்வளவு அநியாயம் நீங்கள் செய்தும் உங்களது உரிமையை நீங்கள் பெற்றுக்கொள்வதட்கு எந்த முஸ்லிம்களும் தடையாக இருக்கவில்லை. அவ்வாறு நாம் தடை விதித்தால் பின்னர் உங்களுக்கு புரியும் நாங்கள் யார் என்பது.

நாம் கூறுவது எல்லாம் தமிழர்களது உரிமை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். அதுவும் உங்களது போராட்டத்தை அடிப்படையாக வெய்த்தல்ல, போராட்டத்தின் அகோரத்தை மன்னித்தது விட்டுத்தான் (மறக்க முடியாது). ஒரு சமூகத்தின் உரிமையை மதிக்கின்ற மானுட பண்பாட்டின் பகரம்தான் உங்களது உருமைக்காக நாமும் குரல் கொடுக்கின்றோம், அரசும் சாதகத்தன்மையோடு அணுகுகின்றது (போராட்டத்தை அடிப்படையாக வெய்த்தல்ல).

ஆனால் எங்களது அரசியல் அதிகாரத்தையும் நாம் உங்களுக்கு தாரைவார்த்து தரவேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு மிகவும் அபத்தமானது. அதன் ஆபத்தை முஸ்லிம்கள் அறியமாட்டார்கள் என்று நீர் எதிர்பார்த்தால் அது உங்களது (உங்கள் தலைமைகளின்) மடமையாகும்.

முஸ்லிம்கள் யார் என்று இப்போதே கேட்க்கின்றிர்கள் பிறகு உங்களுடன் சேர்ந்தால் என்னவாகும்....

நாங்கள் யார் என்று உன் பாட்டியிடம் பதில் கேளும்.

ஆடு நனைத்தென்று ஓநாய் அழுத்திச்சாம் கி கிக் கி கி

அரசே நாங்கள்தான்.
நாங்கள் நினைத்தால்தான் அரசு இயங்கும். நாங்கள் நினைத்தால் அரசும் மாறும். இதுதான் வரலாறு.

யாருடைய உரிமைக்காக போராடின நீங்க?????
மகிந்தகிட்ட காசு வாங்கிகிட்டு வாக்களிக்காம மக்களை தடுத்து, சொந்தக்கையால சூன்யம் செய்ததுதான் உங்கள் உரிமைக்கான போராட்டமா???

எந்தப்பாவமும் அறியாத அப்பாவிகளை இனச்சுத்திகரிப்பு செய்து அவர்களது உடமைகளை கொள்ளையடித்தமைதான் உங்கள் உருமைக்கான போராட்டமா????

தொழுகையில் ஈடுபட்ட அப்பாவிகளை பள்ளியில் சென்று கொன்று குவித்தமைதான் உங்கள் உரிமைக்கான போராட்டமா???

தமிழ் முஸ்லீம் சிங்கள தலைமைகளை பாகுபாடில்லாமல் கொன்று குவித்தமைதான் உங்கள் உரிமைக்கான போராட்டமா????

வெட்கமில்லாமல் உங்கள் உரிமைக்கான போராட்டம் பற்றி பேச வர வேண்டாம்.
எதோ போராடி வென்று அந்த வெற்றிக்கான பரிசாக அதிகாரப்பகிர்வு பெறுவது போன்றல்லவா இருக்கின்றது உங்களது நடவடிக்கை????

ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள் இவ்வளவு அநியாயம் நீங்கள் செய்தும் உங்களது உரிமையை நீங்கள் பெற்றுக்கொள்வதட்கு எந்த முஸ்லிம்களும் தடையாக இருக்கவில்லை. அவ்வாறு நாம் தடை விதித்தால் பின்னர் உங்களுக்கு புரியும் நாங்கள் யார் என்பது.

நாம் கூறுவது எல்லாம் தமிழர்களது உரிமை அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான். அதுவும் உங்களது போராட்டத்தை அடிப்படையாக வெய்த்தல்ல, போராட்டத்தின் அகோரத்தை மன்னித்தது விட்டுத்தான் (மறக்க முடியாது). ஒரு சமூகத்தின் உரிமையை மதிக்கின்ற மானுட பண்பாட்டின் பகரம்தான் உங்களது உருமைக்காக நாமும் குரல் கொடுக்கின்றோம், அரசும் சாதகத்தன்மையோடு அணுகுகின்றது (போராட்டத்தை அடிப்படையாக வெய்த்தல்ல).

ஆனால் எங்களது அரசியல் அதிகாரத்தையும் நாம் உங்களுக்கு தாரைவார்த்து தரவேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு மிகவும் அபத்தமானது. அதன் ஆபத்தை முஸ்லிம்கள் அறியமாட்டார்கள் என்று நீர் எதிர்பார்த்தால் அது உங்களது (உங்கள் தலைமைகளின்) மடமையாகும்.

@Abdul, தயவுசெய்து நல்ல மனநல வைத்தியரிடம் ஒருக்கால் போங்கோ.

மாறி மாறி வரும் அரசுகளுடன் ஒட்டிக்கொண்டால் நீங்க அரசாங்கம.தீர்வரும் போதெல்லாம் நீங்க வந்து ஜோயின்ட் அடீப்பீங்க.
தமிழர்களுக்கு ஜுகாத் செய்த கொடுமைகள் எண்ணற்றவை. நீ எமக்கு உதவி செய்ய வேண்டாம் உவத்திரம் தரம ஒதுங்கு.

பாட்டியிடம் கேட்டம்.முஸ்லீம்கள் நம்பிக்கை துரேகிகளாம்.யாரை நம்பினாலும்உங்களை நம்ப கூடாதாம் சொல்லுறா,ஹீ.ஹீ

திருமண சட்டம் பறிபோக போகுது பிரதிநிதித்துவம் பறிபோகபோகுது.தங்கட அரசாங்கமாம் வந்திட்டார்.

@abdul உங்கள் அரசு ஐ.நா வில் பலஸ்தீனத்துக்கு ஆதரவான தீர்மானத்தை புறக்கணித்தது ஏனோ?? சில்லி ஃபாய்

Post a Comment